சுல்தான் படத்தை மனைவிக்கு காட்ட கணவரின் வித்தியாச ஏற்பாடு.!

சுல்தான் படத்தை மனைவிக்கு காட்ட கணவரின் வித்தியாச ஏற்பாடு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salmankhans sultan special show for one coupleரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சல்மான்கான் நடித்த சுல்தான் நாடு முழுவதும் வெளியானது.

முதல் நாளிலேயே இப்படத்திற்கு ரூ. 38 கோடி வரை வசூல் கிடைதுள்ளதாக கூறப்படுகிறது.

அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆன ஒரு சினிமா தியேட்டரில் ஒரு காட்சியின் அனைத்து டிக்கெட்டுகளையும் (120 டிக்கெட்) சங்கர் முசாபீர் என்பவர் புக் செய்து இருந்தார்.

ஆனால் அந்த காட்சியை அவர் தனது மனைவி கீதாஞ்சலியுடன் மட்டுமே கண்டு களித்திருக்கிறார்.

இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாம்.

தன் மனைவி சல்மான்கானின் தீவிர ரசிகை என்பதால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இந்த சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தாராம் கணவர் சங்கர் முசாபீர்.

ரஜினிகாந்துக்கு மகிழ்ச்சி… சிம்புவுக்கு சிறப்பு..!

ரஜினிகாந்துக்கு மகிழ்ச்சி… சிம்புவுக்கு சிறப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

java bikeதமிழ் சினிமாவில் பன்ச் டயலாக்குகளை பிரபலப்படுத்தியவர் ரஜினி. இவரது படங்களில் பன்ச் டயலாக்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது.

இவரைத் தொடர்ந்து இன்றைய டாப் ஹீரோக்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை இதை பாலோ செய்கின்றனர்.

இந்நிலையில் கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல்களில் ரஜினிகாந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தை படு பாப்புலர் ஆகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்தும் வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) என்ற படத்தில் சிறப்பு என்ற வார்த்தை இணையக்கூடும் எனத் தெரிகிறது.

சற்றுமுன், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் சிம்பு பயன்படுத்தக்கூடிய ஜாவா பைக்கின் போட்டோவை பகிர்ந்து, #Sirappu சிறப்பு என குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் தொடர்பான தகவல்களில் ‘சிறப்பு’ தவறாமல் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

யுவன் இசையமைக்க உள்ள இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் ஸ்ரேயா.

‘அதுல இல்லாமலே பேச வைச்சவரு சுந்தர்.சி’ – குஷ்பு பெருமிதம்.

‘அதுல இல்லாமலே பேச வைச்சவரு சுந்தர்.சி’ – குஷ்பு பெருமிதம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar c and khusbooஇயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி வாகை சூடி வருபவர் சுந்தர் சி.

தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் இயக்கவிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் #SundarC என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது.

இதுகுறித்து இவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ, தன் ட்விட்டரில் பக்கத்தில் கூறியதாவது….

“எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமலே தன் பணி மூலம் தன்னை பற்றி பேசவைத்தவர் சுந்தர் சி. நான் பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முதலில் விஜய்சேதுபதி… அப்புறம்தான் டி.ஆர் வருகிறார்…!

முதலில் விஜய்சேதுபதி… அப்புறம்தான் டி.ஆர் வருகிறார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiகே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

இந்த வித்தியாசமான கூட்டணி அறிவிக்கப்பட்ட உடனே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜூலை 11ஆம் தேதி இதன் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

சில நாட்களுக்கு பின்னர்தான் டி.ராஜேந்தர் இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

விஜய் ரசிகர்களை பெருமைப்படுத்திய தெறி டீசர்..!

விஜய் ரசிகர்களை பெருமைப்படுத்திய தெறி டீசர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theri teaser cross 1 crore views in youtubeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் டீசர் மார்ச் 20ஆம் தேதி வெளியானது.

வெளியான 10 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர் எண்ணிக்கையை இது பெற்றது.

மேலும் 1 லட்சம் ஹிட்ஸ்களையும் அள்ளியது. இது யூடியுப்பில் சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 1 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

விஜய் நடித்த படங்களிலேயே அதிக யுடியூப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இது பார்க்கப்படுகிறது.

எனவே விஜய் ரசிகர்கள் இது தங்களுக்கு கிடைத்த பெருமை என தெரிவித்து வருகின்றனர்.

கேன்சர் ரசிகைகளுக்கு கூந்தலை தானம் செய்த சார்மி..!

கேன்சர் ரசிகைகளுக்கு கூந்தலை தானம் செய்த சார்மி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Charmy donated his hair for cancer patientsசிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமானவர் சார்மி.

இதனைத் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நடித்து வந்தார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு இவரது தாராள மயம் அத்துப்படி.

இந்நிலையில், தனது அழகான கூந்தலை வெட்டி அதை இரண்டு கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

அந்த இருவரும் சார்மியின் தீவிர ரசிகைகளாம். அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மியை சந்தித்துள்ளனர்.

அப்போது சார்மியின் கூந்தலை பார்த்து வியந்து போனார்களாம்.

இதனால் அவர்களுக்காக தனது கூந்தலை கட் செய்து விக்காக தயாரித்து அன்பளிப்பாகக் கொடுத்து விட்டாராம்.

இவரின் இந்த வித்தியாசமான விக் தானம்தான் தற்போது தெலுங்குப் பட ஹாட்டான செய்தி.

More Articles
Follows