நடிகர் உமாபதி தம்பி ராமையா இயக்கிய படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட்

நடிகர் உமாபதி தம்பி ராமையா இயக்கிய படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன், சுபா தேவராஜ், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை துரைமுருகன், கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

*நடிகர்கள்*

சமுத்திரக்கனி, தம்பிராமையா, ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன், சுபா தேவராஜ், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை துரைமுருகன், கொட்டாச்சி மற்றும் பலர்.

*தொழில்நுட்ப குழுவினர்*

தயாரிப்பு ; சுரேஷ் காமாட்சி

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இசை ; தம்பிராமையா

இயக்கம் ; உமாபதி ராமையா

பின்னணி இசை ; சாய் தினேஷ்

ஒளிப்பதிவு ; கோபிநாத் & கேதார்நாத்

படத்தொகுப்பு ; R.சுதர்ஷன்

கலை ; வைரபாலன் & வீரசமர்

சண்டை பயிற்சி ; ஸ்டண்ட் சில்வா

நடனம் ; சாண்டி & பிருந்தா

ஆடை வடிவமைப்பு ; நவதேவி ராஜ்குமார்

தயாரிப்பு மேற்பார்வை ; சுப்ரமணியன்

தயரிப்பு நிர்வாகம் ; KH ஜெகதீஷன் மற்றும் பிரவின் குமார்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

ராஜா கிளி

Umapathy Ramaiah’s Raja Kili movie got U/A certificate

OFFICIAL சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50வது பட அப்டேட்

OFFICIAL சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50வது பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷின் 50-வதுபடத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதனை, படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

தனுஷ்

dhanush’s D50 movie Shoot Begined today

சினிமாவில் ரெண்டே ஜாதிதான்.; ரேவதியை கமல் கட்டிக்கலையா.? விஜய் ஜாதியை கேட்கல.. – பேரரசு

சினிமாவில் ரெண்டே ஜாதிதான்.; ரேவதியை கமல் கட்டிக்கலையா.? விஜய் ஜாதியை கேட்கல.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சலங்கை துரை இயக்கியுள்ள ‘கடத்தல்’ பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஜூலை மாதத்தில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசியதாவது…

கடத்தல் இது என்ன கடத்தல், ஆள் கடத்தலா? எம் எல் ஏ கடத்தலா? . உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.

சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள்.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது.

சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள்.

ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்சனையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும் கனக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது.

இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி. சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை.

ஜெயித்தவன்.. ஜெயிக்கப் போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை. எனக்குச் சொல்லவே வலிக்கிறது.

உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா அவரை ஜாதி பார்த்தார்களா சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா.

அவரை ஜாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை அஸிடெண்டாக சேர்த்த போது நான் என்ன ஜாதி என கேட்க வில்லை. விஜய் சார் வாய்ப்பு தந்தார்.. அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சௌத்திரி சார் ஜாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குநரே இல்லை. சிறுபான்மையினர் ஜாதி மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள்.

இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன் கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை.

ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படமா அது தேவர் ஜாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம்.

உண்மையில் தேவர் ஜாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டாம் ஏனெனில் அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜி அதை மறுத்துப் பேசமாட்டார் அந்தப்படத்தில் ரேவதி யார் ?, தாழ்ந்த ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியதை பற்றி யாரும் பேசவில்லை.

இது போல முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சனை ஆக்காதீர்கள். சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி

Only 2 caste in cinema says Director Perarasu

ரஜினி இல்ல.. ‘ஜெயிலர்’ இல்ல.. நீ மட்டும் இருக்க.; என்னையா பண்ணி வச்சிருக்க சன் பிக்சர்ஸ்.?

ரஜினி இல்ல.. ‘ஜெயிலர்’ இல்ல.. நீ மட்டும் இருக்க.; என்னையா பண்ணி வச்சிருக்க சன் பிக்சர்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜூலை 6ஆம் தேதி இந்த படத்தில் தமன்னா ஆடியுள்ள ‘காவாலா….’ என்ற பாடல் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருவதால் அதனை முன்னிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில் ரஜினியும் இடம்பெறவில்லை ஜெய்லர் என்ற டைட்டிலும் இடம் பெறவில்லை.

