சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்!!

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)எல்லைகளை கடந்து அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பை பேணுவதிலும் கிச்சா சுதீப் சளைத்தவர் அல்லர். நாட்டின் அடையாளமிக்க பிரபலங்கள் அனைவரிடமும் அவர் அன்பை போற்றி பாதுகாத்து வருகிறார். அந்த அன்பு அவரின் “பயில்வான்” படத்தில் வழியே பெருகி வருகிறது.

“பயில்வான்” திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் ரிலிஸாவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.

பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
அவர் பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து “பயில்வானை” பிரபலத்தியுள்ளார்.

சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றி கூறியபோது…
“சல்மான் கானின் இந்த நட்புரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் தன்னுடைய பிரத்யேக வழியில் “பயில்வான்” படத்தை பிரபலபடுத்தியது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR motion pictures நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர்.க் இப்படத்தில் ஆகண்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

ஒரு வெற்றிக்கே தலைகால் புரியாமல் ஆடும் இயக்குநர்கள் : தண்டகன் ‘ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு !

ஒரு வெற்றிக்கே தலைகால் புரியாமல் ஆடும் இயக்குநர்கள் : தண்டகன் ‘ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘தண்டகன்’ பட ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யாவின் நெகிழ்ச்சிக் கதையைக் கூறினார்.
‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா,நடிகை சனம் ஷெட்டி ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ,

“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் ?
எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ?

சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது.. அது பலருக்கும் தெரிவதில்லை .

நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் . இதுவரை சொல்லாத விஷயம் அது. நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.

கார்த்திக்குடன் அவரை ஒரு நாள் படப்பிடிப்பில் நடிக்க வைத்தேன் . அவர்தான் கதாநாயகி என்று உறுதி செய்யப்படவில்லை . நடிப்பை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன் . அவருக்கு சாவித்திரி நடித்த பழைய வீடியோ கேசட்டுகளை கொடுத்து பார்க்கச் சொன்னேன். ஒரே ஒரு நாள் நடித்திருந்தார் . அப்போது நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தோம் .அப்போது அவர் நடித்த காட்சிகளை சென்னையிலிருந்து ஜெமினி லேபிலில் இருந்து எடுத்த ரஷ்ஷை வரவழைத்து அங்கு உள்ள ஒரு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம் . கூடவே மனோரமா ஆச்சியும் சிவகுமார் அண்ணனும் பார்த்தார்கள். அவர்கள் அவரவர் ஒரு கருத்து சொன்னார்கள் .ஆச்சி அப்போது சொன்னார் இவள் சாவித்திரி மாதிரி வருவாள் என்றார் .இது எவ்வளவு பெரிய வார்த்தை.

சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றழைத்தார் .எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது . இன்னொருவர் மத்தியில் பேசும் போது சார் என்று கூப்பிடு என்றேன்.

ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல் நான் அண்ணனாகவே இருந்தேன் . கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும் அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா .பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படம் சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் சிபாரிசு செய்தேன் .விரைவில் பெரிய நடிகையாக்கி விட்டார்.

அவர் வளர்ந்து நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும் காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான்தான் . சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார் – நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன் என்றெல்லாம் கூறியபோதும் என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். போக முடியவில்லை. தமிழில் ‘சந்திரமுகி’யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா ‘என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார் . அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார் .எனக்கு ஒருநாள் போன் செய்தார் .”அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. நடிப்பு வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆப் த மித்ரா தான் என் கடைசி படம் நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன் ” என்று என்னிடமும் என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார் .தன் அண்ணனின் வற்புறுத்தலால் பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார் . மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது .அவர் விபத்தில் இறந்துவிட்டார் .அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை .திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிக பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார் . உள்ளே சென்ற போது எனது படத்தை பெரிதாகப்போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை .அப்படிப்பட்ட நடிகை . சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில்.

இங்கே இயக்குநரை நடிகை தீபா அப்பா என்று அழைத்தார்.அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை .அது பெருமையான விஷயம் .

