சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணையும் படத்தலைப்பு

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணையும் படத்தலைப்பு

velaikkaran movie stillsஇன்று பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதற்கு ரசிகர்கள் முதல் திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளனர்.

‘விஜய்-அஜித் கொடுக்காததை சைவம் படம் கொடுத்தது’ – ஏஎல்.அழகப்பன்

‘விஜய்-அஜித் கொடுக்காததை சைவம் படம் கொடுத்தது’ – ஏஎல்.அழகப்பன்

Ajith vijay AL Alagappanஜெயக்கொடி பிக்சர்ஸ் தயாரிப்பில், பிஆர். ரவி இயக்கியுள்ள படம் உயிர்க்கொடி.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஏ.எல். அழகப்பன், தேனப்பன், விஜயமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசும்போது…

இன்றைய திரையுலகை சின்ன பட்ஜெட் படங்களே காப்பாற்றி வருகிறது. இதை சின்ன படங்கள் என்று நாம் அறிமுகப்படுத்த கூடாது.

ஏனென்றால் இதுபோன்ற படங்களே நமக்கு பெருமை சேர்க்கிறது.

காக்கா முட்டை, சைவம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தன.

விஜய், அஜித் படங்கள் கொடுக்காத பெருமையை சைவம் படம் பெற்றுத் தந்தது” என்றார்.

இவரின் மகன் இயக்குனர் விஜய் அவர்கள் அஜித்தின் கிரீடம் மற்றும் விஜய்யின் தலைவா படங்களை இயக்கியிருந்தார்.

ஆனால் அவர் இயக்கிய சைவம் படம் தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Producer AL Alagappan speech about Ajith and Vijay

தனுஷ் பாட்டு பாடிய ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை

தனுஷ் பாட்டு பாடிய ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை

Dhanush Gayathri Raguramபிரபல நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் அவர்கள் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் வசந்த் என்பவர் நாயகனாக நடிக்க, காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

அச்சு ராஜமணி இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இப்படத்தின் கதைக்களம் ஆனது பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்கள்தானாம்.

கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும்,உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. இதன் அழுகுரல் உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும்.

ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் யாதுமாகி நின்றாள். பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.

இந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள்.

ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.

தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது யாதுமாகி நின்றாள்.

Yaadhumaagi Nindrai movie story updates

நள்ளிரவிலும் நண்பகலிலும் அசத்தப்போகும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நள்ளிரவிலும் நண்பகலிலும் அசத்தப்போகும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

sivakarthikeyanநாளை பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதற்காக அன்றைய தினம் தொடங்கும் நள்ளிரவு சரியாக 12 மணி முதல் தங்களது கொண்டாடங்களை இணையங்களில் ஆரம்பிக்க உள்ளனர் இவரது ரசிகர்கள்.

இந்நிலையில் நாளை நண்பகல் 12.30 மணியளவில் சிவகார்த்திகேயனின் 11வது படத்தின் தலைப்பை வெளியிடவிருக்கிறார்களாம்.

இதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் படத்தலைப்பு பற்றிய அறிவிப்பையும் கொண்டாட தயாராகி விட்டனர்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SK 11 movie title will be released on Sivakarthikeyans birthday

24AM STUDIOS™ ‏@24AMSTUDIOS 6h6 hours ago
our director @jayam_mohanraja will officially announce d TITLE of our Production No:2 tmro 12:30pm. B’day gift 2 all @Siva_Kartikeyan fans

விஜய்சேதுபதி-கௌதம் கார்த்திக் படத்தில் ‘விஐபி’ நடிகை

விஜய்சேதுபதி-கௌதம் கார்த்திக் படத்தில் ‘விஐபி’ நடிகை

nikiஅறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்க, அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் புதிய படத்தை தயாரிக்கிறது.

இதில் விஜய்சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

கடந்த 10 நாட்களாக இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதில் நாயகியாக பிரபல நடிகை நிஹாரிகா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம் என்றாலும், ‘ஒக மனசு’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தவர் இவர்.

மேலும் இவர் தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபுவின் மகள் ஆவார். அதாவது நடிகர் சிரஞ்சீவிக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Niharika joins hands with Vijay Sethupathi and Gautham Karthik movie

ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்-ரஞ்சித்

ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்-ரஞ்சித்

Rajini Dhanush Ranjithரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஷங்கரின் 2.0 படத்திலும் நடித்தார் ரஜினிகாந்த்.

இதனிடையில் கபாலி வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.

தற்போது 2.0 படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை ஏப்ரலில் முழுவதுமாக முடித்துவிட்டு, மே மாதம் முதல் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருவதால், விரைவில் கலைஞர்களின் விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Dhanush and Ranjith waiting for Rajini to start shooting

More Articles
Follows