விஜய்-முருகதாஸ் இணையும் தளபதி 65 பட அறிவிப்பு எப்போது..?

விஜய்-முருகதாஸ் இணையும் தளபதி 65 பட அறிவிப்பு எப்போது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ar murugadoss‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து விஜய், ஏஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இந்த படம் விஜய்யின் நடிப்பில் 65 படமாக உருவாகவுள்ளதால் இதை தளபதி 65 என்று அழைக்கின்றனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள தகவல்படி முருகதாஸ் ஸ்கிரிப்புடன் தயாராக உள்ளாராம்.

விஜய்யின் சம்பள விவகாரத்தையும் பேசி முடித்துவிட்டார்களாம்.

எனவே விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகலாம்.

அது ‘துப்பாக்கி 2’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பவன் கல்யாண்-விஜய்சேதுபதி கூட்டணியில் ‘ஐயப்பனும் கோஷியும்’

பவன் கல்யாண்-விஜய்சேதுபதி கூட்டணியில் ‘ஐயப்பனும் கோஷியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi pawan kalyanமலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய பல மொழி இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் பிரித்விராஜ்-பிஜுமேனன் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனவே இவர்களின் கேரக்டரில் நடிக்க சிறந்த நடிகர்கள் வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கில் பவன் கல்யாண் இப்படத்தில் நடிக்க விரும்புகிறார் என தகவல் வந்துள்ளது.

பிஜுமேனன் நடித்த அய்யப்பன் நாயர் என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்க பவன் கல்யாண் விரும்புகிறாராம்.

பிரித்விராஜ் கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

வரும் செப்டம்பர்-2ஆம் தேதி பவன் கல்யாண் பிறந்தநாளன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியின் தர்மதுரை 2 & 4 படமும் ரெடி.; RK சுரேஷ் அறிவிப்பு

விஜய்சேதுபதியின் தர்மதுரை 2 & 4 படமும் ரெடி.; RK சுரேஷ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi rk sureshசீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா, சௌந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது.

இதில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றது.

தற்போது படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில்…

“இன்று ஆகஸ்ட் 19. தர்மதுரை திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது. சீனுராமசாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் விரைவில் தர்மதுரை 2 -ம் ரெடியாக இருக்கிறது.

தர்மதுரை போன்றே அதையும் பாசிட்டிவ்வான இளைஞனின் கதையாக சீனுராமசாமி உருவாக்குவார். அதையும் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெளியிடும் என்று கூறிக் கொள்கிறேன்.

மேலும் 4 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

SPB உடல்நிலையில் முன்னேற்றமில்லை; பிரார்த்தனையே மீட்டெடுக்கும்.. சரண் உருக்கம்

SPB உடல்நிலையில் முன்னேற்றமில்லை; பிரார்த்தனையே மீட்டெடுக்கும்.. சரண் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை குறித்து எஸ்பி. சரண் அவ்வப்போது வீடியோவில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை ரஜினி, கமல், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய மக்களிடம் வேண்டுகோள் விடுத்த்னர்.

இன்றைய வீடியோவில் சரண் அவர்கள் எஸ்பிபி.யின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.

அதில்.. எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும், பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அனைவரது பிரார்த்தனையும் எஸ்பிபியை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

IMG-20200820-WA0099

ரஜினிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் சிவா

ரஜினிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mirchi sivaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 165 படங்களில் நடித்து விட்டார்.

இதில் சூப்பர் ஹிட் படங்களே 100ஐ தாண்டிவிடும். அதிலும் முக்கியமாக சில படங்களை எடுத்தால் அண்ணாமலை, வீரா மற்றும் பாட்ஷா படங்கள் நிச்சயம் மூன்று இடம்பெறும்.

இந்த மூன்றையும் இயக்கியவர் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா.

ரஜினியுடன் இவர் இணைந்த இந்த மூன்று படங்களும் தொடர் ஹிட் அடித்தன.

தற்போது சினிமாவை விட்டு விலகி டிவி சீரியல்களை இயக்கி கொண்டிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சாக்லேட் என்ற சீரியலை இயக்கி இருந்தார்.

தற்போது மிர்ச்சி சிவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

ஏற்கெனவே சிவா நடிப்பில் சுமோ என்ற படம் ரிலீசுக்கு தயராக இருக்கிறது.

தனுஷுடன் நடித்துவிட்டு படத்தை குறை சொன்ன சிவகார்த்திகேயன் பட நடிகர்

தனுஷுடன் நடித்துவிட்டு படத்தை குறை சொன்ன சிவகார்த்திகேயன் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhay deol ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த பாலிவுட் படம் ராஞ்சனா 2013ல் ரிலீசானது.

இதில் தனுஷ் உடன் சோனம் கபூர், அபய் தியோல் நடிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த அபய் தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஞ்சனா படத்தை கடுமையாக விமர்த்துள்ளார்.

பொதுவாக ஒரு படத்தை ரசிகர்கள் விமர்ச்சிப்பார்கள். இதில் படத்தில் நடித்தவரே விமர்சித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அவரின் பதிவில்… “இந்தப் படம் பிற்போக்குத்தனமானது. பெண்ணின் உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது.

பெண்ணை ஒரு ஆண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். பிறகு பெண் ஒப்புக்கொள்கிறார். ஆனால், உண்மையில் நிஜத்தில் அப்படியல்ல.

சினிமாவில் மட்டுமே பெண் ஒப்புக்கொள்வாள். பெண்களை துரத்துவது பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

இதனை திரையில் கொண்டாடுவது என்பது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம்சாட்டுவதில்தான் சென்று முடியும்” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows