தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள படம் ‘சரக்கு’.
இதில் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பழ கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெயக்குமார்.ஜே இயக்க அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ். டி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுத, எஸ்.தேவராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.
இந்த படம் டாஸ்மாக் சரக்கினால் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் படமாக உருவாகியுள்ளது. குடிமகன்களால் மட்டுமே அரசாங்கம் இயங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ள இந்த படத்தில் இதற்கான தீர்வும் சொல்லப்பட்டுள்ளத.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி மாலை ‘சரக்கு’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை ஐஸ்வர்யா என்பவர் தொகுத்து வழங்கினார்.
அப்போது மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ். தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென பெண் தொகுப்பாளரின் கழுத்தில் அவரது அனுமதியின்றி போட்டார். இதனால் எரிச்சலடைந்தார். ஆனாலும் வேறு வழியின்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிவடையும்போது பத்திரிக்கையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே.. கூல் சுரேஷ் நீ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் சொல்லவே கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சி முடிவுற்றது.
Mansoor Alikhans Sarakku Audio launch Cool Suresh Apology