கபாலிக்கு லீவு கேட்க சிவகார்த்திகேயனை மாட்டிவிட்ட சதீஷ்

கபாலிக்கு லீவு கேட்க சிவகார்த்திகேயனை மாட்டிவிட்ட சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and sathish stillsபாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் நாளை கபாலி ரிலீஸை முன்னிட்டு ரெமோ படப்பிடிப்புக்கு லீவு கேட்க சதீஷ், ட்விட்டரில் பாக்யராஜ் கண்ணனிடம் விண்ணப்பித்துள்ளார்.

அதில்.. சிவகார்த்திகேயனின் நர்ஸ் கெட்டப் படத்தை போட்டு, பாக்யராஜ் சார். இவ என்னோட சிஸ்டர். இவள நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. லீவு வேனும் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து பாக்யராஜ் கூறியுள்ளதாவது… ஐய்யோ சார். நீங்க மறந்து எனக்கே லெட்டர் அனுப்பிட்டீங்க. உங்க சிஸ்டர பெண் பார்க்க வர்ற மாப்பிள்யே நான்தான்… என்று குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் கபாலி இன்ட்ரோ சீன்..!

வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் கபாலி இன்ட்ரோ சீன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali intro sceneரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நாளை ரிலீஸ் ஆகிறார்.

ஆனால் அதற்கு கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் காட்சி வெளியாகிவிட்டது.

இது ரஜினியின் அறிமுக காட்சி என தெரிய வந்துள்ளது.

பின்னணியில் தீம் மியூசிக் ஒலிக்க மலேசியா சிறையில் இருந்து நீல நிற ஆடைகள் அணிந்த படியே ரஜினி வெளியே வருகிறார்.

அப்போது 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை அவருக்கு தெரிவிக்கின்றனர்.

இதில் ரஜினிக்கு டயலாக் இல்லை. அவர் ரிலீஸ் ஆகும்போது கோட் சூட் அணிந்து செம ஸ்டைலீஷ்ஷாக வருகிறார்.

இந்த அறிமுக காட்சி வாட்ஸ் அப்பில் தீயாய் பரவி வருகிறது.

ஆனால் இதை யாரும் பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னோட்டம் : ‘கபாலி’யை காண கண் கோடி வேண்டும்.. ஏன்..?

முன்னோட்டம் : ‘கபாலி’யை காண கண் கோடி வேண்டும்.. ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kiss kidஇந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு கபாலி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு அஞ்சல் உறையை வெளியிட ஏர் ஏசியா விமானத்தில் பறக்கிறார் கபாலி.

மேலும் கபாலி ரிலீஸ் ஆகும் நாள் அறிவிக்கப்படாத விடுமுறை நாளாக உருவெடுத்துள்ளது. பல தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

முத்தூட் பைனான்ஸ், பைவ் ஸ்டார், ஏர்டெல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கபாலி படத்துடன் கைகோர்த்துள்ளன.

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்று பட்டமளித்த தாணு தயாரிப்பில் முதன்முறையாக நடிக்கிறார். இவர்களுக்கு 40 ஆண்டு கால நட்புக்கு இப்படம் ஒரு மகுடமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ஏன் இப்படி ஒரு எதிர்பார்ப்பு என சிலவற்றை பார்த்து வருவோமா..?

  • ரஜினி இதுவரை இல்லாமல் தன் ஒரிஜினல் தாடியுடன் நடித்து, தன் வயதுக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்துள்ளார்.
  • நீண்ட வருடங்களுக்கு பிறகு இளம் இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளார். ரஞ்சித் இப்படத்தை இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
  • கானா பாலா, அருண் ராஜா காமராஜ் உள்ளிட்ட புதியவர்கள் இப்படத்தில் ரஜினிக்காக பாடியுள்ளனர்.
  • வழக்கமான கூட்டணியான வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் பங்கேற்கவில்லை.

kabali dance

  • ரஜினியுடன் ராதிகா ஆப்தே, நாசர், ஜான்விஜய், வின்ஸ்டன் சவோ, கிஷோர், தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
  • நெருப்புடா உள்ளிட்ட பாடல்கள் பட்டைய கிளப்பி இணையத்தில் இந்தியளவில் சாதனை படைத்துள்ளது.
  • இப்படத்தில் பன்ச் வசனங்கள் இருக்காது. ஆனால் எமோஷனல் காட்சிகள் இருக்கும்.
    ரஜினியின் வழக்கமான ஸ்டைல்கள் இதில் இல்லை. மாறாக புதிய ஸ்டைலிஷ் ரஜினியை இதிர் பார்க்கலாம்.
  • மலேசிய தமிழ் மக்களுக்காக போராடும் டானின் கதை என்பதால் மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய சினிமா ஒன்று முதன்முறையாக மலாய் மொழியில் வெளியிடப்படுகிறது.
  • இப்படத்தின் நிறைய காட்சிகளில் ரஜினிகாந்த் மலாய் மொழி பேசியிருக்கிறாராம்.

 

  • பெரும்பாலும் ரஜினியின் படங்கள் சுபமாக முடியும். ஆனால் முதன்முறையாக இதில் நெகட்டிவ் க்ளைமாக்ஸ் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதை ரஜினி ரசிர்கள் ஏற்பார்களா? என்பது நாளை தெரிந்துவிடும்.
  • டாய்லெட் கட்டினாலும், பொது இடங்களை சுத்தப்படுத்தினாலும் கபாலி’ டிக்கெட் இலவசம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
  • கபாலி ரிலீஸ் ஆகும் நாளில் தென்னிந்தியாவில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. இந்தியில் ஓரிரு படங்கள் வெளியாகிறது.
  • கேரளாவில் வெளியிட மோகன்லால் இதன் உரிமையை பெற்றிருக்கிறார். அவர் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்.
  • கர்நாடகாவில் 250 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது.
  • தெலுங்கில் 330 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
  • தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
  • ஓரிரு மாதங்கள் கழித்து சைனீஸ் மற்றும் ஜப்பனீஸ் மொழிகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
  • அமெரிக்காவில் மட்டும் 442 தியேட்டர்களில் வெளியாகிறது. சினி கேலக்சி நிறுவனம் அங்கே இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.
  • அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய படம்
  • மேலும் மற்ற நாடுகளில் ரிலீஸ் விவரங்கள் இதோ… #UAE – 70 #UK – 60 #SriLanka – 42 #France – 35 #Australia – 30 #GCC – 25 #Canada – 15
  • பாரீஸ் நகரில்  2800 இருக்கைகள் கொண்ட ‘ரெக்ஸ் சினிமாஸ்’ இல் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய படம் இதுதான்
  • படத்தின் பட்ஜெட் ரூ. 110 கோடி என்றும் ரிலீசுக்கு முன்பே ரூ.225 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்திய சினிமாவில் பாகுபலி படம் பெரும் சாதனை படைத்துள்ளது.
  • அப்படத்தின் டிரைலரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால் கபாலி பட டீசர் இரண்டு கோடி பார்வையாளர்கள் கடந்துள்ளது.
  • நாளை சீன மொழியில் பாகுபலி வெளியாகிறது. ஆனால் இதற்குமுன் மற்ற மொழிகளை சேர்த்து, உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. தற்போது கபாலி அதன் எண்ணிக்கையை தாண்டும் என தெரிவிக்கின்றனர்.
  • பாகுபலி ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரூ 160 கோடியை எட்டியது. ஆனால் கபாலி விநியோக உரிமை ரூ220 கோடியை தொட்டுவிட்டது.
  • இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக கபாலிக்காக பெங்களூரிலிருந்து, சென்னைக்கு சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்படி பல சிறப்பம்சங்களை கபாலி கொண்டிருப்பதால் இதுவரை வெளிவந்த இந்திய படங்களின் அனைத்து வசூலையும் ரஜினிகாந்த் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் – சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் விஜய்சேதுபதி..!

தனுஷ் – சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijaysethupathi and sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க படத்தையும் அதே நாளில் வெளியிடவுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

இவற்றைத் தொடர்ந்து… தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தையும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஆகஸ்ட்டில் தனுஷ் படத்துடனும், அக்டோபரில் சிவகார்த்திகேயன் படத்துடனும் விஜய் சேதுபதியின் படங்கள் மோதவுள்ளது.

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

கபாலி பீவர்: ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது..!

கபாலி பீவர்: ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇந்திய சினிமாவே எதிர்பார்க்கும் கபாலி நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகிறது.

வழக்கம்போலவே இப்படத்திற்கும் வெளியீட்டின் போது சில எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.

கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் என லிங்கா படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் ஒரு புறம் கோரி வருகின்றனர்.

சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் அக்கறை இல்லாத ரஜினி, தமிழர்கள் நலனுக்காக பாடுபடுவது போல காட்சிகளை கபாலியில் வைத்துள்ளார்.

இதன் மூலம் இளைஞர்களை மூளை சலவை செய்கிறார் எனவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவையில்லாமல், ரஜினி ரசிகர்களுக்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கபாலி படத்தை வரவேற்க ரஜினி கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

ஏழை மக்கள் பாலுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க இதுபோன்ற பாலாபிஷேகத்தை ரசிகர்கள் செய்ய கூடாது என பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா சுதீப்..?

தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா சுதீப்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mudinja-Ivana-Pudi-Audio-Launch-Photos-23முடிஞ்சா இவன புடி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தலைமை ஏற்றார்.

ஆடியோவை விஜய்சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

இப்படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், நாயகன் சுதீப், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தனுஷ் பேசியதாவது….

நான் ஈ படத்தில் சுதீப்பின் நடிப்பை கண்டு வியந்தேன்.

நான் பொதுவாக எந்த நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு போன் செய்து பேசியது இல்லை.

ஆனால் சுதீப்புக்கு போன் செய்து வாழ்த்தை தெரிவித்தேன்.

ஒருமுறை பாலு மகேந்திரா என்னிடம் சொன்னார். நான் தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தால், சுதீப்புக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என கூறினார்.

இதை வேறு எங்கும் வேண்டுமானாலும் அவரிடம் நான் சொல்லியிருக்கலாம்.
ஆனால் இதுதான் சரியான இடம் என நினைக்கிறேன்.

நான் சிவாகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன், விஜய்சேதுபதியுடனும் நடித்துவிட்டேன்.
எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.” என்று கூறினார்.

ஹ்ம்… தனுஷின் ஆசையை சுதீப் நிறைவேற்றுவாரா என பார்க்கலாம்.?

More Articles
Follows