தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விக்ரம் படக்குழுவினர் எடுத்த முடிவு

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விக்ரம் படக்குழுவினர் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram saamy 2ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் `சாமி ஸ்கொயர்’.

இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எனவே இன்று மே 26ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் சாமி ஸ்கொயர் பட டிரைலரின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Saamy square team postponed their Trailer release due to Tuticorin sterlite issue

ஆந்திர அரசுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்த நடிகையர் திலகம் படக்குழு

ஆந்திர அரசுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்த நடிகையர் திலகம் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhra CM Chadnrababu Felicitates Mahanati Team In Amaravathiசாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதன் தெலுங்கு பதிப்பு மகாநதி என்ற பெயரில் வெளியானது.

நாக் அஷ்வின் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சுமார் ரூ. 25 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம் 50 கோடியை வசூலித்துள்ளது.

இந்நிலையில் இப்படக் குழுவினரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டி கவுரவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் அஷ்வினி தத், ஸ்வப்னா, பிரியங்கா, படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் மகள் விஜய் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தயாரிப்பாளர்கள் ஆந்திரத் தலைநகராக உருவாகி வரும் அமராவதியின் வளர்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்தனர்.

Andhra CM Chadnrababu Felicitates Mahanati Team In Amaravathi

ஜுங்கா படத்தில் ரமணி அம்மாளுக்கு வாய்ப்பளித்த சித்தார்த் விபின்

ஜுங்கா படத்தில் ரமணி அம்மாளுக்கு வாய்ப்பளித்த சித்தார்த் விபின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Famous Singer Ramani ammal sung in Vijay Sethupathis Junga movieகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்து வரும் படம் ‘ஜுங்கா’.

இதில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இதன் சூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.

இதில் இடம் பெறும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாள் பாடியிருக்கிறார்.

விஜய் சேதுபதி – கோகுல் கூட்டணியில் ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

Famous Singer Ramani ammal sung in Vijay Sethupathis Junga movie

junga first look poster

கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont know about my character and story line in Rajini movie says Vijay Sethupathiகாலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதுகுறித்து விஜய்சேதுபதி கூறுகையில்…

ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதைக்கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.

காரணம் கார்த்திக் சுப்பராஜ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அதனால் எனது கேரக்டர் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.” என்றார் விஜய் சேதுபதி.

I dont know about my character and story line in Rajini movie says Vijay Sethupathi

விரைவில் சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் வெளியீடு

விரைவில் சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Next Single Periyar Kuthu song Coming Soonசிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் ஓவியா நடிக்கும் ஒரு படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைக்க மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

இது குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Simbu Next Single Periyar Kuthu song Coming Soon

periyar kuthu simbu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தமிழர்கள் கிட்ட மோதாதே என சீறும் சிம்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தமிழர்கள் கிட்ட மோதாதே என சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont mess with us Tamilians Simbu reaction on anti Sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் சிம்புவும் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது.

மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே’ என அவேசமாக பேசியுள்ளார்.

Dont mess with us Tamilians Simbu reaction on anti Sterlite protest

More Articles
Follows