‘சார்பட்டா பரம்பரை’ பட வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணித்த மலையாள நடிகர்

‘சார்பட்டா பரம்பரை’ பட வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணித்த மலையாள நடிகர்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர்களில் ஒருவர் மலையாள நடிகர் ஜான் கொக்கென்.

இவர் கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் பாகுபலி 1 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுடன் மோதும் வேம்புலி தான் இந்த ஜான் கொக்கென்.

இவர் வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணிப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

நன்றி அஜித் சார். என்றும் என்னை உத்வேகப்படுத்தினீர்கள்.

என்னையே நான் நம்புவதற்கும் நீங்கள் தான் ஊக்கப்படுத்தினீர்கள்.

வீரம் பட ஷூட்டிங் நாட்களில் உங்களுடன் செலவிட்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடத்தை கொடுத்தது.

இன்னும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

இந்த வேம்புலி கேரக்டரை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்.” என குறிப்பிட்டுள்ளார்.

ajith

Sarpatta Vembuli praises Thala Ajith

‘ராணா’ படத்தில் பிரிந்த ரஜினி-தீபிகா ஜோடியை மீண்டும் இணைக்கும் ரஜினி ரசிகர்

‘ராணா’ படத்தில் பிரிந்த ரஜினி-தீபிகா ஜோடியை மீண்டும் இணைக்கும் ரஜினி ரசிகர்

2011ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் ‘ராணா’. இதில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவிருந்தார்.

இப்படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அன்று மாலையே ரஜினிக்கு திடீரென ் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அங்கு இரவு பகலாக ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.

இதனால் ராணா படம் கைவிடப்பட்டது.

இதன்பின்னர் செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவர்களை நடிக்க வைத்தார்.

ரஜினி கேரக்டர் வடிவமைப்பு அழகுக்கு தீபிகா இல்லை என பலரும் கிண்டலடித்தனர்.

படத்தின் கிராபிக்ஸ் செலவும் நாட்களும் நீண்டு கொண்டே போனதால் ‘கோச்சடையான்’ படத்தை உடனே ரிலீஸ் செய்ய சொன்னார் ரஜினி.

அதன் பின்னர் தான் லிங்கா (2014ல்) படத்தில் நடித்தார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் எனவும் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன.

தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Rajinikanth and Deepika joins for a new film

desingh periyasamy rajinikanth

யோகாசனம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.; லைக்ஸ் அள்ளி வைரலாகும் வீடியோ.!

யோகாசனம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.; லைக்ஸ் அள்ளி வைரலாகும் வீடியோ.!

தமிழில் 2 படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் உள்ளன.

ரஜினியுடன் ‘அண்ணாத்த’ & , செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களும் மகேஷ்பாபுவுடன் ‘சர்காரு வாரிபாட்டா’ ஆகிய படங்கள் உள்ளன.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் தன் வீட்டில் தன் செல்ல நாயுடன் உள்ள போட்டோக்களை அதிகம் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் & வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நான்கு ஐந்து விதமான யோகாசனங்களை செய்திருக்கிறாராம். அதில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ 14.5 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் குவித்து வைரலாகி வருகிறது.

Keerthy Suresh recent insta post goes viral

ரஜினி பட வில்லன் ராம் நடிக்கும் ‘டேக் டைவர்ஷன்’.; பாராட்டி வாழ்த்திய கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி பட வில்லன் ராம் நடிக்கும் ‘டேக் டைவர்ஷன்’.; பாராட்டி வாழ்த்திய கார்த்திக் சுப்பராஜ்

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’.

இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும்.

தேவா பாடிய அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் உற்சாகமான சாண்டி ,அந்தப் பாடலுக்கு ஒன்றரை நாளில் நடனம் அமைத்துக் கொடுத்து படக்குழுவினருக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அடுத்த படியாக படத்துக்குப் பலம் சேர்க்கும் அம்சமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இன்று வெளியிட்டார்.

முதல் பார்வையில் காட்சிகளைப் பார்த்துப் பாராட்டியதுடன் படக்குழுவினரையும் வாழ்த்தினார்.

இதேபோல் பர்ஸ்ட் லுக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடன இயக்குநர் சாண்டியும் வெளியிட்டார்கள்.

இப்படி வரிசையாக திரையுலகினரின் ஊக்கப்படுத்துதல்களால் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

“வாழ்க்கைப் பயணத்தில் நாம் போக நினைக்கும் இடத்தை சென்றடைய பல மாற்றுப் பாதைகள் நம்மை திசைதிருப்பும், ஆயினும் விடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையே நகைச்சுவையுடன் திரையில் காட்டியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

ரஜினியின் ‘பேட்ட’, ‘சதுரங்க வேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Rajini villain plays important role in Take Diversion

விஷால் & ஆர்யாவின் ‘எனிமி’ பட டிரைலர் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

விஷால் & ஆர்யாவின் ‘எனிமி’ பட டிரைலர் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி.

இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

மேலும், டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்.

Music Director Sam CS about Enemy movie trailer

‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

இன்று நடிகர் சூர்யா தன் 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன் ‘ என தலைப்பு வைத்து வீடியோ மற்றும் 3 லுக் போஸ்டர்கள் வெளியானது.

இன்று சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, நடித்து வரும் சூர்யா 39 படத்திற்கு ‘ஜெய் பீம்’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார்.

‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தலைப்பை இயக்குனர் ரஞ்சித் பதிவு செய்து இருந்தார் என்பதும் அவரே இந்த தலைப்பை கொடுத்துள்ளார்.

Suriya 39 title and first look announced

More Articles
Follows