தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான சில காட்சிகள் உள்ளது.
எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் வேண்டும் எனவும் விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இப்பட பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சர்கார் பட வில்லனுமான பழ.கருப்பையா கூறியதாவது:-
ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இருக்காது.
எல்லாரிடமும் ஓட்டெடுப்பு நடத்திவிட்டு ஒரு படத்தை வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது.
நான் பேசிய நிறைய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும்.
15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கினார்கள்.
இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என்று நானே கேட்கிறேன்.
இலவசத்தின் மூலம்தான் ஆட்சி நடத்துகிறீர்கள். கமிஷன் வாங்காத, ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.
நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்த படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா? என்று எனக்கு தெரியாது.
அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார்.
அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.
“தனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பணம் வழிந்தோடுகிறது.
எனவே இவ்வளவு அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். மிகச்சிறந்த சிந்தனை. நாள் தள்ளிப் போடாமல் இதை செய்யுங்கள் என்று சொன்னேன்.
இவ்வாறு பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
Sarkar Villain Pala Karuppiah confirms Vijays Political entry