‘சர்கார்’ படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் தான்.. – ஈஸ்வர் கார்த்திக்

‘சர்கார்’ படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் தான்.. – ஈஸ்வர் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshத்ரில்லர் படங்கள் என்றாலே எப்போதும் தனி மவுசு தான். ஏனென்றால் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை உன்னிப்பாக கவனிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்குயின்’. தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டை உருவாக்கியுள்ள இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் எந்தவொரு இயக்குநரிடமும் பணிபுரியவில்லை, எந்தவொரு குறும்படமும் இயக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான டீஸரின் மூலமே தன்னை இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். இணையத்தில் பலரும் யார் அந்த மாஸ்க் மேனாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில் தான் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கொடைக்கானல் படப்பிடிப்பு அனுபவங்கள், விஜய் சேதுபதியின் உதவி என இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பகிர்ந்த விஷயங்கள் இதோ:

18 நாளில் ‘பெண்குயின்’ கதை:

ஒரு படம் எப்போது தொடக்கம் என்பது தெரியாமலேயே 6 மாதம் போய்விட்டது. உடனே தான் ‘பெண்குயின்’ கதையை 18 நாட்களில் எழுதிமுடித்தேன். நாயகியை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணோட்டத்தில் தான் எழுதினேன். சாதாரண ஒரு பெண், அசாதாரண சூழலில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் ‘பெண்குயின்’. இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர் நடிக்கவில்லை என்றால், வேறு இருவரை அணுகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், கீர்த்தி சுரேஷிற்க்கு கதையைக் கேட்டவுடனே பிடித்துவிட்டது. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்படி கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அவருக்கு புதுமையாக இருக்கும் என தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்

20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ்

இதுவொரு த்ரில்லர் கதை என்பதால், 20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் என்று நிறைய கதையில் ஒளித்து வைத்துள்ளேன். ஆகையால் இது தான் கதை என்று என்னால் இப்பொது சொல்ல முடியாது. ஒரு லைனில் சொன்னேன் என்றாலே இது தான் கதை என்று யூகித்துவிட முடியும். ஒரு அம்மா தனது பையன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம். அந்த மகனைக் காப்பாற்ற ஒரு அம்மா எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை தான் காணவுள்ளீர்கள்.

தேனீக்கள் கடி

கொடைக்கானலில் காட்டில் படப்பிடிப்பு செய்துக் கொண்டிருக்கும் போது லைட்டின் வெளிச்சத்தால் தேன்கூடு ஒன்று கலைந்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தொடங்கி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கடித்துவிட்டது. அதில் 4 பேருக்கு அதிகமாக கடித்து, மயக்கம் போட்டுவிட்டார்கள்.

ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி, மயக்கம் போட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள் வந்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் செக் பண்ணி அரை நாள் கழித்து தான் அடுத்து ஷுட்டிங் போனோம்.

மலைப்பகுதியில் படப்பிடிப்பு என்பதால், தொடர்ச்சியாக 5 மணி நேரம் வரை தான் படப்பிடிப்பு செய்யவே முடியும். திடீரென்று மேகங்கள் மூடிவிடும் அல்லது மழை வந்துவிடும். அதற்கு இடையே தான் ஷுட்டிங்கே செய்தோம். நீங்கள் பார்க்கவுள்ள காட்சிகள் எல்லாமே அந்தக் கஷ்டத்துக்கு இடையே படமாக்கியது தான். ஒட்டுமொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்புச் செய்துள்ளோம்.

படக்குழுவினருக்கே தெரியாத மாஸ்க்மேன்

டீஸரின் இறுதியில் நீங்கள் பார்க்கும் மாஸ்க் மேன் ஷுட்டிங் முடியும்வரை யாருக்குமே தெரியாது. அவர் யார் என்பதை படமாக்கும் போது கூட ரொம்பவே குறைவான ஆட்களை வைத்துத் தான் படமாக்கினோம். இப்போது கூட படப்பிடிப்பு குழுவில் 20% பேருக்கு மட்டுமே அது யார் என்று தெரியும். கீர்த்தி சுரேஷிற்க்கும் ரொம்ப தாமதமாகத் தான் சொன்னோம்.

