தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
அடுத்த நாள் சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் பிரிவை தாங்க முடியாத மக்கள் இன்னும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அம்மா புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இவர்களைப்போல் த்ரிஷா, பிரேம்ஜி அமரன். சாந்தனு பாக்யராஜ் மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் அம்மா படத்தை வைத்துள்ளனர்.