உங்க கிரிமினல் தனத்தை வெளியே சொல்லட்டுமா..? ஞானவேல் ராஜாவுக்கு எதிராக SR பிரபாகரன்

உங்க கிரிமினல் தனத்தை வெளியே சொல்லட்டுமா..? ஞானவேல் ராஜாவுக்கு எதிராக SR பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓயாது அலைகள்….

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி….

*அடித்த புயலில் ஒரு உண்மை செத்து விடக்கூடாது என்பதற்காக – இந்த கடிதம்*

இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது – நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி – அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால், அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல – முன்னால் நிற்கிறது.

அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள் – எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட படைப்பாளி, என்று உலகறிய செய்திருக்கிறது.

‘’மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன்‘’ – இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை – இன்னொரு பாரதிராஜா – வாக ஏற்றுக்கொள்ள எனத் தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி

*உண்மை என்று ஏதோதோ பேசினீர்களே*

*இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிகட்டா?*

ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே – *அதை பற்றி பேசுவோமா ? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?*

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு – பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு – எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ – அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை – அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து – இந்த பிரச்சனையை – நீங்கள் முடித்து கொள்வதுதான்,

அதுவரை…!

*ஓயாது அலைகள்*

#StandWithAmeer

இயக்குனர்
*S.R.பிரபாகரன்*

S.R.பிரபாகரன்

Director SR Prabakaran statement against Gnanavelraja

விஜயகாந்தை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள்..; பிரேமலதாவிற்கு இயக்குனர் பாண்டியராஜ் கோரிக்கை

விஜயகாந்தை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள்..; பிரேமலதாவிற்கு இயக்குனர் பாண்டியராஜ் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

தனது பிறந்த நாளில் அவர் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்திப்பது வழக்கம்.

அப்படி சந்திக்கும்போதெல்லாம் விஜயகாந்த் வீல் சேரில் வருவதும் அவர் அமர்ந்திருப்பதையும் பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

எங்களால் எங்கள் கேப்டனை இப்படி பார்க்க முடியவில்லை என பலரும் சொல்வதை நாம் பார்த்து இருக்கிறோம்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.்அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அவரைப் பார்த்தாலே தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் ஆனார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்வானார். முன்னதாக இந்த பதவியில் விஜயகாந்த் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரு பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில்…

“விஜயகாந்துக்கு தற்போது முழு ஓய்வு தேவை.. அவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.. நாங்கள் நேசித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

Dont bring Vijayakanth like this says Pandiraj

பறக்கும் விமானத்தில் ‘டங்கி’ பாட்டு..; வேற லெவல் குஷியில் ஷாரூக் ரசிகர்கள்

பறக்கும் விமானத்தில் ‘டங்கி’ பாட்டு..; வேற லெவல் குஷியில் ஷாரூக் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம் குறித்த அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை உயரத்தி வருகிறார்கள்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க, நெருங்க ரசிகர்களின் உற்சாகம் எல்லைக்கடந்து வருகிறது. முழு தேசமும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஷாருக்கான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை, அவர்கள் டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை கொண்டாடும் இந்த வீடியோ அதற்கு சான்றாகும்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், SRK ரசிகர் மன்றம், SRK யுனிவர்ஸ் ரசிகர்கள், டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலுக்கு, விமானத்தில் நடனமாடுவதைக் காணலாம், SRK வின் அதே நடன அசைவுகளுடன் மும்பை பார்க்கில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான விமான செட்டில் அவர்கள் உற்ச்காகமாக நடனமாடுகிறார்கள். ரசிகர்கள் SRK மீதான தங்கள் தீவிரமான அன்பை எட்டுதிக்கும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C0tFPsZrYG8/?igshid=MzRlODBiNWFlZA==

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

Dunki songs in flying flight Shahrukh fans celebrates

Life இருக்கு Drugs எதுக்கு.? Ai டெக்னாலஜியில் ஜிப்ரான் இசை

Life இருக்கு Drugs எதுக்கு.? Ai டெக்னாலஜியில் ஜிப்ரான் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போதைப் பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, எங்கள் சமீபத்திய திட்டமான ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதுக்கு’ என்ற பாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த இசை முயற்சியை வைசாக் எழுதி, பாடியுள்ளார் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் இந்தப் பாடல் நோக்கமாக கொண்டுள்ளது.

போதைப் பொருள் மூலம் நடக்கும் குற்றங்களைத் குறைக்கவும் சமூகத்தின் பாதுகாப்பை வளர்ப்பதிலும் தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறையின் பங்கு (டிஎன் சிஐடி) போற்றுதலுக்கு உரியது.

சமூகத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த முயற்சியை TN CIDக்கு மிகுந்த மரியாதையுடன் அர்ப்பணிக்கிறோம்.

‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதுக்கு’ என்பது வெறும் பாடல் என்பதையும் தாண்டி, இதனை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உணர்ச்சிமிக்க அழைப்பு.

அழுத்தமான பாடல் வரிகள், உற்சாகமூட்டும் இசை மற்றும் ஏஐ அனிமேஷனைப்
பயன்படுத்தி புதிய அணுகுமுறையில், போதைப்பொருள் விளைவிக்கும் தீங்கைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்கிறோம்.

இந்தப் பாடல் மூலம் உரையாடல்களைத் தொடங்குவதும், இதன் நோக்கத்தை செயல்படுத்த வைப்பதும், இறுதியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதே எங்கள் குறிக்கோள்.

இசையின் சக்தி மற்றும் ஏஐ அனிமேஷனின் இந்த புதுமையான பயன்பாடு மூலம் அதிக அளவிலான பார்வையாளர்களை இந்தப் பாடல் சென்றடைந்து நம்பிக்கை தரும் செய்தியை வழங்குவோம் என்று நம்புகிறோம்.

எதிர்கால தலைமுறையினருக்கு போதைப் பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் கைகோர்ப்போம்.

Life இருக்கு Drugs எதுக்கு

Life Irukku Drugs Edharkku Ghibran music album in Ai technology

‘மௌனராகம்’ சந்திரமௌலியை நினைவிருக்கா.? நடிகர் இயக்குனர் சங்கரன் காலமானார்

‘மௌனராகம்’ சந்திரமௌலியை நினைவிருக்கா.? நடிகர் இயக்குனர் சங்கரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தூண்டில் மீன்’ மற்றும் ‘தேன் சிந்துதே வானம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர் சங்கரன்.

இவர் வயது மூப்பு காரணமாக இன்று டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.

இயக்கம் மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக ‘மௌன ராகம்’ படத்தில் ரேவதி தந்தையாக நடித்திருப்பார்.

ஒரு காட்சியில் சந்திர மௌலி என இவரை அழைப்பார் நடிகர் கார்த்திக். அந்த காட்சி படு பிரபலம்.

ஆர் சங்கரன் என்பவரிடம் தான் பாரதிராஜா இணை இயக்குனராக பணியாற்றினார். இந்த நிலையில் தனது குரு சங்கரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் இயக்குர் இமயம் பாரதிராஜா.

மேலும் திரையுலகினர் பலரும் சங்கரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Actor Sankaran passes away

Ra.sankaran address
C 4, Thirumala Apartment
No.36, Venkatraman Street
T.Nagar
Chennai 600017

Son Anand; +91 44-28150502

Funeral tomorrow morning

வளர்ச்சியில்லாத கிராமம்.?; இளையராஜா இசையில் இணைந்த சந்தோஷ் – ரவீனாரவி

வளர்ச்சியில்லாத கிராமம்.?; இளையராஜா இசையில் இணைந்த சந்தோஷ் – ரவீனாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ்K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To – Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும்.

*1962 லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா?*

“வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது.

மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவம் மேற்கொண்ட இத்திரைப்படம் பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்கள் அடங்கிய இத்திரைப்படத்தில், 2017 – இல் தேசிய விருது வென்ற To – Let திரைப்படத்தில் நடித்த சந்தோஷ் நம்பிராஜன் நடித்திருக்கிறார்.

மேலும் லவ் டுடே, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்த ரவீனா ரவி இத்திரைப்படத்தின் கதாநாயகி ஆவார்.

வட்டார வழக்கு

ரவீனா முற்றிலும் மாறுபட்ட கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது இத்திரைப்படத்தின் இசை அம்சமாக பலம் சேர்க்கிறது. இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல் இவ்வளவு ஏன் காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த ஒரு புதுவிதமான காதல் உணர்வை காட்டுகிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.

படத்தில் ஒரு கால் மணி நேர பகுதி படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அடங்கி பல திருப்புமுனைகளை இத்திரைகதையில் நிகழ்த்தியுள்ளது.

1985 ஆம் ஆண்டில் நடக்கின்ற இத்திரைகதையில், 1962 ஆம் வருடத்தில் நடப்பது போல் ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

அப்போது ஒரு மேற்கு மதுரையில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரியவந்தது.

அக்கிராமத்தில் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது”
இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்மாதம் வரும் டிசம்பர் 29 – ஆம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் மற்றும் குழுவினர்கள்:

நடிகர்கள்: சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திர
திரைக்கதை மற்றும் இயக்கம்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன்
ஒளிப்பதிவு: மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன்
படத்தொகுப்பு: வெங்கட்ராஜன்

வட்டார வழக்கு

Santhosh Nambirajan and Raveenaravi starrer Vattara valakku

More Articles
Follows