விஜய் விக்ரம் இயக்கத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏசி

SA Chandrasekaran act in Traffic Ramasamy biopicசட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சனைகளை இயக்கியவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

ஆனால் இப்படத்தை விஜய் விக்ரம் என்பவர் இயக்க, எஸ்ஏசி நடிக்க மட்டும் செய்கிறாராம்.

தமிழக மக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி.

இவரது பல வழக்குகள் மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்று தந்துள்ளது.

எனவே இவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், இன்றும் மக்களுக்காக போராடி வருகிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் விஜய் விக்ரம் கூறுகையில்…

இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது.

இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.” என்றார்.

SA Chandrasekaran act in Traffic Ramasamy biopic

Overall Rating : Not available

Latest Post