அட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.?

அட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and rashmikaசர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தை அட்லி இயக்கவுள்ளார்

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.

ஆனால் தற்போது தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் உள்பட சில படங்களில் நடித்தவர் இந்த ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன்

ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு
எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி
கலை இயக்குனர் முத்துராஜ்
சண்டை அனல் அரசு
பாடல்கள் விவேக்

ஆகியோரும் பணிபுரிய உள்ளனர்.

அஜித்தின் தல-59 படம் பற்றி டைரக்டர் வினோத் விளக்கம்

அஜித்தின் தல-59 படம் பற்றி டைரக்டர் வினோத் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director H Vinothசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கியவர் எச்.வினோத்.

இவர் அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என கூறப்பட்டது.

இந்த தகவல்கள் பல நாட்கள் வலம் வந்தாலும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து டைரக்டர் எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை”. இவ்வாறு கூறியுள்ளார்

காற்றின் மொழி நாயகி ஜோதிகாவுக்கு சிம்பு-வித்யாபாலன் வாழ்த்து

காற்றின் மொழி நாயகி ஜோதிகாவுக்கு சிம்பு-வித்யாபாலன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothikaராதா மோகன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் நாளை ரிலீசாகவுள்ளது.

இதில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிம்பு கூறியுள்ளதாவது…

நான் காற்றின் மொழி படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளேன். ஜோதிகா மேடத்திற்காக நான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது. படத்தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும் நன்றி. என சிம்பு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

கின்னஸ் சாதனை செய்ய செம சான்ஸ்.; வீடியோ பார்த்து கலந்துக்குங்க

கின்னஸ் சாதனை செய்ய செம சான்ஸ்.; வீடியோ பார்த்து கலந்துக்குங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennaiyil Oyilattam Event You can too participate in Guinness Recordதிரை இசையில் கிராமத்து மணம் கமழும் பாடல்கள் தருபவர் பின்னணி பாடகர் வேல்முருகன்.

இவர் தற்போது ஒரு புதிய முயற்சியாக கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : தமிழின் பெருமையும், தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் விதமாக ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நவ., 25ல் ஞாயிறு அன்று, சென்னை திருநின்றவூர், ஜெயா கால்லூரியில், மதியம் 3.00 மணிக்கு நடைபெறுகிறது.” என்றார்.

இந்த முயற்சிக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ், கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், வையாபுரி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்’ என்றார்.

மேலும் திரையுலகை சேர்ந்த பலரும் இந்த கின்னஸ் சாதனையை நேரில் காண வருகை தரவுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை புகழ் நிருத்திய நித்யாலயா நிறுவனத்தை சேர்ந்து சௌமியா மற்றும் ராஜேஷ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இதில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். வயது வரம்பு. ஒரு 10 நிமிட வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்தும் நீங்கள் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

இறுதியாக கின்னஸ் சாதனை சான்றிதழும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் தரப்பட்டுள்ளது.

9283 102030 / 98844 00790

Chennaiyil Oyilattam Event You can too participate in Guinness Record

எளிதான நடன அசைவுகளே உள்ளன. அந்த வீடியோ இதோ…

https://www.youtube.com/watch?v=o-rtQGusdFc

காற்றின் மொழி-யை முதல் நாளே காண கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

காற்றின் மொழி-யை முதல் நாளே காண கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நேஷனல் கல்லூரி நிர்வாகமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை பற்றி கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான திருமதி. வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது. நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் , தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது . 36 வயதினிலே , மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.

மகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து மாணவிகளும் கண்டுகளித்தோம் . அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் “ காற்றின் மொழியும் “ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் “ மொழி “ எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும், கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்கள் .

மேலும் , சினிமாவில் எப்போதும் எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையில்லெடுக்கும் நடிகை ஜோதிகாவை பாராட்டியே தீரவேண்டும்.அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.

கமர்ஷியல் இல்லாமல் நம்மை அசத்த வரும் *அழியாத கோலங்கள் 2*

கமர்ஷியல் இல்லாமல் நம்மை அசத்த வரும் *அழியாத கோலங்கள் 2*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prakash raj and archanaபடம் ஆரம்பித்தது.

அர்ச்சனா தெரிந்தார்.

அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது…

மெதுவாக ஆரம்பித்த படம் …

நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது…

பிரகாஷ்ராஜ் வந்தார்..

நடித்தார் ..என்று சொல்ல முடியாது…

எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்..

போலீஸ் வேடத்தில் நாசர்…காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார்…

ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்…

இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி…

அடிதடி இல்லை…குத்து பாட்டு இல்லை…காமெடி இல்லை.

டுயட் இல்லை…

இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்…

இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே. அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொண்டாட வேண்டிய படமே..இது

அர்ச்சனா ரேவதி பிரகாஷ்ராஜ் நாசர் இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும்…

வாழ்த்துக்களுடன்

மௌனம்ரவி

More Articles
Follows