‘தளபதி’ விஜய்யுடன் 2 காமெடியன்களை இணைக்க நெல்சன் திட்டம்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி-65’ல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாஸ்டர் பட குட்டி ஸ்டார் பூவையார் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு & விடிவி கணேஷ் ஆகிய இருவரும் தளபதி 65-ல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், சர்கார், பிகில் திரைப்படத்தை அடுத்து நான்காவது முறையாக விஜய் – யோகி பாபு கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post