வியாழன் சென்டிமெண்ட்படி விசுவாசம் பிரீ-புரொடக்சன் பூஜையுடன் தொடக்கம்

Siva started Viswasam movie pre production work with Poojaஸ்ரீரடி பாபாவின் தீவிர பக்தராக மாறிவிட்டார் அஜித். எனவே அவருக்கு உகந்த வியாழக்கிழமை படி எந்தவொரு நல்ல காரியம் என்றாலும் அதை செய்து வருகிறார்.

மேலும் வி எழுத்திலும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதால் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் நடித்தார் அஜித்.

தற்போது அதே சென்டிமெண்ட்ப்படி விசுவாசம் என்று தன் அடுத்த படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட சிவா, தற்போது படப்பிடிப்புக்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கி விட்டார்.

அதன்காரணமாக, கடந்த வியாழக்கிழமை அன்று டெக்னீசியன்களை வைத்து சிறிய அளவில் ஆபீஸ் பூஜை போட்டு வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

இந்த துவக்க விழாவிலும் வழக்கம்போல் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.

Siva started Viswasam movie pre production work with Pooja

Overall Rating : Not available

Related News

அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More
விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை…
...Read More

Latest Post