தாய் வயித்துல பொறக்கலடா.; நான் பூதம்டா… ரசிகர்களை மிரட்டிய விக்ரம்

தாய் வயித்துல பொறக்கலடா.; நான் பூதம்டா… ரசிகர்களை மிரட்டிய விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams Saamy Square trailer release updatesஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரம் கீர்த்தி சுரேஷ், சூரி, பாபி சிம்ஹா,இ பிரபு, ஜான் விஜய், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இதன் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த டிரைலர் வெளியானது முதலே கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

பன்ச் என்ற பெயரில் விக்ரம் சாமி பூதம் என கடுப்பேற்றி விட்டார் என நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் விக்ரம் ரசிகர்கயோ சாமி மீண்டும் கலக்குவார் என்கிறார்கள்.

இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர்.

இதில் விக்ரம் பேசும் வசனமான, ‘நான் தாய் வயத்தில பொறக்கலடா… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்லடா… பூதம்’ என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

Vikrams Saamy Square trailer release updates

மனோரமா இடத்தை பிடிக்க ஆசைப்படும் மலையாள நடிகை கலா

மனோரமா இடத்தை பிடிக்க ஆசைப்படும் மலையாள நடிகை கலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wish to became like Aachi Manorama says Kalaகேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகை கலா.

பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் “கருத்த முத்து” மற்றும் “நீலக்குயில்” ஆகிய பிரபல மலையாள சின்னத்திரை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் “நீதானா அந்த குயில்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது “எதையும் செய்யோம்” உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

கேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டாராம்.

அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேறாமல் போனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப் போல ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.

வாழ்த்துக்கள் கலா.

I wish to became like Aachi Manorama says Kala

அம்மனாக நடிக்கும் ஜூலியை வணங்கும் கிராம மக்கள்

அம்மனாக நடிக்கும் ஜூலியை வணங்கும் கிராம மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

julie in amman thayiஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சி என ஓவர் பாப்புலர் ஆனவர் ஜூலி.

இவர் மன்னர் வகையறா என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார்.

இதனையடுத்து தற்போது சினிமாவில் பல வாய்ப்புகள் வருகின்றன.

நீட் தேர்வுக்கு பலியான அனிதாவின் வாழ்க்கை படத்தில் அனிதாவாக நடித்து வருகிறார் என்பதை நம் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பார்த்தோம்.

இந்நிலையில் ’அம்மன் தாயி’ என்ற படத்தில் இவர் தற்போது அம்மனாக நடித்து வருகிறாராம்.

இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் சந்திரஹாசன் ஆகியோர் இயக்கி தயாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது….

அம்மனாக மற்றும் சாதாரண பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி.

அம்மனாக நடித்தபோது ஜூலி வழக்கமான ஜூலியாக இல்லை.

வழக்கத்துக்கு மாறாக அமைதியாக சாமி வந்ததுபோலவே இருந்தார்.

அம்மனாக நடித்தபோது விரதம் இருந்து அந்த அலங்காரத்திலேயே இருந்தார்.

மதுரை பக்கத்தில் வடக்கம்பட்டி என்ற ஊரில் உள்ள அம்மன் கோயிலில்தான் அவர் தங்கினார்.

அந்த ஊர் மக்கள் ஜூலியை அம்மனாகவே வழிபட்டனர். படத்தில் இடம்பெறும் முளைப்பாரி திருவிழாவும் உண்மையிலேயே நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தனர்.

இதில் நாயகனாக அன்பு என்பவர் நடிக்கிறார்.

சாமி அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

ரஜினி மன்னிப்பு கேட்டு ரூ. 101 கோடி தரனும்; காலா மீது வழக்கு

ரஜினி மன்னிப்பு கேட்டு ரூ. 101 கோடி தரனும்; காலா மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajinikanthரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் வியாழன் (ஜீன் 7ல்) ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் ரஜினிக்கு அனுப்பி இருக்கும் வக்கீல் நோட்டீசில் அவர் கூறியிருப்பதாவது:-

காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனது கட்சிக்காரரின் தந்தை திரவியம் நாடார் 1957-ல் தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றவர்.

தூத்துக்குடி அப்போது கடும் வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டதால் அவர் பம்பாயில் புலம்பெயர்ந்தார்.

இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட அவர் மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டவர்.

அவரது காலகட்டத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு காவலராக விளங்கியவர்.

“இந்தப் படத்தின் கதை என்னுடைய அப்பா தொடர்பானது என்று தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற என் தந்தை தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல வி‌ஷயங்களை செய்துள்ளார்.

அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம். அவரை அங்குள்ள மக்கள் காட்பாதர் எனப் பொருள்படும் வகையில், ‘காத்வாலா சேட்’ என்றே அழைப்பர்.

காலா படத்திலும் அது குறித்து கூறப்பட்டுள்ளது. அதோடு என் தந்தை சர்க்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர். இதுவும் படத்தில் வருகிறது.

ஆனால், நிஜத்திற்கு விரோதமாக படத்தில் காட்வாலா சேட் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. என் தந்தை சட்ட விரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர்.

எனவே இப்படத்தால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு நடிகர் ரஜினி மற்றும் தனுஷ், 36 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும்.

இல்லையேல் வழக்கு தொடரப்படும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். அவதூறுக்காக ரஜினி ரூ.101 கோடி தரவேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

காலா ரிலீஸை தடுக்க முடியாது; ரஜினிக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் குரல்

காலா ரிலீஸை தடுக்க முடியாது; ரஜினிக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and prakash rajகர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசியதால் இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் படத்திற்கு தடை விதித்துள்ளது.

மேலும் மக்கள் விரும்பினால் மட்டுமே படத்தை இங்கு திரையிட அனுமதியளிப்போம் என்றளவில் கூறிவிட்டார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இந்நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ்,

பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல.

இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும்.

படத்திற்கு எதிராக யார் போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.” என பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

கவுதம் மேனனுடன் கைகோர்த்த ஜோடி அதர்வா-ஐஸ்வர்யா ராஜேஷ்

கவுதம் மேனனுடன் கைகோர்த்த ஜோடி அதர்வா-ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bodhai kodhaiஇயக்குனராக அறியப்பட்டாலும் கவுதம் மேனன் தயாரிப்பாளராக படங்களை தயாரித்தும் வருகிறார்.

ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரிக்கும் அவர் அண்மைகாலமாக பாடல் ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.

இந்நிலையில், `போதை கோதை’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அடுத்த ஆல்பத்தை வெளியிடவுள்ளனர்.

இதில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.

More Articles
Follows