பொதுவாக ரஜினி பட போஸ்டர்களில் ரஜினிகாந்த் முகம் மட்டுமே ஹைலைட்டாக இருக்கும்.. ஆனால் இதில் எதுவுமே இல்லை.

ஆனால் சன் பிக்சர்ஸ் லோகோ மட்டும் தவறாமல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் புரோமோ வீடியோவில் பாடல் ஹிட் ஆகிலேனாலும் பரவாயில்லை… சீக்கிரம் பாட்டை கொடுய்யா.. என அனிருத்திடம் நெல்சன் கேட்கிறார்.. இதுவும் ரசிகர்கள் மத்தியில்.. “அந்த வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்? என்ற கருத்தும் நிலவி வருகிறது

ஆகவே ரஜினி ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

#Kaavaalaa fever starts❤️‍🔥Promo Trending No.1 on Youtube!

▶️ https://t.co/Jd1vmd0F0i

@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer https://t.co/aML9cMhP6h

Rajini fans reaction for Kaavaala promo from Jailer

உங்களால் பாலிவுட் மிரளும்.; மீண்டும் இணையும் சூர்யா – சுதா – ஜிவி.பிரகாஷ்

உங்களால் பாலிவுட் மிரளும்.; மீண்டும் இணையும் சூர்யா – சுதா – ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் 10 விதமான கெட்டப்களில் சூர்யா நடிப்பதால் படம் மிகப் பிரம்மாண்டமாக பான் இந்திய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சிவா இயக்கத்தில் சூரியா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்ற செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் சூர்யா 43 படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுதா – இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் மீண்டும் சூர்யாவுடன் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜூலை 5.. சுதாக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜிவி பிரகாஷ் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி பதிப்பு அருமையானதாக இருக்கும் பாலிவுட் இந்த படத்தை பார்த்து மிரளும் என்றும் அடுத்த தமிழ் படம் நெருப்பாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

சூர்யா - சுதா - ஜிவி.பிரகாஷ்

Suriya 43 updates by GV Prakash

Happy birthday dear @Sudha_Kongara …. Waiting for the world to witness the magic u have done with #SooraraiPottru Hindi version which is going to stun Bollywood … and ur next after that in tamil which is 🔥🔥🔥🔥🔥

புது தயாரிப்பாளர்களுக்கு கவுன்சிலிங்க்..சினிமா தியேட்டர்களில் இருப்பதுதான் நல்லது… – முரளி

புது தயாரிப்பாளர்களுக்கு கவுன்சிலிங்க்..சினிமா தியேட்டர்களில் இருப்பதுதான் நல்லது… – முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சலங்கை துரை இயக்கியுள்ள ‘கடத்தல்’ பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஜூலை மாதத்தில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் முரளி பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம், கடத்தல் இயக்குநர் சலங்கை துரை நிறையப் போராடி இந்தப்படத்தை எடுத்ததாகச் சொன்னார்கள், இந்தக்காலத்தில் படமெடுப்பது மிகக்கடினமாகத் தான் இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பல வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். புதுத் தயாரிப்பாளர்களுக்கு வாராவாரம் எங்கள் சங்கத்தில் கவுன்சிலிங்க் கொடுத்து வருகிறோம்.

சினிமா ஒரு அழகான கலை, நிறையத் தயாரிப்பாளர்கள் வர வேண்டும், தயாரிப்பாளருக்குப் பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி வருகிறோம்.

சினிமா தியேட்டர்களில் இருப்பது தான் என்றும் நல்லது. சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தாருங்கள் மக்களிடம் முடிவை விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தப்படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி.

புதிய தயாரிப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த அளவு உதவிகரமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது , சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பல ஆதரவு இருப்பதாக இதிலிருந்து தெரிகிறது.

இதுவே படத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது , சிறு படங்களுக்குப் பத்திரிக்கையாளர்கள் தான் ஆதரவு தர வேண்டும் கண்டிப்பாக தியேட்டருக்கு இந்தப் படத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் நன்றி.

Counselling for New producers says President Murali

More Articles
Follows