மீண்டும் வில்லனாகும் சத்யராஜ் படத்திற்கு இசையமைக்கும் ‘பீஸ்ட்’ பாடலாசிரியர்

மீண்டும் வில்லனாகும் சத்யராஜ் படத்திற்கு இசையமைக்கும் ‘பீஸ்ட்’ பாடலாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

அங்காரகன்

இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

தன்னுடைய ஆரம்ப கால படங்களில் வில்லனாக நடித்து பின்னர் தான் கதாநாயகனாக வளர்ந்தார் சத்யராஜ். தற்போது மீண்டும் வில்லனாக களம் இறங்கியுள்ளார்.

மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அங்காரகன்

சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் வரையில் தயாராகி வருகிறது என கூறியுள்ளார் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி

அங்காரகன்

*தொழில்நுட்பக் குழுவினர் விபரம்*

ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு

திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்) ; ஸ்ரீபதி

ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்

வசனம் ; கருந்தேள் ராஜேஷ்

படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன்

இசை இயக்குநர்: கு. கார்த்திக்
சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன்

நடனம் ; வாசு நவநீதன்

கலை இயக்குனர் ; கே மதன்

நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி

தயாரிப்பு வடிவமைப்பு ; L. விவேக் (Primerose Entertainment)

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Sathyaraj as terrorizing police officer in Angaaragan

புத்தாண்டு விருந்தளிக்க வரும் த்ரிஷா – ஏஆர்.முருகதாஸ்.; லைக்கா அறிவிப்பு

புத்தாண்டு விருந்தளிக்க வரும் த்ரிஷா – ஏஆர்.முருகதாஸ்.; லைக்கா அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா.

இவர் பெரும்பாலும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர படத்தில் மாறுப்பட்ட நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார் த்ரிஷா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த அறிவிப்புடன் திரிஷாவின் ஆக்ஷன் நிறைந்த அதிரடியான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது லைக்கா.

தற்போது இது வைரலாகி வருகிறது.

Trishas Raangi movie release date is here

‘வாரிசு’ முதலில் வரட்டும்.. அப்புறம்தான் ‘துணிவு’..; தனஞ்செயன் ஓபன் டாக்

‘வாரிசு’ முதலில் வரட்டும்.. அப்புறம்தான் ‘துணிவு’..; தனஞ்செயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என அறியப்பட்டவர் தனஞ்செயன்.

ஒரு படத்தை ரிலீஸ் செய்ய இவர் மேற்கொள்ளும் டிஜிட்டல் ப்ரோமோஷன் சினிமா உலகில் பிரபலம்.

மேலும் இவர் BOFTA என்ற சினிமா பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்களின் ரிலீஸ் குறித்து பேசி உள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

ஒரே நாளில் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ரிலீஸ் ஆனால் அது ரசிகர்களுக்கு மட்டும்தான் போட்டியாக பார்க்கப்படும். இதனால் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான தொகை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது்

எனவே ‘வாரிசு’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்துவிட்டு ‘துணிவு’ படத்தை 2 வாரங்களுக்கு பிறகு ஜனவரி 26 குடியரசு தின சமயத்தில் வெளியிடலாம்.

அப்படி வெளியானால் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும். அனைத்து தரப்பினரும் இரண்டு படங்களையும் பார்ப்பார்கள். இதனால் 2 தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும்” என தெரிவித்துள்ளார் தனஞ்செயன்.

Dhananjayan open talk about Varisu and Thunivu release

புதிய படத்திற்காக விதார்த் – அர்ஜுனன் – கிருஷா க்ரூப் கூட்டணி

புதிய படத்திற்காக விதார்த் – அர்ஜுனன் – கிருஷா க்ரூப் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டூடியோ ஜாக்கி என்டர்டெயின்மென்ட் ப்ரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தங்களது புதிய படைப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய படத்தில் நாயகனாக விதார்த் நடிக்க முக்கிய வேடத்தில் அர்ஜுனன் நடிக்கிறார்.

நாயகியாக கிருஷா குரூப் நடிக்கிறார். இந்த படத்தை கிருஷ் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

விதார்த்

சாய் பாஸ்கர் இசையமைக்க விவேக் நிர்மல் ஒளிப்பதிவு செய்கிறார்்

கலை இயக்குனராக சுரேஷ் கல்லேரி பணிபுரிய ராஜ்குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விதார்த்

Viddharth and Krisha Kurup joins hands for new project

——-

StudioJockey Entertainment Production Number #1

Starring Viddharth, Arjunan and Krisha Kurup

Produced and Directed by Krish

DOP – Vivek Nirmal FJ
Music – Sai Bhaskar
Editor – Rajkumar
Art – Suresh Kalleri
Costumes – Keerthika
Stunt – Nathan Lee
Dialogues – Selva Ganapathi
Executive Producer – Vijay Raghu
Publicity Design – 8B Studio
Post Production – Vasanth Studios
PRO – Nikil Murukan

கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்…

கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் சணல் ஆமன்.

ஜப்பான் படத்தில் கார்த்தி உடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக, மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘மாலிக்’ படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்த சணல் ஆமன்.

மேலும், சணல் ஆமன் கார்த்தியுடன் இணைந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sanal Aman Joined Karthi’s ‘Japan’

‘மௌனராகம்’ – ‘ஈரமான ரோஜாவே’ இயக்குனர் தாய் செல்வம் காலமானார்

‘மௌனராகம்’ – ‘ஈரமான ரோஜாவே’ இயக்குனர் தாய் செல்வம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களும் உருவெடுத்து வருகின்றன. சினிமா நடிகர் நடிகைகளுக்கு உள்ளது போல் சின்னத்திரை நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ரசிகர் வட்டம் பெருகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல டிவி சீரியல் இயக்குனர் தாய் செல்வம் என்பவர் இன்று காலமானார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல டிவி சீரியல்களை இயக்கியுள்ளார்.

காத்து கருப்பு, தாயுமானவன், மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

இவரது மரணம் குறித்து விஜய் டிவி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

TV Serial Director Thai Selvam passed away

———

உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..

#RIPDirectorThaiSelvam
#KaathuKaruppu #Thaayumaanavan
#KalyanamMudhalKaadhalVarai
#MounaRaagam Season 1
#NaamIruvarNamakkuIruvar
#PaavamGanesan
#EeramaanaRojaave Season 2

More Articles
Follows