கலைஞர் பேனா.. பிரதமர் சீமான்.. சூப்பர் ஸ்டார் மன்சூர்.. விஜய் அஜித்தை கலாய்க்கும் ‘அடியே’ வீடியோ

கலைஞர் பேனா.. பிரதமர் சீமான்.. சூப்பர் ஸ்டார் மன்சூர்.. விஜய் அஜித்தை கலாய்க்கும் ‘அடியே’ வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதத்திற்கு இரண்டு படம்.. மாதத்திற்கு ஒரு படம்.. இரண்டு மாதங்களுக்கு ஒரு படம்.. 6 மாதங்களுக்கு ஒரு படம்.. என படிப்படியாக தன் நடிப்பில் உருவாகும் படங்களில் ரிலீஸ்சை குறைத்துக் கொண்டார் ஜிவி பிரகாஷ்.

தற்போது இசை அமைப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவரது இசையில் வெளியான சமீபத்திய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அசுரன், சூரரைப் போற்று.. முதல் நேற்று வெளியான மார்க் ஆண்டனி பட டீசர் வரை ஜீவி பிரகாஷின் இசை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள ‘அடியே’ என்ற படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’.

இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, 96 புகழ் கௌரி கிஷன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

பட தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளரான பிரபா பிரேம்குமார்- ஏராளமான குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி அளித்திருக்கும் இவர், திரைப்படத்துறையின் மீதான ஆர்வத்தால் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘கிளாப்’ எனும் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது ‘அடியே’ படத்தின் மூலம் நேரடியாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பட்ஜெட் படைப்புகளையும் தயாரிக்கும் திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்…

” தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில் ‘அடியே’ திரைப்படம் தான் முதல் படைப்பு.

இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் ” என்றார்.

‘அடியே’ படத்தின் மோசன் போஸ்டரில்… இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை… ‘யோகன் அத்தியாயம் 1’ 150 நாள் போஸ்டர்.. ‘தல’ அஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில் 5வது முறையாக வென்றிருப்பது.

தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா.. விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார்..

சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0… கலைஞர் பேனா.. என மல்ட்டி வெர்ஸ் உலக கலாட்டாவை.. புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதனூடாக நாயகன் ஜீ வி பிரகாஷ் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Adiyae – Motion Poster

GV Prakash’s Adiyae movie Motion Poster relesaed

மாஸ்டருக்கு 500… லியோவுக்கு 2000..; விஜய் ரசிகர்களை ஆட்டி வைக்கும் லோகேஷ்

மாஸ்டருக்கு 500… லியோவுக்கு 2000..; விஜய் ரசிகர்களை ஆட்டி வைக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் சென்னையில் தொடங்க உள்ளது.

த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் சென்னையில் அடுத்த ஷெட்யூலில் விஜய்யுடன் இணைகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் அறிமுக பாடலை 2000 கலைஞர்களை வைத்து படமாக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்.

டப்பிங் பகுதிகளை முடித்த பிறகு பிரமாண்ட பாடலின் படமாக்கப்படும்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யின் அறிமுக பாடலை 500+ நடனக் கலைஞர்களுடன் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use 2000 dancers leo song shoot planned lokesh

PS2 Release : காசியில் கார்த்தி.. கண்ணாடி உடைப்பு.; வெற்றியில் ஜெயம் ரவி.!

PS2 Release : காசியில் கார்த்தி.. கண்ணாடி உடைப்பு.; வெற்றியில் ஜெயம் ரவி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்’ இன்று ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியானது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த படத்தை பிரமோஷன் செய்ய இதில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வந்தனர்.

இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களுடன் திரிஷா, விக்ரம் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.

இப்படத்தைப் பார்த்த பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கொண்டனர்.

மேலும் நடிகர் கார்த்தி சென்னையில் பிரபலமான காசி தியேட்டரில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்தார்.

நடிகர் கார்த்திக்கு அசோக் நகர் மேம்பாலத்தில் இருந்து பூக்கள் டிவி ரசிகர்கள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது

கார்த்தியை கண்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர்கள் அங்கும் இங்கு ஓட அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்தது.

இதனால் அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் சென்னையில் உள்ள பிரபலமான வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி படம் பார்த்தார். நடிகர்களை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் உள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரது ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

kasi theatre mirror broke in karthi fans

Kamal 234 UPDATE : த்ரிஷா – நயன்தாரா பத்தல பத்தல.; கமலுக்கு பாலிவுட் நடிகையும் வேணுமாம்.?!

Kamal 234 UPDATE : த்ரிஷா – நயன்தாரா பத்தல பத்தல.; கமலுக்கு பாலிவுட் நடிகையும் வேணுமாம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘KH 234’ என பெயரிடப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவும், த்ரிஷாவும் ஹீரோயினாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அவருடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘குரு’ படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன்

Vidya Balan will act in kamal haasans kh234 movie

OFFICIAL ‘பிச்சைக்காரன் 2’ டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

OFFICIAL ‘பிச்சைக்காரன் 2’ டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’, மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் நாளை ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமை வெளியாகவுள்ளது.

மேலும், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரன் 2

‘Pichaikkaran 2’ to release on this may 19

ஆந்திரா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாலையா ! முழு விவரம் இதோ !

ஆந்திரா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாலையா ! முழு விவரம் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான என்டிஆரின் 100வது ஆண்டு விழா இன்று (ஏப்ரல் 28) விஜயவாடாவில் நடைபெற உள்ளது.

விமானம் மூலம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் என்டிஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா வரவேற்றார்.

தலைவருக்கு பாலய்யா குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளிக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்கிறார்.

ஆடம்பரமான NTR100 நிகழ்வு இன்று மாலை 04.30 மணிக்கு தொடங்குகிறது.

Rajinikanth receives a grand welcome by top actor Balayya for the legendary NTR’s centenary event!

More Articles
Follows