அப்படிப்பட்ட சினிமா இன்று எப்படி இருக்கிறது ? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது?

இன்று எல்லா படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன .சிறிய படங்கள் வெளியாகின்றன வசூல் தான் வரமாட்டேன் என்கிறது . அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய் . தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும்.

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும் .

பெரிய ஹீரோக்கள் தங்கள் படம் மட்டும் ஓடினால் போதும் என்று நினைக்கிறார்கள் .சினிமா பற்றி யாரும் கவலைப்படவில்லை . 100 கோடி ,60 கோடி, 50 கோடி என்று வாங்கி விட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை மாற்ற வேண்டும் .

அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும் .அதனால் தான் அமெரிக்காவில் எல்லா படங்களும் ஓடுகின்றன. ஒன்றை ஒன்று வசூலில் முறியடிக்கின்றன.இது போன்ற ஏற்பாடு செய்து இருப்பதால்தான் அங்கே எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றன.

இது புதிய விஷயம் அல்ல .இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இங்கே ஒரு கூட்டம் மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது .ஒரு கூட்டம் மட்டும் இழந்து கொண்டே இருக்கிறது.

திரையைப்பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் ,திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம் என்று பல சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யார் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இப்படி இருந்தால் எப்படி சினிமா வளரும் ? இதில் மாற்றம் செய்ய வேண்டும் .

சினிமாவில் உள்ள ஒரு தவறான போக்கு ஒரு படம் ஓடி விட்டால் இயக்குநர்கள் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்று தானாகவே முளைத்து வந்தது போல் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் .ஒரு பட வெற்றிக்கு அகந்தையுடன் இருந்தால் அடுத்தப்படம் தோல்வியடையும் போது யாரும் கூட இருப்பதில்லை –

இங்குள்ள உள்ள பிரச்சினை என்னவென்றால் நல்ல இயக்குநரை யாரும் கண்டு கொள்வதில்லை . நடிகர்கள் யாருடனும் நட்பு நட்புறவுடன் இருப்பதில்லை . திறமைசாலிகளை யாரும் கண்டு கொள்வதில்லை .. இது மாற வேண்டும்.” இவ்வாறு ஆர்.வி.உதய குமார் பேசினார் .

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (கில்டு ) தலைவர் ஜாக்குவார்தங்கம் பேசும்போது,

” இங்கே எல்லா படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை . யாரோ 4 பேர் கையில் திரையரங்குகள் உள்ளன .இதை மாற்ற வேண்டும் .தமிழக அரசு சிறிய சிறிய திரையரங்குகளை உருவாக்கி எல்லா படங்களை வெளியிட ஆவன செய்ய வேண்டும் .
இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் .

அப்போதெல்லாம் திரையுலகினர் ஒரு குடும்பம் போல் இருந்தார்கள் . ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்று நட்புறவு இல்லை.. இது மாற வேண்டும் . எம்ஜிஆர், சிவாஜி விரோதிகள் என மக்கள் நினைத்தார்கள்.ஆனால் அவர்கள் ஒருவர் வீட்டுக்குச் ஒருவர் சென்று சாப்பிடுவார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் என்று இருப்பார்கள். இதில் நாயகனாக நடித்த அபிஷேக்கைப் பாராட்ட சக நடிகராக இருக்கும் அஸ்வின் வந்திருப்பது பாராட்டத்தக்கது .” என்று பேசினார்.

விழாவில் படத்தின் இயக்குநர் K.மகேந்திரன் பேசும் போது
“நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமாக்களை பார்த்துத்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். 50 வயதுக்கு மேல் இயக்குநராக வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் வயது ஒரு பிரச்சினை இல்லை .மனசுதான் முக்கியம் .என் மனம் இளமையாக இருக்கிறது .என் படம் பற்றி நான் விரிவாக புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை .ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்து எடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.” என்றார்.

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார் வி. இளங்கோவன் ,
நாயகன் அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா , ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ் ,ஆதவ், ராம் , வீரா, ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இசையமைப்பாளர் ஷ்யாம் மோகன், எடிட்டர் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சியாளர் பில்லா ஜெகன், நடன இயக்குநர் ஸ்ரீ ஷெல்லி , ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுதான் ‘இந்தியன்2’ பட கதையா..? வாவ்… அசத்தலா இருக்கே.!!

இதுதான் ‘இந்தியன்2’ பட கதையா..? வாவ்… அசத்தலா இருக்கே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கமல் நடிக்கும் இந்தியன் 2 பட சூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் ஷங்கர்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமத்து வருகிறார்.

இப்படத்தில் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் கதை என்று ஒரு தகவல் இணையத்தில் பரவியுள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. நீங்களே பாருங்கள்…

சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார்.

இவர்கள் நடத்தும் யூடியூப் சேனனில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகின்றனர்.

எனவே பல மிரட்டல்களை சந்திக்கிறார் சித்தார்த்.

அவருக்கு உதவி செய்ய சென்னைக்கு வருகிறார் இந்தியன் தாத்தா கமல்.

ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தாத்திடம் கேடு பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார்.

அவருக்கு உதவிட காஜல் அகர்வாலும் வருகிறார்.

இறுதியில் இந்தியன் தாத்தாவை கொல்ல அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றனர் என்பதுபோல முடிகிறது கதை.

ஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா வாரியர்..? அதிர்ச்சியில் அஜித் பட புரொடியூசர்

ஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா வாரியர்..? அதிர்ச்சியில் அஜித் பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஒரே கண்சிமிட்டல் அசைவில் இந்தியாவையே கிறங்கடித்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவர் தற்போது ஹிந்தியில் உருவாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்தும் காட்சி உள்ளது.

மேலும் அவர் தம் அடிப்பதும் மது அருந்தும காட்சிகளும் உள்ளது.

இறுதியாக குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடையும் போது நிஜவாழ்க்கையில் நடந்தவைதான் இது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படக்குழுவினருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரியுள்ள நிலையில் படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

இப்பட இயக்குனர் பிரசாந்த் மாம்புலி இது குறித்து பேசியுள்ளதாவது…

“ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது கதை.

இப்படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி கதையா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும். தலைப்பை மாற்ற மாட்டேன்” என்றார்.

இதனால் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர போனிகபூர் முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் போனிகபூர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தன் PRO தாயாரின் மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்

தன் PRO தாயாரின் மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Pro Suresh Chandras mother passed awayநடிகர் அஜித்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா.

இவரின் தாயார் திருமதி. சத்யவதி சுதர்சன் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவரது மரணத்தை அறிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Ajith Pro Suresh Chandras mother passed away

ரஜினியுடன் அஜித் மோதியதால் விஜய்யுடன் மோதும் ஹீரோக்கள்

ரஜினியுடன் அஜித் மோதியதால் விஜய்யுடன் மோதும் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta and Viswasam clash formula continuing to Bigil clashரஜினி படங்கள் ரிலீஸாகும் போது தங்கள் படங்களை மற்ற நடிகர்கள் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் சந்திரமுகி ரிலீஸ் சமயத்தில் சச்சின் படத்தை வேண்டுமென்றே ரிலீஸ் செய்தார் விஜய்.

ஆனால் சச்சின் படம் படுதோல்வி அடைய அதன்பின் மற்ற ஹீரோக்கள் எந்த படங்களையும் ரிலீஸ் செய்யவில்லை. அதன்பின்னர் இந்தாண்டு 2019 ரஜினியுடன் பேட்ட படத்துடன் மோதினார் அஜித். தன் விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்தார்.

பொங்கல் தினம் என்பதால் நிறைய விடுமுறை நாட்கள் வரவே இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டையாடியது.

இதனையடுத்து தற்போது மற்ற ஹீரோக்களும் இதே பார்முலாவில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் விடுமுறை தினங்கள் வருவதால் அந்த சமயத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வருகிறது. அத்துடன் கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Petta and Viswasam clash formula continuing to Bigil clash

More Articles
Follows