தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகர் சிவகுமாரின் மகனாக முதன் முதலில் அடையாளம் காணப்பட்டவர் சூர்யா.
அதன் பிறகு ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்ட சூர்யா ஒரு தயாரிப்பாளராகவும் மாறி தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வருகிறார்.
தற்போது ‘சூரரைப் போற்று’ ஹிந்தி பட ரீமேக்கை தயாரித்து வருகிறார்.
சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூகம் சார்ந்த சேவைகளில் இவரது அகரம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 5000+ மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா.
இவருக்கு நடிப்பின் நாயகன் என்ற பட்டத்துடன் நற்பணி நாயகன் என்ற பெயரும் உண்டு.
சூர்யாவை போல அவரது ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு சூரியா ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நலத்திட்டங்களுக்கும் தயாராகி வருகின்றனர்.
இன்று ஜூலை 21ல் பழனி உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை சூர்யா ரசிகர்கள் வழங்கினர்.
Suriya fans donated Cloth bags for public