வேற்று கிரக வாசிகளை தடுக்கும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன்

வேற்று கிரக வாசிகளை தடுக்கும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanபொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24ஏஎம். ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இதற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

சயின்ஸ் பிக்சனாக உருவாகவுள்ள இப்படத்தில் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம்.

தளபதி 63-64 படங்களின் டைரக்டர்களை முடிவு செய்த விஜய்..?

தளபதி 63-64 படங்களின் டைரக்டர்களை முடிவு செய்த விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayமெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இதுவரை பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக தளபதி 62 என்று அழைக்கின்றனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்க கீர்த்திசுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தளபதி 63 மற்றும் 64 பட இயக்குனர்களை விஜய் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

தளபதி 63 படத்தை ஜெயம் மோகன்ராஜா இயக்கவுள்ளதாகவும் தளபதி 64 படத்தை ‘ஜில்லா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா-ஷ்யாம்-பிரசன்னா-சிம்ரன் இணைந்து நடித்துள்ள புறா பறக்குது

ஆர்யா-ஷ்யாம்-பிரசன்னா-சிம்ரன் இணைந்து நடித்துள்ள புறா பறக்குது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pura parakkuthu postersமறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி 4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார்.

மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்தவகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன்.

முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான்.

இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்ட இருக்கிறாராம் இலட்சுமி காந்தன்.

இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், VJ முரளி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்..

அது எதற்காக என்பது சஸ்பென்ஸ்..

இந்தப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் ;

தயாரிப்பாளர் : இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி

இசை : ஜெய் கிரிஷ்

ஒளிப்பதிவு : கார்த்திகேயன்

எடிட்டிங் : ரமேஷ் மணி

பாடலாசிரியர் : பிரியன்

நடனம் : தினேஷ், சோபி

சண்டை பயிற்சி : T. தியாகராஜன்

கலை : தோட்டாதரணி

ஒலிப்பதிவு : லட்சுமி நாராயணன்

மக்கள் தொடர்பு : செல்வரகு

தயாரிப்பு மேற்பார்வை : முருகபூபதி

அஜித்-நயன்தாராவின் விசுவாசத்தில் தேசிய விருது பெற்ற நடிகர்

அஜித்-நயன்தாராவின் விசுவாசத்தில் தேசிய விருது பெற்ற நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thambi Ramaiahவிவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தல் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க சிவா இயக்கவிருக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் தம்பி ராமையா இணைந்திருக்கிறார்.

இவர் அஜித்துன் வீரம், வேதாளம் படங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் மைனா படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பிரச்சினைக்கு தீர்வு: நம்ப மறுத்த விவேக் ஓபராய்; சாதித்து காட்டிய ஆர்கே!

உலக பிரச்சினைக்கு தீர்வு: நம்ப மறுத்த விவேக் ஓபராய்; சாதித்து காட்டிய ஆர்கே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Vivek Oberoi and RKay launched VCare VIP Hair Color Shampoo

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக… தயாரிப்பாளராக…. அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே..

இந்த நிகழ்ச்சியில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும்போது,

“வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம்.

எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.

அந்தவகையில் வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்துகிறோம்.

உடலின் எந்தப்பகுதியிலும் உள்ள நரைமுடிகளுக்கு இதை எளிதாக பயன்படுத்தமுடியும்.

அதனால் இனி டை என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை.. ஷாம்பூ மட்டும் தான்” என்றார் பெருமையுடன்

பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது,

“ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.

ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை..

நிச்சயம் ஆர்கேவின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை” என கூறினார்.

நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது,

“இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும்,

இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும்,

தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.

ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான்.

முடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை..

அதனால் தான் அவன் தன்னுடைய நரைமுடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான்.

அந்தவகையில் நடிகர் ஆர்கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன்..

காரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்..?

ஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே.

நான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன்..

அதில் எனக்கும் ஆர்கேவுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன்.. இப்போது சொல்கிறேன்..

இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.. அந்தளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது..” என்றார்.

இந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசியதாவது,

“அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான்.. அதேபோலத்தான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலைமுடிதான்.. ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்கு கூட நரை விழுந்துவிடுகிறது.

இன்று பலரும் டை அடிப்பதற்காகப் படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.. டை அடிக்கும்போது கறை படியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை.. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப்படவில்லை.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போல இதை பயன்படுத்த முடியும்.. சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன..

ஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது.

தற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார்.

அவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

காரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா? என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர்.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்..

இதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.

டை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும்.

கிளவுஸ் கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட்… மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்.

