தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எத்தனையோ நடிகர்களின் படங்கள் வந்தாலும், ரஜினி படத்திற்கு போட்டியாக ரஜினி படங்களே நிற்கும்.
விரைவில் கபாலி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் அப்படிதான் உருவாகி வருகிறதாம்.
இதற்கு முன் இல்லாத அளவுக்கு பட விநியோக உரிமை உச்சத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ‘சண்முகா பிலிம்ஸ்’ ப்ரவீன் மற்றும் செளத்ரி ஆகியோர் ரூ.32 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் பற்றிய தகவல்களை தெரிவிக்கிறோம். தொடர்பில் இருங்கள்.