தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் `சர்கார்’.
இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, பழ.கருப்பையா மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது.
இந்நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் என முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அறிவிப்பு அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
பாடல்களை அனைத்தையும் பாடலாசிரியர் விவேக் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
From 19th September Sarkar team decide to start its Celebrations