சர்கார் ரிலீஸ் அப்டேட்ஸ்..: 80 நாடுகள்; 200 கோடி; 1200 தியேட்டர்கள்

சர்கார் ரிலீஸ் அப்டேட்ஸ்..: 80 நாடுகள்; 200 கோடி; 1200 தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சு இப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இதன் வியாபாரம் மட்டும் ரூ. 200 கோடி வரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் சர்கார் வெளியாகிறது.

சுமார் 80 நாடுகளில் 1200 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் வெளிநாட்டு உரிமையை ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் *கண்ணாடி*

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் *கண்ணாடி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kannadi movie stillsசமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படத்தை ‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் “ஆடை” எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து “V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து “V ஸ்டுடியோஸ்” உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா வுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘திருடன் போலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.

ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, திரைப்படங்களை இயக்க வருவதற்க்கு முன் பல படங்களின் VFX காட்சிகளை அமைத்த தன் சொந்த அனுபவங்களை கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம்.

மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்.

இசை : S.S.தமன்

ஒளிப்பதிவு: P.K.வர்மா

படத்தொகுப்பு: K.L.பிரவின்

கலை: விதேஷ்

ஸ்டண்ட்: ‘ஸ்டன்னர்’ சாம்

பாடல்கள்: யுகபாரதி

நடனம்: ஷெரிஃப்

சவுண்ட் டிஸைன்: சம்பத் ஆழ்வார்

நிர்வாக தயாரிப்பு: கிருபாகரன் ராமசாமி

தயாரிப்பு: விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு

வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

பாஜகவின் ஊதுகுழல் கமல்.; ரஜினியை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் பேட்டி

பாஜகவின் ஊதுகுழல் கமல்.; ரஜினியை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karate Thiyagarajan about Rajinikanth and Kamalhassan politicsகாங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும் ரஜினியுடன் நெருக்கமான நட்பில் உள்ளவர் கராத்தே தியாகராஜன்.

இவர் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

விரைவில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ள நிலையில், தற்போதும் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் கராத்தே தியாகராஜன்.

இதனால் தமிழக காங்கிரஸார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினியை சந்தித்தது குறித்து கராத்தே தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். முரசொலி பத்திரிகையில் ரஜினி குறித்து வந்த கேலிக்கட்டுரைக் குறித்தும் விவாதித்தோம்.

ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் தமிழகத்தில் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் கமல்ஹாசன்.” என தெரிவித்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

Karate Thiyagarajan about Rajinikanth and Kamalhassan politics

Breaking : செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்: நேற்று விளக்கம்; இன்று மன்னிப்பு

Breaking : செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்: நேற்று விளக்கம்; இன்று மன்னிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva kumarமதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது திறப்பு விழாவுக்கு வருகை தந்த சிவகுமாரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். அப்படிக் கூடியவர்களில் ஒருவர் சிவகுமார் வந்து கொண்டிருக்கும் போது தனது செல்போனை உயர்த்தி செல்ஃபி எடுக்க முயன்றார்.

ஆசையுடன் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை ஆவேசமாக சிவக்குமார் தட்டிவிட்டதில், செல்போன் உடைந்து சிதறியது. செல்பி எடுக்க முயன்ற இளைஞரை நடிகர் சிவக்குமார் கோபத்துடன் பார்த்ததால், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து சிவகுமார் விளக்கம் அளித்தார்.

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் எப்படி வேண்டுமானாலும் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.’ என்று விளக்கம் அளித்திருந்தார்.

அவர் என்னதான் இப்படி விளக்கம் அளித்திருந்தாலும் அவரது விளக்கத்தை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் சற்றுமுன் 25 நொடிகள் அடங்கிய ஒரு வீடியோவில் பலரும் எனக்கு எதிராக பேசி வருவதால் அந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Breaking : கதை திருடிய முருகதாஸ்; வருணுக்கு பணம் தர *சர்கார்* டீம் ஒப்புதல்

Breaking : கதை திருடிய முருகதாஸ்; வருணுக்கு பணம் தர *சர்கார்* டீம் ஒப்புதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்ப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் முருகதாஸ் தன் கதையை திருடியதாக உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார்.

இதனையடுத்து ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் தெரிவித்து இருந்தார்.

இதனால் முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் இடையே மோதல் உருவானது.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத முருகதாஸ், பிரச்னையை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகக் கூற இந்த கதை திருட்டு சர்ச்சை பெரிதானது.

வருண் ராஜேந்திரன் இதை வழக்காக பதிவு செய்ய, 30ம் தேதி (இன்று ) வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து பிரச்னை கோர்ட்டுக்கு வர தற்போது, இருதரப்பும் பேசியதில், மேற்கண்ட சமரசம் எட்டப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

வருண் ராஜேந்திரனுக்கு 30 லட்ச ரூபாய் பணம் தந்துவிடுவதாகவும், படத்தின் டைட்டிலில் நன்றி என சொல்வதாகவும் முருகதாஸ் தரப்பு, வருண் ராஜேந்திரனிடம் பேசியதையொட்டி சமரசம் ஏற்பட்டுவிட்டது.

ஆக, முருகதாஸ் கதை திருடியது இதன் மூலம் உறுதியானது.

இந்த படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

உங்க மகன்களுக்கு போஸ்டர் ஒட்டுற கைய தட்டி விடுவீங்களா.? சிவகுமாருக்கு லெனின் பாரதி கண்டனம்

உங்க மகன்களுக்கு போஸ்டர் ஒட்டுற கைய தட்டி விடுவீங்களா.? சிவகுமாருக்கு லெனின் பாரதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Lenin Bhharathi condemns Sivakumar Cellphone knocking issueஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கலந்துக் கொண்ட போது அவரை செல்ஃபி எடுக்க வந்த இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார் சிவகுமார்.

அந்த வீடியோ இதுவரை இல்லாத அளவுக்கு வைரலானது.

தினமும் யோகா, தியானம் செய்யும் ஒரு நேர்மையான மனிதர் பொதுவெளியில் இவ்வளவு கோபத்துடன் நடந்துக் கொள்ளலாமா? என பல்வேறு தரப்பினரும் அவர் மீது கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள்.

இதனையடுத்து செல்போனை தட்டி விட்டது ஏன்? என சிவகுமார் விளக்கமும் கொடுத்தார்.

இந்நிலையில் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி, சிவகுமாரின் செயலை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவகுமாரின் கை, குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…?

இவ்வாறு லெனின் பாரதி பதிவிட்டுள்ளார்.

Director Lenin Bhharathi condemns Sivakumar Cellphone knocking issue

Director Lenin Bhharathi condemns Sivakumar Cellphone knocking issue

 

More Articles
Follows