தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்கிய பேச்சு திரையுலகில் பெரும் பஞ்சாயத்தை உருவாக்கிவிட்டது.
இதனிடையில் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி கால்ஷீட் தர மறுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் ஞானவேல்ராஜாவிடம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் சிவகார்த்திகேயன் தரப்பு ஒப்புக் கொண்டது.
இந்நிலையில் மீண்டும் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சிவா
இதற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஃபெப்சி அமைப்பைக் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் பல சிக்கல்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.