தடையை உடைத்து தீபாவளி தினத்தன்று *சர்கார்* ரிலீஸ்

தடையை உடைத்து தீபாவளி தினத்தன்று *சர்கார்* ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Release poster and Court Case news updatesசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் சர்கார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், நான் எழுதிய செங்கோல் படக்கதையை தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

அந்தக்கதையை திருடி தான் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி உள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளேன். அவர்களும் இது என்னுடைய கதை தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆகவே எனக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். படத்தின் தலைப்பில் என்னுடைய கதை என இடம் பெற செய்ய வேண்டும், அதுவரை படத்தை திரையிட கூடாது, இதை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் முருகதாஸ், படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அக்., 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதுவரை சர்கார் படத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறினார்.

இதனிடையே சர்கார் படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்று கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது.

அதனையடுத்து நவ., 6-ம் தேதி, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அடுத்த போஸ்டரை வெளியிட்டனர்.

Sarkar Release poster and Court Case news updates

க்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் *துப்பாக்கி முனை*

க்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் *துப்பாக்கி முனை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabus Thuppaki Munai censored with U certificateதினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’.

சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

Vikram Prabus Thuppaki Munai censored with U certificate

விஸ்வாசம் செகண்ட் லுக்கும் இப்படி? படம் எப்படி? அதிருப்தியில் ரசிகர்கள்

விஸ்வாசம் செகண்ட் லுக்கும் இப்படி? படம் எப்படி? அதிருப்தியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Viswasam officially confirmed its release dateசத்யஜோதி தயாரிப்பில் அஜித் இரு வேடங்களில் நடித்து வரும் படம் விஸ்வாசம்.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால் இது அனைவருக்கும் பிடித்தமான வகையில் இல்லை. மேலும் விஸ்வாசம் பட டைட்டில் டிசைனே சரியாக இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது அதை விட மோசமாக உள்ளதாக அஜித் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் போஸ்டர்களே இந்த லட்சணத்தில் இருந்தால், படம் எப்படியிருக்கும்? என்று சிவா மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Ajith fans disappointment about Viswasam 2nd look poster

viswasam 2nd look troll

1980-களில் நடந்த உண்மை சம்பவம் தான் *சிதம்பரம் ரயில்வே கேட்*

1980-களில் நடந்த உண்மை சம்பவம் தான் *சிதம்பரம் ரயில்வே கேட்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Massive set for Chidambaram Railway Gate Tamil movieகிரவுன் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் படம் “சிதம்பரம் ரயில்வே கேட்”.

1980ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிவபாவலன்.

உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக பேசப்போகும் படம் சிதம்பரம் ரயில்வே கேட்.

1980 களைப்போல சிதம்பரம் நகரம் மோகன் ஸ்டூடியோவில் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்புராயன், பாலாசரவணனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு ஆர்.வேலு, சண்டை சூப்பர் சுப்புராயன், பாடல்கள் பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை சுசி காமராஜ்.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.

Massive set for Chidambaram Railway Gate Tamil movie

பொங்கலுக்கு *விஸ்வாசம்* ரிலீஸ்.; என்ன செய்வார் *பேட்ட* ரஜினி.?

பொங்கலுக்கு *விஸ்வாசம்* ரிலீஸ்.; என்ன செய்வார் *பேட்ட* ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Viswasam officially confirmed its release dateசத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் 2 வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு அஜித் வயதானவராகவும் ஒருவர் இளமையாகவும் தோன்றுகிறார்.

இந்நிலையில் இன்று காலை சற்றுமுன் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இது வழக்கமான கிராமத்து பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுகிறது.

அந்த போஸ்டரில் 2019 பொங்கல் தினத்தில் விஸ்வாசம் ரிலீஸாகும் என உறுதி செய்துள்ளனர்.

ரஜினி நடித்துள்ள பேட்ட சூட்டிங் முடிவடைந்ததை தொடர்ந்து அவரது படமும் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

தற்போது விஸ்வாசம் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதால் இரு படங்களும் மோதல் இருக்குமா? அல்லது பேட்ட வேறு தேதியில் ரிலீஸாகுமா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

Ajith Viswasam officially confirmed its release date

viswasam movie stills

1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்!

1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhuminவி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள விகாஷ் வித்யாலயா பள்ளியின் தாளாளர், தனது பள்ளியில் பயிலும் சுமார் 1000 மாணவ, மாணவிகளை இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் இத்திரைப்படத்தை காண ஏற்பாடு செய்துள்ளார்.

தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும், பல மாவட்டங்களில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியருக்கு இத்திரைப்படத்தை சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி பி விஜி தெரிவித்தார்.

More Articles
Follows