டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் தந்தையுடன் இணையும் விஜய் ஆண்டனி

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் தந்தையுடன் இணையும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony to make a cameo in SACs film Traffic Ramasamyடிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர்.

அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ”டிராபிக் ராமசாமி ”
இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை குகன் s. பழனி கவனிக்கிறார்.. இசை ஹரஹரமகாதேவி புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ்.சண்டைக் காட்சி – அன்பறிவு .

இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஈரோடு மோகன் என்பவர் முதல் முறையாக தயாரிக்கிறார்.

Vijay Antony to make a cameo in SACs film Traffic Ramasamy

வாழ்த்திய கமலுக்கும் விருது அறிவித்த ஆந்திர அரசுக்கும் ரஜினி நன்றி

வாழ்த்திய கமலுக்கும் விருது அறிவித்த ஆந்திர அரசுக்கும் ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajiniதேசிய விருதைப் போன்று ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு ஆண்டிற்கான திரைத்துறை விருதுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில், மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி – சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட உள்ள விருதுகள் பட்டியலை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.

அதில் 2014ஆம் ஆண்டிற்கான என்.டி.ஆர் விருதை கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டிற்கான விருதை ரஜினிகாந்துக்கும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு கமல் அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கமலுக்கு நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினி.

மேலும் மற்றொரு பதிவில் நந்தி விருதுக்கு தம்மை தோ்வு செய்தமைக்காக நன்றி என பதிவிட்டுள்ளார்.

Rajini said thanks to Kamalhassan and Andhra Govt for Nandi Awards

Rajinikanth‏Verified account @superstarrajini
I convey my heartfelt thanks and happiness for the prestigious #NandiAwards granted to me

ஆந்திர அரசுக்கு நன்றி; ரஜினிக்கு வாழ்த்து… கமல் ட்வீட்

ஆந்திர அரசுக்கு நன்றி; ரஜினிக்கு வாழ்த்து… கமல் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan wishes Rajinikanth for Nandi awards2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருது ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்… ”2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர் தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.

மீண்டும் என்னை கவுரப்படுத்திய ஆந்திர அரசுக்கு நன்றி. என் சினிமா வாழ்க்கையில் நீங்கள் அளிக்கும் தொடர் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award in 2016. Thank you Andhra for honouring me also, yet again. I am indebted to your continued support, which started early in my career. Kruthagnyathalu
— Kamal Haasan (@ikamalhaasan) November 14, 2017

Kamalhassan wishes Rajinikanth for Nandi awards

இயக்குனர் பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா

இயக்குனர் பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya will reveal Naachiyaar teaserசூர்யா என்ற ஒரு சாதாரண நடிகரை தன் இயக்கத்தின் மூலம் சிறந்த நடிகர் என பெயர் எடுக்க வைத்தவர் இயக்குனர் பாலா.

நந்தா என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தை தொடர்ந்து பிதாமகன் என்ற படத்திலும் இவர்கள் இணைந்தனர்.

இன்று சூர்யா முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளார்.

இந்நிலையில் தனக்கு கைகொடுத்த இயக்குனர் பாலாவுக்கு சூர்யா கை கொடுக்க உள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.

இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணியளவில் தன் ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட உள்ளாராம்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Suriya will reveal Naachiyaar teaser

இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்

இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arav committed in two movies as heroவிஜய் டிவி ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ஆரவ்.

இதனையடுத்து சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்தார்.

இதனையடுத்து அடுத்த படத்தில் ஆரவ் கமிட்டாகியுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில்தான் ஆரவ் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம்.

காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.

அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள இப்படத்தில் ஆரவ்வுக்கு இரண்டு ஜோடிகள் என கூறப்படுகிறது.

Arav committed in two movies as hero

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய படங்கள்

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu bikeசிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்திற்காக தனது உடல் எடையை கிட்டதட்ட 100 கிலோ வரை ஏற்றியிருந்தார்.

இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து இயக்கி நடிப்பதாக சிம்பு அறிவித்தார்.

இதன்பின்னர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதவிர இவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமால் இருந்து வந்தன.

இந்நிலையில் சிம்பு தன் உடலை எடையை குறைத்து பைக்கில் உட்கார்ந்து இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால் இவை சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த படங்களை சிம்பு ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Simbu new stills goes viral on Social medias

More Articles
Follows