‘பெண்குயின்’ தலைப்பு ஏன்

‘பெண்குயின்’ என்ற தலைப்பு ஏன் என்றால், பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணித்தில் தான். அம்மா என்பவரை படத்தில் ஸ்பெஷலாக காட்டுகிறேன். வார்த்தை விளையாட்டு மாதிரி தான் தலைப்பை முடிவு செய்தேன். பெண்கள் எப்போதுமே குயின் தான். யாருமே சளைத்தவர்கள் அல்ல. இது ஒரு ஆணாதிக்க சமூகமாகவே பார்க்கிறேன். அதற்கு இடையில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறுகிறார்கள். ஆகையால் ‘பெண்குயின்’ என்று தலைப்பு வைத்தால் ஆண்ராஜாவுக்கு சமமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வைத்தேன். இந்த தலைப்புக்கு ஒரு பவர் இருக்கும் என்பதால் தான்.

தொழில்நுட்பக் குழுவினரின் உதவி

த்ரில்லர் கதை என்பதால் நிறைய பின்னணி இசைக் கொண்ட காட்சிகள் இருக்கிறது. அதனால் இசையமைப்பாளர் சரியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து சந்தோஷ் நாராயணனை முடிவு செய்தோம். நாங்கள் எடுத்தக் காட்சிகளை எல்லாம் பின்னணி இசையின் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

கார்த்திக் பழனி தான் ஒளிப்பதிவாளர். இதர மொழிகளில் படம் செய்திருந்தாலும், தமிழில் இது தான் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றாலே, அவருடைய ஒளிப்பதிவு எப்படி என்று தெரிந்துக் கொள்வீர்கள். தமிழ்த் திரையுலகிற்கு நல்லதொரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டார் என்று சொல்வீர்கள்.
அனில் கிருஷ் தான் எடிட்டர். எங்களுடைய காட்சிகளை எல்லாம் சரியாக எடிட் செய்து, த்ரில்லர் படத்துக்கு தேவையானதைக் கொண்டு வந்துவிட்டார். சக்தி வெங்கட்ராஜ் தான் கலை இயக்குநர். படத்தில் எது செட் என்று உங்களால் யூகிக்கவே முடியாது.

அப்படியொரு பணி. பல்லவி சிங் தான் ஆடை வடிவமைப்பாளர். கொடைக்கானல் பின்னணிக் கொண்ட படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு ஆடைகளை ஒவ்வொருவருக்கும் தனியாக டிசைன் செய்தார். டீஸரில் வரும் சார்லி சாப்ளினுக்கான உடை எல்லாம் ஸ்பெஷலாக வடிவமைத்தது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் தவிர்த்து மீதி அனைவருமே என்னுடைய நண்பர்கள். ஆகையால், நண்பர்களோடு இணைந்து ஒரு நல்ல த்ரில்லர் படம் பண்ணியிருக்கேன்.

ஓடிடியில் வெளியீடு

தியேட்டரிலேயே படம் பார்த்து வளர்ந்தவன் தான். வெப் சீரிஸ் எல்லாம் கடைசி 3 வருடங்களில் பிரபலமானவை தான். தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இந்த கொரோனா அச்சுறுத்தலால் அமேசானில் வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் மீண்டும் பழைய மாதிரி வருவார்களா என்று தெரியவில்லை.

அமேசானில் படம் 200 நாடுகளில் வெளியாகிறது எனும்போது பெரிய விஷயம். நிறையப் பேர் ஓடிடியில் இந்தப் படம் பார்த்தேன். அருமை என்று பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு மேஜிக். அதை நான் மறுக்கவில்லை. இப்போதுள்ள சூழல் அப்படியிருக்கிறது.

ஓடிடியில் பாஸ் செய்து, பாஸ் செய்து பார்ப்பார்கள். அப்படி பாஸ் பண்ணிப் பார்க்காத அளவுக்கு என் படம் நிற்கவேண்டும். அதில் மட்டும் வெற்றியடைய வேண்டும்.
விஜய் சேதுபதியின் உதவி
நாடகப் பின்னணியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அதிலுள்ள அனுபவங்களால் தான் திரையுலகில் படம் இயக்கியிருக்கிறேன்.

