‘கபாலி’ வழியில் ‘ரெமோ’; கொண்டாடும் ரசிகர்கள்

‘கபாலி’ வழியில் ‘ரெமோ’; கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajini doll and remo sivakarthikeyan dollரஜினி நடித்த கபாலி படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எனவே கபாலி படத்தின் விளம்பரங்கள் கொடி கட்டி பறந்தன.

இதற்காக ரஜினி உருவம் போன்ற பொம்மை சிலைகளும் மார்கெட்டுக்கு வந்தன.

தற்போது ரெமோ படத்திற்கும் இதுபோன்ற பொம்மை சிலைகளை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்ட நர்ஸ் போன்ற பொம்மையை அழகாக வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலையை இரண்டு குழுந்தைகள் தனக்கு பரிசளித்துள்ளதாக சிவகார்த்திகேயன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலை மிரட்டியவர் தற்போது விஜய்யை மிரட்ட வருகிறார்.

விஷாலை மிரட்டியவர் தற்போது விஜய்யை மிரட்ட வருகிறார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsபரதன் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யை மிரட்டும் வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி இருவர் நடித்து வருகின்றனர்.

தற்போது மூன்றாவது வில்லனாக இணைந்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

இவர் ஏற்கெனவே, சசிகுமாரின் தாரை தப்பட்டை மற்றும் விஷாலின் மருது ஆகிய படங்களை மிரட்டல் வில்லனாக தோன்றியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

‘யு-டர்ன்’ நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத்தை வளைத்து போட்ட கௌதம்

‘யு-டர்ன்’ நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத்தை வளைத்து போட்ட கௌதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham karthik and Shraddha srinath‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் கண்ணன்.

இவர் அடுத்து கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

இதில் நாயகியாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘யு-டர்ன்’ படத்தில் நடித்த ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

நிவின் பாலி நடிப்பில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஆஷாஸ்ரீ தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

அஞ்சு ஸ்டார்ஸ் அப்புறம்தான்; அடுத்த படத்திற்கு தாவிய பாலா

அஞ்சு ஸ்டார்ஸ் அப்புறம்தான்; அடுத்த படத்திற்கு தாவிய பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaதாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக பாலா அறிவித்தார்.

அதில் ஆர்யா, விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, ராணா ஆகிய ஐந்து ஸ்டார்கள் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அது தொடங்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், குறுகிய காலத்தில் மற்றொரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இது பிராமினர் சமூகத்தை சேர்ந்த கதை என கூறப்படுகிறது.

இதில் புதுமுகம் ஒருவர் நாயகனாக நடிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

‘விஜய்-60’ டைட்டில் எப்படி இருக்கும் தெரியுமா?

‘விஜய்-60’ டைட்டில் எப்படி இருக்கும் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 60 stillsபெரும்பாலும் இளைய தளபதி விஜய் நடிக்கும் படங்களின் பெயர்கள் ஒரே வார்த்தையில் உள்ளன.

கிட்டதட்ட 15 வருடங்களாக குஷி தொடங்கி தெறி வரை இது தொடர்கிறது.

மேலும் இந்த பெயர்களில் ஒரு பவர் இருப்பது போன்ற உணர்வும் இருக்கும்

ஆனால் பரதன் இயக்கிய படத்திற்கு மட்டும் அழகிய தமிழ் மகன் என்று அழகான தமிழ் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது விஜய்யின் 60வது படத்தையும் பரதன்தான் இயக்கி வருகிறார்.

எனவே இப்படத்திற்கு அழகான தமிழ் பெயரைதான் வைக்க விரும்புகிறாராம்.

இதனால் இன்னும் சில தினங்களில் அந்த டைட்டிலை அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் இரண்டு டைட்டில்களை பற்றிய ரஜினி ஜீவா

அஜித்தின் இரண்டு டைட்டில்களை பற்றிய ரஜினி ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajith stillsவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் சந்தானம், சாமிநாதன், மனோகர் உள்ளிட்டவர்கள் சினிமாவுக்கு வந்துவிட்டனர்.

இதில் புகழ்பெற்ற ரஜினி ஜீவாவும் தற்போது நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ‘ஆரம்பமே அட்டகாசம்’ என பெயரிட்டுள்ளனர்.

ஆரம்பம் மற்றும் அட்டகாசம் என்ற பெயர்களில் அஜித் நடித்த படங்கள் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இதன் டீசரை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவிருக்கிறார் விஜய்சேதுபதி.

இப்படத்தை ரங்கா என்பவர் இயக்க, ஜெயா கே.தாஸ் இசையமைக்கிறார்,

‘ஸ்வாதி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் சார்பில் மாலதி வேலு, பத்தூள் சுக்குருல்லா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

More Articles
Follows