சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்..; சூப்பர் அப்டேட் கொடுத்த சுதா & ஜிவி.பிரகாஷ்

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்..; சூப்பர் அப்டேட் கொடுத்த சுதா & ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’.

இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.மேலும், ராதிகா மதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கும் அதே வேளையில், பாடல்கள் மற்றும் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரீமேக்கில் ஒரு பகுதியாக உள்ளார்.

இப்போது படத்திற்கான புதிய பாடல்களுடன் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கராவுடன் தான் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

GV Prakash is composing new songs for the Hindi remake of ‘Soorarai Pottru’

தமிழ் ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனாவின் ஸ்வீட் அட்வைஸ்

தமிழ் ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனாவின் ஸ்வீட் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஷ்மிகாவின் காரை ரசிகர்கள் பைக்கில் துரத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அழகான நடிகை கார் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு, சிறுவர்கள் ஹெல்மெட் அணிந்து தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதால் நெட்டிசன்கள் நெகிழ்ந்துள்ளனர்.

‘வாரிசு’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் நிலையில், ராஷ்மிகாவின் இரண்டாவது ஹிந்திப் படமான ‘மிஷன் மஜ்னு’ பத்து நாட்களுக்குப் பிறகு ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அவர் தற்போது ரன்பீர் கபூருடன் நடிக்கும் ‘அனிமல்’ படப்பிடிப்பில் இருக்கிறார்.

Rashmika Mandanna’s sweet advice to Tamil fans

கமல் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அரசு திட்டம் ஓ இதான் காரணமா.? அவர்கிட்ட நடக்குமா.?

கமல் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அரசு திட்டம் ஓ இதான் காரணமா.? அவர்கிட்ட நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ பாத யாத்திரையை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.

இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார ராகுல்.

அதன்படி டிசம்பர் 25ல் டெல்லியில் நடைபெற்ற யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

இந்தியா முழுவதும் இந்த யாத்திரை நடைபெற்று வந்த போதிலும் இதில் கலந்து கொள்ள சினிமா நடிகர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

ஏனென்றால் இது காங்கிரஸ் கட்சியின் யாத்திரை என்பதால் மத்திய பாஜக அரசை எதிர்த்து இதில் யாரும் கலந்து கொள்ள விரும்பவில்லை.

இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் தைரியமாக கலந்து கொண்டு பேசினார்.

இதனால் கமலின் வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் வருமான வரி பரிசோதனை நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்துள்ளன.

சினிமா உலகில் முறையாக நேர்மையாக கணக்கு காட்டி வரி செலுத்தி வருபவர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கமலுக்கு ஐடி ரெய்ட் பயமிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.

Government plan to conduct IT raid at Kamal’s house?

அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்த இயக்குனர் வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்த இயக்குனர் வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்திற்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காடுகளில் தேடப்படும் வாத்தியார் மனிதனை வேட்டையாடுவதையும், சூரியின் கீழ்நிலை கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அவரை எப்படிப் பிடிக்கிறது என்பதையும் படம் மையமாகக் கொண்டுள்ளது.

‘விடுதலை 2’ வாத்தியார் யார், எப்படி அவர் தப்பியோடிய குற்றவாளி என்பதை வெளிப்படுத்தும்.

இதன் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டுப்புற பாட்டு.. கானா & ஹிப் ஹாப்.. ஒப்பாரி.; 3 நாட்களில் ரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’

நாட்டுப்புற பாட்டு.. கானா & ஹிப் ஹாப்.. ஒப்பாரி.; 3 நாட்களில் ரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின்
நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 2022-கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 28-ஆம் தேதி சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் வைத்து பறையிசை மேள தாளங்களுடன தொடங்கவுள்ளது.

நிகழ்ச்சியின் முதல் நாளான டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது. 2வது நாளான 29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும் ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமான கானாப் பாடல்களும் இடம்பெற உள்ளது.

மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான 30ஆம் தேதி நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள் , விடுதலைக்கான எழுச்சிமிகு பாடல்கள் மேடையேற்றப் படுகின்றது. திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்களிசையை மக்களோடு கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.

நிகழ்ச்சிகளை காண கட்டணம் இல்லை.

மேலும் கீழே உள்ள டவுன் ஸ்க்ரிப்ட் என்ற வலைதள அமைப்பின் லிங்க் யை கிளிக் செய்வதன் மூலம் “கட்டணமில்லா” முன்பதிவை பெறுவது மற்றும் நிகழ்ச்சிக்கான முழு விபரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நாள் 01- நாட்டுப்புற பாடல்கள் & பழங்குடியினர் இசைகள்
townscript.com/e/margazhiyil-…

நாள் 02- கானா & ஹிப்- ஹாப்
townscript.com/e/margazhiyil-…

நாள் 03 – ஒப்பாரி & விடுதலை பாடல்கள் townscript.com/e/margazhiyil-…

வாருங்கள் !
மார்கழியில்
மக்களிசையை !
கொண்டாட தயாராவோம்..!

‘எனக்கு போட்டி நான் மட்டுமே…; விஜய்யின் பேச்சுக்கு விவரமான பதிலளித்த சீமான்

‘எனக்கு போட்டி நான் மட்டுமே…; விஜய்யின் பேச்சுக்கு விவரமான பதிலளித்த சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் விஜய்க்கு போட்டியாக அஜித் எனவும்.. அரசியலில் விஜய்க்கு போட்டியாக உதியநிதி என்றும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வந்தன.

மேலும் துணிவு படத்தை உதயநிதி வாங்கியதால் வாரிசு vs வாரிசு மோதல் என சித்தரிக்கப்பட்டு செய்திகள் பரவியது.

இதனிடையில் தான் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது.. “எனக்கு போட்டி நான் மட்டுமே..” என்று மறைமுகமாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானிடம் விஜய்யின் இந்த பேச்சு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு சீமான் பதில் அளிக்கையில்…

“தனக்குத்தானே பந்து போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். விஜய் அப்படி என்றால் தான் தனக்குத்தானே போட்டி என்று சொல்லிக் கொள்ள முடியும்.

அவரது சினிமா வசனம் என்று நினைத்து பேசி விட்டார்

எனக்கு போட்டி அவர்.. எனக்கு போட்டி இவர்… என்று யாரையாவது பெயரை சொல்லிக் குறிப்பிட்டால் அது வேறு விதமான பிரச்சினையில் முடியும்.

எனவே தான் முதிர்ச்சியாக எனக்கு நானே போட்டி என்று பேசி இருப்பார்”.

இவ்வாறு சீமான் பேசினார்.

More Articles
Follows