தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்கள் வெளியாகும் நாளில் மற்ற படங்களை வெளியிடவே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.
இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்லலாம்.
மேலும் சமீபத்தில் கூட கபாலி டீசர் வெளியான நாள் அன்று அஜித்தின் பிறந்தாளும் சிம்பு படம் பற்றிய அறிவிப்பும் வெளியானது.
ஆனால் கபாலி செய்த ட்ரெண்டிங்கால் மற்றவை காணாமல் போனது.
இந்நிலையில், வருகிற ஜூன் 9ஆம் தேதி கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.
அதே நாளில், சிவகார்த்திகேயன் தன் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருப்பதாக அறிவித்து இருந்தார்.
ஆனால் கபாலி ஏற்படுத்திய பயத்தால், நாம் ஒதுங்கி கொள்வதே நல்லது என்று முடிவு எடுத்த, சிவகார்த்திகேயன் தனது பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டாராம்.