தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்டம்பர் 15) வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று (20-07-2023) எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு எஸ்.ஜே.சூர்யா ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் டம்மி துப்பாக்கியின் குண்டுகள் முழங்க அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
SJ Suryah celebrates his birthday in mark antony shooting spot