அஜித் ரீல் மகள் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? என்னாச்சு.?

அஜித் ரீல் மகள் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.

இதனையடுத்து இவர் அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

தற்போது வளர்ந்த குமரியான பிறகு நிறைய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் ‘புட்ட பொம்மா’ என்ற மலையாளப் படம் வெளியானது. இது ‘கப்பேலா’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

தற்போது ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனிகா.

இதில் அனிகா நடித்த முத்தக் காட்சி சர்ச்சை ஆனது. இதற்கு விளக்கமும் அளித்தார் அனிகா.

இந்த திலையில் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலானது.

அந்த போஸ்டரில் ரத்தினம் மகள் செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று அச்சிடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் தற்போது உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டர் என்றும் அதற்கான காட்சிகளை படமாக்கும் போது அந்த போட்டோ லீக்கானது எனவும் தகவல் வந்துள்ளது.

Ajith’s Reel Daughter Anika’s Tribute Poster.? what happened.?

+2 முடித்த போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்

+2 முடித்த போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் போண்டா மணி.

இவர் படப்பிடிப்பு ஒன்றின் போது, சாக்கடை நீரில் காட்சிக்காக விழுந்தார்.

அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் போண்டா மணி தெரிவித்து இருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தனது சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர் என உருக்கமாக பேசி இருந்தார்.

மேலும் அவருக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி.

பின்னர் அரசு உதவியும் & பல உதவிகளும் கிடைத்த பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி வந்தார்.

ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இவரது மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானதை தொடர்ந்து, மேல் படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார்!

இந்த அவருடைய நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வான போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேல்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.

இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

Producer helps Bonda Mani daughter after completed +2

மலக்குழி சர்ச்சை : கடவுள் ஸ்தான நபர்கள் மரணம் தழுவினால் கவனம் பெறுமோ?; தமிழக அரசிற்கு ரஞ்சித் கண்டனம்

மலக்குழி சர்ச்சை : கடவுள் ஸ்தான நபர்கள் மரணம் தழுவினால் கவனம் பெறுமோ?; தமிழக அரசிற்கு ரஞ்சித் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பலரும் தற்போது இயக்குனர்களாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இவரின் உதவியாளர்கள் ஒருவரான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஞ்சித் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.

அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும்.

அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது.

மலக்குழி மரணம்

எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ பேசுவதோ கவிதையின் நோக்கமல்ல.

அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரனை ‘வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்’ என்கிற பொய் பிரச்சாரத்ததை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E 4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்;

இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும்.

அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இயக்குநர் பா. இரஞ்சித்
நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர்

மலக்குழி மரணம்

director pa ranjith condemned for-filing a case against his assistant director

‘வீரன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது சத்யஜோதி பிலிம்ஸ்

‘வீரன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது சத்யஜோதி பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ புகழ் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’.

இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்க, முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வீரன்

Hip Hop Adhi’s Veeran to release on June 2

விஜய் – சமந்தா இணைந்த ‘குஷி’ பட சிங்கிள் ட்ராக் & மூவி ரிலீஸ் அப்டேட்

விஜய் – சமந்தா இணைந்த ‘குஷி’ பட சிங்கிள் ட்ராக் & மூவி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார்.

காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை கேட்பவருக்கு நிச்சயம் பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு சிவா நிர்வாணா நடனமும் அமைத்திருக்கிறார்.

‘குஷி’ திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் காதல் கதை. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடலை முதல் பாடலாக வெளியிட்டு, ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Kushi’s First Song En Roja Neeye Is a Beautiful Melody

BREAKING பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

BREAKING பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குனர் பா ரஞ்சித். ஓரிரு படங்களை இயக்கிய இவருக்கு ரஜினியின் கபாலி காலா என தொடர்ந்து இரு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். விரைவில் கமல்ஹாசன் படத்தை இயக்க உள்ளார்.

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பலரும் தற்போது இயக்குனர்களாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் உதவியாளர்கள் ஒருவரான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A case filed against Pa Ranjith’s assistant director Viduthalai Sikappi in 5 sections

More Articles
Follows