சிம்புவுடன் மோதலை தவிர்க்க ஜிவி பிரகாஷ் முடிவு

சிம்புவுடன் மோதலை தவிர்க்க ஜிவி பிரகாஷ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gvprakashகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், டான்ஸர் சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இதே நாளில் ராஜேஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படமும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.

இதனால் இரு படங்கள் இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றுமுன் படத்திற்கு யு சர்ட்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் நவம்பர் 10ஆம் தேதி இந்த KIK படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

‘சூர்யாவுக்காக மட்டும் அதை செய்வேன்…’ கார்த்தி

‘சூர்யாவுக்காக மட்டும் அதை செய்வேன்…’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaashmoraகாஷ்மோரா பெரும் வெற்றிப் பெற்றதால், கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இதில் ராஜ்நாயக் கேரக்டரில் வில்லனாகவும் மிரட்டியிருந்தார்.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக மீசையில்லாமல் க்ளீன் ஷேவ் முகத்துடன் அண்மை காலமாக வலம் வருகிறார்.

இந்நிலையில், அவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“வில்லனாக நடிக்கும் எண்ணமில்லை. ஒரு வேளை என் அண்ணன் (சூர்யா) ஹீரோவாக நடித்தால் அவருக்காக வில்லன் வேடம் ஏற்பேன்” என்றார்.

அனிருத்தை ஓவர் டேக் செய்த சந்தோஷ் நாராயணன்

அனிருத்தை ஓவர் டேக் செய்த சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh santhosh narayananஇன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இசையமைத்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டில்தான் தங்கள் இசைப் பயணத்தை சினிமாவில் தொடங்கினர்.

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ்.

இவர் இன்று ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் அறிமுகமான அனிருத் இன்று அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இசையமைக்கிறார்.

இந்த நான்கு ஆண்டுகளில் சந்தோஷ் நாராயணன் 20 படங்களை நெருங்கிவிட்டார். அனிருத் 17 படங்களை தொட்டு இருக்கிறார்.

‘கன்பார்ம் ஆகல; எப்போ வரும்னு சொல்றோம்…’ – பைரவா டீம்

‘கன்பார்ம் ஆகல; எப்போ வரும்னு சொல்றோம்…’ – பைரவா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayபைரவா டீசர் அண்மையில் வெளியாகி விஜய் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் (டிசம்பர் 25) வெளியிட உள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

ஆனால் இப்படத்தின் பாடல்கள் அதற்கு முன்பே வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்ரைலர் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. நாங்களே அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என இப்படக்குழுவினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் இதில் இடம்பெற்றுள்ள பட்டைய கிளப்பு பைரவா என்ற பாடல் வரிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் இதோ…

bairavaa song

 

ரஜினி-விஜய்-தனுஷ்-சிம்பு பற்றி மஞ்சிமா பதில்கள்

ரஜினி-விஜய்-தனுஷ்-சிம்பு பற்றி மஞ்சிமா பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjima mohan hotமலையாள மங்கை மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகம் ஆகப்போகும் படம் அச்சம் என்பது மடமையடா.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வாரம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் தற்போது கலந்துரையாடி வருகிறார் மஞ்சிமா. அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில்

ரஜினிகாந்தை பற்றி ஒருவர் கேட்டபோது…

அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.

விஜய்யை பற்றி ஒரு வார்த்தை என கேட்டபோது… விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அவருடன் விரைவில் நடிக்க ஆசை.

அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சிரமமப்பட்டேன்.

சிம்புவுடன் மீண்டும் நடிப்பீர்களா? என கேட்டதற்கு… “நிச்சயமாக நடிப்பேன். அவர்தான் மீண்டும் நடிப்பாரா? என சொல்ல வேண்டும்.

அவர் ஒரு யதார்த்த நடிகர். சிறந்த மனிதர்” என்றார்.

தனுஷ் பற்றி கேட்டபோது… அவர் திறமைகள் நிறைந்தவர் என்றார்.

பின்னர் நடிகைகளிடம் வழக்கம்போல் நீங்கள் நடிகையாக வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் என ஒருவர் கேட்டார்? அதற்கு டான்ஸர் ஆகியிருப்பேன் என்றார்.

மீண்டும் இணையும் ஹாலிவுட்-ஆசியா சூப்பர் ஸ்டார்கள்

மீண்டும் இணையும் ஹாலிவுட்-ஆசியா சூப்பர் ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jackie chan and arnoldஉலகளவில் ரசிக்கப்படும் படங்களாக ஹாலிவுட் திரைப்படங்கள் என்றும் உள்ளது.

இதனால் ஹாலிவுட் படங்களுக்கு என்றும் தனி மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ‘ரஷ் ஹவர்’ உள்ளிட்ட படங்கள் படு பிரபலமானது.

தற்போது இதே சூப்பர் ஸ்டார் மற்றொரு ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையவிருக்கிறாராம்.

அவர் வேறு யாருமல்ல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்தான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டான VIY படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே இவர்கள் ‘Around the World in 80 Days’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அப்படம் கடந்த 2004ஆம் ஆண்டில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows