விஜய்யை கலாய்த்த பாட்டையே நாகர்ஜுனா பட டைட்டிலாக்கிய ராம் கோபால் வர்மா

விஜய்யை கலாய்த்த பாட்டையே நாகர்ஜுனா பட டைட்டிலாக்கிய ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simtangaranசர்ச்சை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ராம் கோபால் வர்மா.

இவரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘சிம்டாங்காரன்’ என டைட்டில் வைத்து அதன் பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டனர்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடல் இடம் பெற்றது.

இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இந்த சிம்டாங்காரன் பாடல் வெளியான போது இந்த பாடல் வரிகளை கலாய்த்து நெகட்டிவ் மீம்ஸ் வெளியானது.

படம் வெளியான பின்பு பாடல் ஹிட்டானது வேறு கதை.

Attachments area

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங் எம்.பி.யுமான வசந்தகுமார் காலமானார்

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங் எம்.பி.யுமான வசந்தகுமார் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70.

இவர் வசந்த் & கோ நிறுவனத்தை நிறுவியவர்.

சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளது. இவரின் மகன் விஜய் வசந்த் நடிகராக உள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வசந்தின் உடல் நிலையில் பலனின்றி சற்றுமுன் உயிர்பிரிந்தது

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Congress MP Vasantha Kumar passed away

திரு.வசந்தகுமார் மறைவிற்கு இரங்கல் :
– தொழில் துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு, இளைஞர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக துடிப்போடு செயல்பட்டவர் அருமை அண்ணன் வசந்தகுமார் அவர்கள்.

தொழில் துறையில் எப்படி சாதித்தாரோ, அதேபோல, அரசியலிலும், எம்.எல்.ஏ வாக இருந்தபோதே பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு எம்.பி யாகத் தேர்வாகி சாதித்தார்.

நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். கடந்த ஜூலை 21 ஆம் நாள் நடிகர்திலகத்தின் 19 ஆம் நினைவுநாளில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார்..

இந்த கொரோனா சூழ்நிலையிலும், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு உதவிடவேண்டும் என்ற நோக்கோடு, தானே நேரடியாகச் சென்று அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்கி, தானே கொரோனா தொற்றுக்கு ஆளாகி தன் உயிரையே அர்ப்பணித்திக்கிறார்.
திரு.வசந்தகுமார் அவர்களுடைய மறைவு, காங்கிரஸ் கட்சிக்கும், கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கும், நடிகர்திலகம் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

ஆழ்ந்த வருத்தத்துடன்,
கே. சந்திரசேகரன்
தலைவர்
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை.

ஹாலிவுட்டில் ஜிவி. பிரகாஷ் ஆல்பம்..: ‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் தடம் பதிக்கிறார்

ஹாலிவுட்டில் ஜிவி. பிரகாஷ் ஆல்பம்..: ‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் தடம் பதிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashசில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர்.

இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது.

அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது.

அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் ஜி.வி;பிரகாஷ். ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.

‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல்.

ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.

இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார்.

இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி, தனது கலை மூலமாக சர்வதேச அளவில் தனது ரசிகர்களிடம் தனக்கான ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.

அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ்.

கொரோனா ஊரடங்கிலும் ஓணம் கொண்டாட மதுபான கடை நேரம் நீடிப்பு

கொரோனா ஊரடங்கிலும் ஓணம் கொண்டாட மதுபான கடை நேரம் நீடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kerala liquor shopகடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இன்று 6வது நாள். வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் ஓணத்தை முன்னிட்டு கேரளாவில், மதுபான விற்பனை நிலையங்களின் நேரம் இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை ஒழுங்கப்படுத்தவும் மதுபிரியர்களுக்காக விற்பனை நிலையங்கள் மற்றும் பார்கள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து காலை 11 மணி முதல் ஐந்து மணி வரை இயங்கி வந்த மதுபான விற்பனை நிலையங்கள், நேற்று முதல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கோடியில் 1.5 கோடியை திரைத்துறை சங்கங்களுக்கு கொடுத்தார் சூர்யா

5 கோடியில் 1.5 கோடியை திரைத்துறை சங்கங்களுக்கு கொடுத்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார் சூர்யா.

அது தொடர்பான அறிக்கையில்… “சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடியை க்களுக்கும், திரையுலக சங்கங்களுக்கும் கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்திருத்தார்.

அதன்படி முதற்கட்டமாக ஐந்து கோடியில் 1.5 கோடியை திரையுலகினருக்கு அளித்துள்ளார் சூர்யா.

இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்சியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்.

தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகளை சிவக்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.

சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி லலித்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

1.5 கோடி கொடுக்கப்பட்டது போக மீதமுள்ள ரூ. 3.5 கோடி தொகை பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் முகென் ராவ்வுடன் இணையும் திவ்ய பாரதி & ஷிவானி நாராயணன்

பிக்பாஸ் முகென் ராவ்வுடன் இணையும் திவ்ய பாரதி & ஷிவானி நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mugen rao shivaniமலேசியாவின் பிரபலமான பாடர்களில் ஒருவர் முகென் ராவ். இவரது பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே அந்த நாட்டில் உண்டு.

இவர் கடந்த 2019 ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

அதன்பின்னர் மலேசியாவுக்கே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பேச்சுலர் பட நாயகியான திவ்ய பாரதி முகேன் ராவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானி நாராயணனும் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows