முருகதாஸை அடுத்து அட்லி.; மீண்டும் பழைய ரூட்டில் விஜய்.?

முருகதாஸை அடுத்து அட்லி.; மீண்டும் பழைய ரூட்டில் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 65 and Thalapathy 66 movie director updatesகடந்த 8 ஆண்டுகளில் 10 படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய்.

இதில் துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட 3 படங்களை ஏஆர். முருகதாஸ் இயக்கினார். தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட 3 படங்களை அட்லி இயக்கினார்.

இப்படியே இந்த இரண்டு இயக்குனர்களுக்கும் மாறி மாறி தன் பட வாய்ப்பை கொடுத்தார் விஜய்.

ஜில்லா, தலைவா, புலி, பைரவா படங்களை வேறு இயக்குனர்கள் இயக்கினார்கள்.

தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் முருகதாஸ், அட்லிக்கே தன் படங்களை விஜய் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 65 படத்தை முருகதாஸ் (துப்பாக்கி 2) இயக்குவார் என்றும் தளபதி 66 படத்தை அட்லி இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijays Thalapathy 65 and Thalapathy 66 movie director updates

உதயநிதி & அருண்ராஜா காமராஜை இணைக்கும் அஜித் பட தயாரிப்பாளர்.?

உதயநிதி & அருண்ராஜா காமராஜை இணைக்கும் அஜித் பட தயாரிப்பாளர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith movie Producer team up with Arunraja Kamaraj and Udhayanidhi நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்கிய கனா திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கிலும், கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆகி ஹிட்டானது.

தற்போது, அடுத்த படத்தை இயக்குவதற்காக பிசியாக இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை மற்றும் தற்போது நடித்துவரும் வலிமை ஆகிய படங்களை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith movie Producer team up with Arunraja Kamaraj and Udhayanidhi

BREAKING கமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்.; கௌதமியே காரணம்!

BREAKING கமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்.; கௌதமியே காரணம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Reason behind Corona home quarantine sticker in Kamals houseகொடிய வைரஸ் ஆன கொரோனா உலகமெங்கும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கே வரும்போது இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் யார் யாரெல்லாம் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பி உள்ளார்களோ அவர்கள்
அனைவரும் இல்லத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு இந்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் கட்சி அலுவலம் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என மாநகராட்சி சார்பில் முதலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த போட்டோ வைரலாக தொடங்கியது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

ஆனால் சிறிது நேரத்தில் அந்த நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளதாவது…

நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ள நிலையில் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பது முறை.

அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதன்பின்னர் கவுதமி வசிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் கிட்டதட்ட்ட 10 வருடங்களாக நடிகர் கமலும் நடிகை கவுதமியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாகவே குடும்பம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா நோட்டீஸ் தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஆழ்வார்ப்பேட்டை முகவரியில் தான் தங்கவில்லை என்றும் கட்சியின் அலுவலகம் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தலால் தன்னை இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Reason behind Corona home quarantine sticker in Kamals house

ஞானவேல் ராஜா தயாரிப்பில் இணையும் சிம்பு-ஆர்யா.; டைரக்டர் இவரா.?

ஞானவேல் ராஜா தயாரிப்பில் இணையும் சிம்பு-ஆர்யா.; டைரக்டர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya Will Play Villain Role In Simbus next movieசிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இதன் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குவார் என கூறப்படுகிறது.

இதில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பார் எனவும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Arya Will Play Villain Role In Simbus next movie

கொரோனா தடுப்பு.: மக்கள் நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள்

கொரோனா தடுப்பு.: மக்கள் நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Nadu govt seeks public donation to combat Coronaஉலக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தன் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போதிலும் மக்கள் கொரோனா பயம் அறியாது ஊர்களில் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுக்க போராடி வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல கோடிகளை ஒதுக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு.

பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்
பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கி எண் இதோ….

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்.

Tamil Nadu govt seeks public donation to combat Corona

நடிகர் சேது இறுதிச்சடங்கில் சந்தானம் செய்த காரியம்..; நண்பேன்டா

நடிகர் சேது இறுதிச்சடங்கில் சந்தானம் செய்த காரியம்..; நண்பேன்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam attends Actor Dr Sethus funeral despiteகடந்த 2013-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன்.

இந்த படம் இல்லாமல் வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு டாக்டராகவும் வலம் வருபவர். புகழ்பெற்ற தோல் மருத்துவர் ஆவார்.

இவர் உமையாள் என்ற பெண்ணை 2016ல் திருமணம் செய்தார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மார்ச் 26 இரவு மாரடைப்பால் காலமானார் சேதுராமன்.

இதனையடுத்து அவரின் அவரின் இறுதிச்சடங்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர் சந்தானம்.
சோகமும் கண்ணீருமாக காணப்பட்டார் சந்தானம்.

இறுதி சடங்கில் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார். இது அனைவரையும் அழ வைக்கும் தருணமாக இருந்தது.

ஒரு நண்பனை இழந்தவனுக்கு தான் அதன் வலி தெரியும். இவர் தான் உண்மையான நண்பன்…

Santhanam attends Actor Dr Sethus funeral despite

Santhanam attends Actor Dr Sethus funeral despite

More Articles
Follows