நாளை ஜூன் 3ஆம் தேதி சாமி-2 படத்தின் மெகா ட்ரீட்

Saamy Square movie trailer release on 2nd June 2018ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சூரி, ராதாரவி, பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் `சாமி ஸ்கொயர்’.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த போஸ்டரில் மே 26ஆம் தேதி டிரைலர் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தூத்துக்குடி கலவரத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது.

தற்போது நாளை ஜீன் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு இதன் ட்ரைலரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படம் வருகிற 2018 அக்டோபரில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

Saamy Square movie trailer release on 3rd June 2018

Overall Rating : Not available

Latest Post