எனது நலம் விரும்பி விஜய் சேதுபதி. அவர் தான் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். கார்த்திகேயன் சந்தானம் சார் கதையைக் கேட்டுவிட்டு, உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

ஆகையால் விஜய் சேதுபதி, கார்த்திகேயன் சந்தானம் இருவருமே எனது திரையுலக வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமானவர்கள். எந்தவொரு அனுபவம் இல்லாமல் வருபவனை நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். நான் எப்படி இயக்குவேன், எப்படி ஷாட் வைப்பேன் என்று எதுவுமே தெரியாமல் இந்த வாய்ப்பை என்னையும், கதையையும் நம்பிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி!

நட்சத்திரங்கள்…

கீர்த்தி சுரேஷ்
லிங்கா
மாதம்பட்டி ரங்கராஜ்
மாஸ்டர் அத்வைத்
நித்யா கிருபா
ஹரிணி
திலக் ராம்மோகன்
தேஜன்ஜ்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

பாடல்கள்
விவேக்

ஸ்டன்ட்
பி.சி.

கலை
சக்தி வெங்கட்ராஜ் .M

எடிட்டிங்
அனில் கிருஷ்

ஒளிப்பதிவு
கார்த்திக் பழனி

இசை
சந்தோஷ் நாராயணன்

அசோசியேட் தயாரிப்பு
பவன் நரேந்திரா

நிர்வாக தயாரிப்பு

M. அசோக் நாராயணன்

இணை தயாரிப்பு
கல்ராமன்
S.சோமசேகர்
கல்யாண் சுப்ரமணியன்

தயாரிப்பு
கார்த்திகேயன் சந்தானம்
சுதன் சுந்தரம்
ஜெயராம்

எழுத்து, இயக்கம்
ஈஸ்வர் கார்த்திக்

கொரோனாவிடம் தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள்… பிரம்மா வேதனை

கொரோனாவிடம் தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள்… பிரம்மா வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director brammaதேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார்.

இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருந்தார்.

தற்போது இயக்குனர் பிரம்மா ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு உடல் மன சமூக ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன.

மேனிலை மாணவருக்கு எட்டு மணி நேரம், 6-9 மாணவருக்கு ஆறு மணி நேரம், சனிக்கிழமை பரீட்சைகள் என நர்சரி வாண்டுகள் கூட ஆன்லைனுக்கு விதிவிலக்கல்ல..

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்வி நிறுவனம் (NIMHANS) குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொளிகளைப் பார்க்கக் கூடாதென்கிறது.

போன் – லாப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகள் உருவாகும் என்று கண் சிகிச்சை மையங்களும் அவற்றின் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புதசைகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்றும் அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகமும் எச்சரிக்கின்றன.

மேலும் படைப்புத்திறன் குறைதல், பழகும் சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு என பட்டியல் நீள்கிறது.

இணையத்தொடர்பு இல்லாத, லாக் டவுனிற்கு கிராமங்களில் தஞ்சம் புகுந்துவிட்ட, நெட் பேக் கட்ட வசதியில்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது மூன்று மாதங்களாய் விடுபட்ட பாடத்தை யார் எடுப்பார்கள்?

கேரள தலித் மாணவிக்கு அடுத்து இங்கும் ஆன்லைன் வகுப்புக்கு இணைய வழியின்றி தற்கொலை செய்ய வேண்டுமா? இது இந்திய அரசியலைப்பு article 14ன் படி, பாகுபாடற்ற கல்விக்கான அடிப்படை உரிமையை உலுக்கும் குற்றம் அல்லவா?

இது மொபைல் மற்றும் செயலிகளின் வணிகமா அல்லது கல்வி எனும் பெரும் வணிகத்தின் புது பரிணாமமா?

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அதே துணிவு தமிழக அரசுக்கு இதிலும் வேண்டும். பள்ளிகளைப் பணித்து ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும்.

இமெயில் மூலம் வீட்டுப்பாடம், ஆன்லைன் ரேடியோ பாடம், என பல ஆலோசனைகள் இருந்தாலும் குறைந்த பட்சம் மின் திரையை பார்க்கும் நேரத்தை 1 – 2 மணி நேரமாக குறைத்தே ஆக வேண்டும்.