ஒரு நடிகர் .. ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.

இந்தியாவில் உள்ள 13௦ கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள்.. இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 5௦௦ கோடியைத் தாண்டும்.. அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம். ” என்றார் ஆர்கே.

விழாவினை விகடன்.காம் தொகுப்பாளினி தீப்தி தொகுத்து வழங்கினார்.

Actors Vivek Oberoi and RKay launched VCare VIP Hair Color Shampoo

GM Modular அளிக்கும் உயர்தர அனுபவம்… : நடிகர் சுனில் ஷெட்டி

GM Modular அளிக்கும் உயர்தர அனுபவம்… : நடிகர் சுனில் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GM brings the ultimate luxury experience ever says Suniel Shettyபல ஆண்டுகளாகவே ஸ்விட்சுகள் (Switches) மற்றும் அவை தொடர்பான வீட்டு உபகரணங்களைத் தயாரித்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் – GM Modular! தர மேம்பாடே தங்களது தாரக மந்திரமாக நினைத்துச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமிது!

JITO CONNECT 2018 நிகழ்வின் போது பொலிவுடன் கூடிய புதியதொரு பொருள் அட்டவணையை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்! புதிய பரிமாணங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கில் அந்நிறுவனத்தின் புதியதான அறிமுகப் பொருட்கள் அணிவகுத்து நிற்கும்! ஸ்மார்ட் ஸ்விட்ச்கள், மெல்லிய மிருதுவான ஸ்விட்ச்கள், ரிமோட் கன்ட்ரோல் மற்றும் Wi-Fi ஸ்விட்ச்கள், மேல்நிலை ஆட்டோமேஷன் அமைப்புகள், Bluetooth சம்மந்தப்பட்ட கேளிக்கை வழங்கவல்ல i-Dock போன்றவையும் அணிவகுத்து நிற்கும்!

சக்தியை (Energy) சேமிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவும் வகை வகையான LED விளக்குகளும் அதில் அடங்கும்!

Austria-வைச் சேர்ந்த நிறுவனமான Swarovski, USA-வின் Disney தொடர்பில் உள்ள நிறுவனம், GM Modular.

ஸ்விட்ச் ப்ளேட்டுகள் இரவு நேர விளக்கு வகைகள் மற்றும் காண்போரைக் கவரவல்ல புதுமை நல்கும் பொருள் வகைகளும் இவர்களது தயாரிப்புப் பட்டியலில் அடங்கும்!

பெல்ஜியத்தின் KNX Intelligent Building Control System த்தோடும் இந்நிறுவனம் தொழில் ரீதியான தோழமை கொண்டுள்ளது!

உலக அளவில், சக்தி (Energy) சேமிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடு ஆகிய அம்சங்களிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது, GM Modular நிறுவனம்.

இத்துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்நிறுவனம், தரம் நிறைந்த ஸ்விட்ச்கள், LED விளக்கு உபகரணங்கள், எலக்ட்ரிகல் உபகரணங்கள் Modular LED Copper மற்றும் Aluminium ஒயர்கள், கேபிள்கள் என பலவகைப் பொருட்களையும் பல தரப்பட்ட இடங்களிலும், தொழிலகங்களிலும், மால்களிலும், மல்ட்டிப்ளக்ஸ்களிலும், மற்றும் வீடுகளிலும் நிறுவியுள்ளது. தரம் தவிர பாதுகாப்பும் கூட இந்நிறுவனத்தின் தாரக மந்திரம் தான்!

‘தொழில்நுட்ப மேம்பாடே எங்களது நிறுவனத்தின் நிரந்திர இலக்கு!’ என்கிறார் திரு. ரமேஷ் ஜெயின், GM Modular நிறுவனத்தின் சேர்மன்.

‘பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி (Suniel Shetty), நமது நிறுவனத்தின் பிராண்ட் தூதராகச் செயல்படுவார்’ என்கிறார் திரு. ஜெயந்த் ஜெயின் CEO. ‘நடிகர், தொழில் மற்றும் விளையாட்டு ஆர்வலரான அவர் தான் இதற்குப் பொருத்தமானவர்’ என்கிறார் ஜெயந்த்.

‘GM நிறுவனத்தின் பிராண்ட் தூதராகச் செயல்படுவதில் மகிழ்ச்சி! இந்நிறுவனத்தின் செயல்முறைகள் பற்றி நன்கு அறிவேன்! இவர்களது தயாரிப்புகள் உன்னதமானவை; அனைத்து சாராருக்கும் உகந்தவை!’ என்கிறார் சுனில்

GM brings the ultimate luxury experience ever says Suniel Shetty

gm modular

More Articles
Follows