அபர்ணா மேல் கைவைத்த மாணவர்.. வலுக்கும் எதிர்ப்பு.. மஞ்சிமா கடுப்பு.. மன்னிப்பு கேட்ட மாணவன்.!

அபர்ணா மேல் கைவைத்த மாணவர்.. வலுக்கும் எதிர்ப்பு.. மஞ்சிமா கடுப்பு.. மன்னிப்பு கேட்ட மாணவன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

இவர் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

இவர் தற்போது ‘தங்கம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் கலந்து கொண்டார்.

அப்போது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவுக்கு பூங்கொடுத்து கொடுத்தார்.

அதனை பெற்றுக் கொள்ளும் போது திடீரென அந்த மாணவர் அபர்ணாவின் தோல் மீது கை வைத்தார்.. இதனால் தட்டி விட்டு விலகிச் சென்றார் அபர்ணா.

இதனையடுத்து அங்கு சலசலப்பு உண்டானது.

இதனால் மேடை ஏறி அந்த மாணவன் தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்தாகவும் விளக்கமளித்தார்.

ஆனாலும் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் நடிகையோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக் கொண்டே பின்வாங்கினார்.

இதனால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்து நடிகை மஞ்சிமா மோகன் ‘Unbelievable and disgusting’ என கோபத்துடன் கூறியுள்ளார்.

Student misbehaves with Aparna Balamurali; Manjima Mohan reacts

தனி ஒருவன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த ஜெயம் ரவி

தனி ஒருவன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கிய மிகவும் பாராட்டப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லரின் தொடர்ச்சி என்பதால் தனி ஒருவன் 2 மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

“தனி ஒருவன் 2 கண்டிப்பாக இயக்கப்படும். நானும் என் சகோதரனும் இப்போது பிஸியாக இருக்கிறோம்.

எங்கள் அட்டவணைகள் ஒத்திசைந்ததும், நாங்கள்அப்பணியைத் தொடங்குவோம். படத்தின் கதை அசாதாரணமாக உருவாகியுள்ளது.

ஆம், தனி ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது என்றார் ரவி.

Here’s what Jayam Ravi has to say about his role in Thani Oruvan 2!

மீண்டும் நாயகனாகும் கவுண்டமணி.; யோகிபாபு & 11 தயாரிப்பாளர்களுடன் கூட்டணி

மீண்டும் நாயகனாகும் கவுண்டமணி.; யோகிபாபு & 11 தயாரிப்பாளர்களுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் 2வது படம் ” பழனிச்சாமி வாத்தியார் ”

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி.

சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை.

தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால், R.K. சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு
தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.

Executive Producer & Pro – மணவை புவன்

தயாரிப்பு – மதுரை செல்வம்

இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Goundamani is hero again.; Yogibabu & 11 Producers joins the film

தனது பாலிவுட் படத்தின் பணியை மீண்டும் தொடங்கிய சமந்தா

தனது பாலிவுட் படத்தின் பணியை மீண்டும் தொடங்கிய சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தா உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு அவர் மும்பை விமான நிலையத்தில் வெள்ளை உடையில் காணப்பட்டார். வலுவாக மீண்டு வந்ததற்காக அவரது ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியடைந்தனர்.

தனது முழு வெள்ளை உடையில் அனைவரையும் முற்றிலும் திகைக்க வைத்தார். அவள் ஒரு வெள்ளை நிற பேன்ட்-சூட்டை அணிந்து, அதே நிறத்தில் ஒரு பிளேசர் அணிந்து தனது ஃபேஷன் விளையாட்டை அதிகரிக்க கருப்பு கண்ணாடிகளை அணிந்திருந்தார் மற்றும் எப்போதும் போல் அழகாக இருந்தார்.

கூடிய விரைவில் தனது பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Samantha’s indirect hint on resuming work for her Bollywood project

OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் மூன்று சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ”ஜெயிலர்’.

நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் சுனில், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தமன்னா ரஜினி உடன் இணைவார் என நாம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா இணைவதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி உடன் தமன்னா இணைவது இதுதான் முறை முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah is on board for Rajinikanth’s jailer

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இப்படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, கன்னட நடிகர் தனஞ்சயா மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதிர் ஸ்வர சாகரும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிக்க, தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் சாகர், படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்.

இறுதியாக இப்படம் விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Vikram Prabhu’s ‘Paayum Oli Nee Yenakku’ is released soon

More Articles
Follows