ஐ.பி.எஸ், விமானி, பொறியாளர், கலைஞர்களாக ஆகக்கூடிய குழந்தைகளின் கண்பார்வையையும் படைப்பாற்றலையும் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைன் என்னும் பிசாசிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…
Attachments area

அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் !

அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director swathiniDramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை வரும் முன்பாகவே அந்த வகையில் படங்கள் வந்திருக்கிறது. நாம் மிக அற்புதமான குடும்ப படங்களை ஏராளமாக தந்திருக்கிறோம். உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுபூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுபூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார். தற்போதைக்கு தலைப்பிடப்படாத “தயாரிப்பு எண் 7 “( Production no 7) ஆகிய இந்த படத்தில் அசோக்செல்வன், நிஹாரிகா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி தனது அறிமுக இயக்கமாக இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் துவக்கம் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் வேலைகளை துவக்கியதன் மூலம் இனிதே ஆரம்பித்தது.

கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் கூறியதாவது….

எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளை தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri Productions நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி தரும் குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார். அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் ஒரு வருட காலம் தனது திரைக்கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் இருப்பது மாதிரி திரைக்கதையை மெருகேற்றினார். அவரது கடும் உழைப்பு என்னை ஈர்த்தது. “ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக்செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி. இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக AR சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.

கொரோனா இல்லாத ‘நியூ’சிலாந்து..; பெண் பிரதமரால் கிடைத்த பெருமை

கொரோனா இல்லாத ‘நியூ’சிலாந்து..; பெண் பிரதமரால் கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

new zealand pmநீ வல்லராச இரு.. பேரரசா இரு.. எனக்கு எல்லாம் அரசும் ஒன்று தான். என உலக நாடுகளுக்கே சவால் விட்டு உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ்.

உலகளவில் உயிர் பலி எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.

பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் உலகளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து நாடு பெற்றுள்ளது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டதாம்.

ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 23 மட்டுமே என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் கொரானா இந்த நாட்டில் நுழைந்துள்ளது.

ஆனால் மார்ச் 25-ந் தேதி தான் அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து கடுமையாக பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்னர்.

நியூசிலாந்து மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

இறுதியாக சிகிச்சைக்கு பெற்றவர்கள் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 2 வாரங்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரானா வைரஸ் தொற்று கிடையாது.

இதை பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்துள்ளது.

ஹீரோ அனிருத்.. புரொடியூசர் சிவகார்த்திகேயன்… ரசிகர்கள் குஷி

ஹீரோ அனிருத்.. புரொடியூசர் சிவகார்த்திகேயன்… ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan anirudhதனுஷ் சிவகார்த்திகேயனின் நட்பு கூட்டணியில் இணைந்தார் அனிருத்.

ஆனால் தற்போது தனுஷ் கொஞ்சம் விலக.. சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.

சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு அனிருத் தான் ஆஸ்தான் இசையமைப்பாளர்.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் உயர்ந்துவிட்டார்.

அனிருத்தும் ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷ்ஷான ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் பாராட்டித் தள்ள சிவகார்த்திகேயன் ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

அவர் ‘சார்ர்ர்ர், எப்பன்னாலும் சரி, என்னிக்கானாலும் சரி…. நீங்க ஹீரோவா நடிக்கிற ஃபர்ஸ்ட் படம் புரொட்யூசர் நான்தான்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த கமெண்ட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’தலைவன் இருக்கின்றான்’: கமல் – ஏஆர் ரஹ்மான் மீண்டும் கூட்டணி..?

’தலைவன் இருக்கின்றான்’: கமல் – ஏஆர் ரஹ்மான் மீண்டும் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal ar rahmanகமல் நடித்த இந்தியன், பஞ்ச தந்திரம், தெனாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏஆர். ரஹ்மான்.

விரைவில் இந்த கூட்டணி கமல் நடித்து தயாரித்து இயக்கவுள்ள ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்திலும் இணைய வாய்ப்புள்ளாக தெரிகிறது.

’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் சிவாஜி, கமல் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

வடிவேலு, விஜய்சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கமல், ரஹ்மான் இணைந்து உரையாடவுள்ளனர்.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ’தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows