தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் ராசியான ஜோடி ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது விக்ரம் ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’, விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’, விஜய் ஜோடியாக ‘சர்கார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.
இந்நிலையில், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘பார்ட்டி’ படத்தைத் தொடர்ந்து இப் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற பி.சி.ஸ்ரீராமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.