விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

dhanush and vijayவிஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது 100வது படைப்பாக பிரம்மாண்டமாக தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

‘மெர்சல்’ படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும் அது தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்சுக்கு லாபமாக அமையவில்லை என்பதே உண்மை.

எனவே இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

அதுவும் அவர்களுக்கு லாபமாக அமையவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையில் நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்தை தாங்கள் தயாரிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க, இதை சரித்திர காலப் படமாக தனுஷ் இயக்கவிருந்தார்.

செப்டம்பரில் சூட்டிங்கை ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார்.

ஆனால் சில நாட்களாக சூட்டிங் நடக்கவில்லை.

ஏனென்றால் தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக சூட்டிங்கை நிறுத்திவிட்டதாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

தனுஷின் பட பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அந்த படத்தை கைவிடும் அளவுக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

Overall Rating : Not available

Related News

பாலிவுட்டில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக…
...Read More
இந்தாண்டு 2020 பொங்கல் தினத்தில் தனுஷ்…
...Read More
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன்…
...Read More

Latest Post