இமயமலையில் நடிகர்கள் ரஜினி – அஜித் ; ஒருவர் நிம்மதிக்காக.. மற்றொருவர்..??

இமயமலையில் நடிகர்கள் ரஜினி – அஜித் ; ஒருவர் நிம்மதிக்காக.. மற்றொருவர்..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் முடிந்ததும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இமயமலை சென்று அமைதியைத் தேடுவது ரஜினிகாந்த்தின் வழக்கம்.

ஆனால் தற்போது இமயமலையை சுற்றி வருவதை ரஜினிகாந்த் சமீப காலமாக தவிர்த்து வருகிறார்.

தற்போது இதே பாணியில் நடிகர் அஜித் இமயமலையை சுற்றி வருகிறார்.

ஆனால் இதற்கான காரணங்கள் வேறு…

சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் லடாக்கிற்கு சென்ற அஜித், அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலையை சுற்றியுள்ள சாலைகளில் பைக் பயணம் செய்து வருகிறாராம்

அஜித்

அங்கு 4-5 நாட்கள் வரை அவர் இமயமலையை சுற்றி இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் அஜித்தின் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தில் அஜித் பேசிய பன்ச் டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

சென்னை திரும்பியதும் அஜித்61வது படத்தின் பணியில் இணைவார் என கூறப்படுகிறது.

Actors Rajini – Ajith in Himalayas; One for peace.. another..??

ஷாரூக்கானுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் இதான்

ஷாரூக்கானுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மாமனிதன்’.

வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘விடுதலை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இத்துடன் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதில் வில்லனாக நடிக்க மட்டும் விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘ஜவான்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்க நயன்தாரா & தீபிகா படுகோனே இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

JUST IN பாலியல் தொல்லை: நடிகை அமலாபாலின் முன்னாள் காதலன் கைது

JUST IN பாலியல் தொல்லை: நடிகை அமலாபாலின் முன்னாள் காதலன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.

இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

சமீபத்தில் அமலாபால் தயாரித்து நாயகியாக நடித்திருந்த ‘கடாவர்’ படம் வெளியானது.

இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

அமலாபால்

தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

கூடுதல் தகவல்…

பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா காதலிப்பதாக கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அமலாபால்

#AmalaPaul

JUST IN Sexual harassment: Actress Amala Paul’s ex-boyfriend arrested

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ பட ரிலீஸ் விவகாரம்..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ பட ரிலீஸ் விவகாரம்..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ல் ரிலீஸாகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் 7 விதமான கெட் அப்களில் நடித்தும் அதற்கேற்ப அவரே பல குரல்களில் பேசி இருப்பதாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது

இந்த நிலையில்… இப்படத்தை 29 இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக, 1,785 இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கோப்ரா பட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.

அவர் கூறியதாவது…

‘மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை, திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும். எனவே அதனால், தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, கோப்ரா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சீயான் விக்ரம்.; இயக்குனர் யார் தெரியுமா.?

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சீயான் விக்ரம்.; இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ படத்திற்காக பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மொழிகளில் புரொமோஷன் செய்து வருகிறார் விக்ரம்.

கோப்ரா படம் நாளை ஆகஸ்ட் 31ல் ரிலீசாகிறது.

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ படம் செப்டம்பர் 30 ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் கன்னடத்தில் விக்ரம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

யூ-டர்ன் மற்றும் லூசியா ஆகிய படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர் குடும்ப படத்தை பகிர்ந்து அப்பாவை வாழ்த்திய அருண்விஜய்

பெற்றோர் குடும்ப படத்தை பகிர்ந்து அப்பாவை வாழ்த்திய அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர குடும்பம் என்று சொன்னால் அதில் சினிமாவில் ஒரு சிலருக்கு தான் 100% பொருந்தும்.

அதில் முக்கியமான குடும்பம் நடிகர் விஜயகுமாரின் குடும்பம். இவரின் குடும்பத்தில் நடிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் நடிகர் நடிகைகளாகி விட்டனர்.

தற்போது அவரது பேரனையும் நடிக்க வைத்து விட்டார் விஜயகுமார்.

சினிமா சீரியல் என பிசியாக வரும் விஜயகுமார் நேற்று ஆகஸ்ட் 29ல் தன் 80ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனையொட்டி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் விஜயகுமார்.

அவருடன் மனைவி, அவரது மகன் அருண் விஜய், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.

ரசிகர்கள், திரையுலகினர் பிரபலங்கள் என பலரும் விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சாமி தரிசனம் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.

More Articles
Follows