சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த அவார்ட்

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த அவார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sivakarthikeyanசினிமா பத்திரிகையாளர் சங்கம், தனது தீபாவளி மலரை வெளியிட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம், கலைப்புலி தானு, இயக்குனர்கள் பொன்ராம், விஜய் மில்டன், தாமிரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது…

இந்த மேடை நான் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல பயன்படுத்திக் கொள்கிறேன்.

என்னுடைய ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போது ரெமோ படத்திற்கு அவர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்.

அவரிடம் இருந்து பாராட்டு பெறுவதே எனக்கு அவார்ட்தான்.” என்றார்.

சிம்புவை வாழ்த்திய தனுஷ்-த்ரிஷா; நன்றி சொன்ன மஞ்சிமா.!

சிம்புவை வாழ்த்திய தனுஷ்-த்ரிஷா; நன்றி சொன்ன மஞ்சிமா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush trisha simbu manjima mohanகௌதம் மேனன் ஒரே நேரத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தையும், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் இயக்கி வந்தார்.

தற்போது சற்றுமுன் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வெளியானது.

வெளியான சில நிமிடங்களிலேயே படத்தின் ட்ரைலருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கௌதம்மேனன், சிம்பு, மஞ்சிமா ஆகியோருக்கு தனுஷ், த்ரிஷா உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

புருனே இளவரசியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்..?

புருனே இளவரசியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brunei Princess Ajithதமிழ்நாட்டில் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் அண்மையில் புருனே நாட்டின் இளவரசியும் இவருக்கு ரசிகையாக மாறிவிட்டாராம்.

மன்னராட்சி நடைபெறும் புருனோ நாட்டில், ஒரு விருந்து விழாவில் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்க, அப்பாடலை கேட்டு மெய் மறந்தாராம் இளவரசி.

மேலும் தனது மெய்க்காப்பாளர்களடம் அஜித்தை பற்றி விசாரித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது புத்தாண்டு விருந்துக்கு அஜித்தை அழைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

ரத்தினக் கம்பள வரவேற்பு, வைரங்கள் பதித்த சிம்மாசனம் என பிரமாண்ட வரவேற்புகள் தடபுடலா செய்யப்பட உள்ளதாம்.

ஆனால், அஜித் கலந்து கொள்வாரா? இளவரசியுடன் விருந்து உண்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

வடிவேலுவை வரவேற்கும் விஷால்-ஜிவி.பிரகாஷ்

வடிவேலுவை வரவேற்கும் விஷால்-ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu gvprakashநீ……ண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோ வேடத்தை விட்டு?, விஷாலின் கத்தி சண்டையில் காமெடி செய்து வருகிறார் வடிவேல்.

சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரியும் இணைந்துள்ளார்.

தற்போது மீண்டும் மற்றொரு படத்தில் காமெடி செய்யவுள்ளார் வடிவேலு.

‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இதில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் இப்படத்தை தயாரிக்கிறார்.

நேற்று ரஜினியின் ‘கபாலி’; இன்று விஜய்யின் ‘பைரவா’

நேற்று ரஜினியின் ‘கபாலி’; இன்று விஜய்யின் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay kabali bairavaaதமிழ் சினிமா தற்போது இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கலக்கி வருகிறது.

கபாலிக்கு உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு இந்திய சினிமாவையே ஆச்சரியமடைய வைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் கபாலிக்கு பிறகு பைரவா படத்தின் உரிமை பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

டெண்ட் கொட்டா நிறுவனம், 8K மைல்ஸ் மீடியா நிறுவனம் மற்றும் B&B எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பைரவாவின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம்.

தற்போது இப்படத்திற்காக விஜய், கீர்த்திசுரேஷ் இருவரும் சுவிட்சர்லாந்து நாட்டில் டூயட் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-தனுஷ் ரசிகர்களுக்கு இந்த ‘தீபாவளி’க்கு டபுள் ட்ரீட்

விஜய்-தனுஷ் ரசிகர்களுக்கு இந்த ‘தீபாவளி’க்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanushதனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

அதுபோல் விஜய் ரசிகர்களுக்கு பைரவா பட டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தும் தயாராகியுள்ளது.

கொடி படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளுக்காக தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் தியேட்டருக்கு வருகிற அக். 26ஆம் தேதி செல்கின்றனர்.

அன்றைய தினம் ரசிகர்களுக்காக வேலையில்லா பட்டதாரி படம் திரையிடப்படுகிறதாம்.

மேலும் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இப்படக்குழுவினர் செல்கின்றனர்.

அதுபோல் சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரில் தெறி படத்தின் 200வது நாள் வெற்றியை கொண்டாட தீபாவளி அன்று தெறி படம் காலை 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

More Articles
Follows