வீரத்தின் உச்சமான அஹிம்சைக்கு உதாரணமானவர் டிராபிக் ராமசாமி: கமல்

வீரத்தின் உச்சமான அஹிம்சைக்கு உதாரணமானவர் டிராபிக் ராமசாமி: கமல்

Kamalhassan praises Traffic Ramasamy and his biopic movieஎஸ்ஏ சந்திரசேகரன் நடிப்பில் ஜூன் 22-ல் அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார்.

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில்
உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.

அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார்.

பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது,

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது,“அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது.

சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும்.

இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால் தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன்.

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள்.

அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு.

ஆனால் டிராஃபிக் ராமசாமி. எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப் பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி . அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும். எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர்.

அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது.

அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்

ஒரு படத்தில் முதலில் பாத்திரப் பொருத்தம் அமைவது கடினம்.பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில் பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது.

எஸ்.ஏ.சியும்இந்த டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை.

அந்தப் பெயரும் உணர்வும் தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை. இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி. டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான்.

படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன் . முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என ஆவல் வந்தது. `போராளி` என்று ஒரு பாடல் `கோமாளி `என்று ஒரு பாடல் பார்த்தோம்.

இவரை கோமாளியாக்க எத்தனையோ பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.

எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குநராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குநருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது.

மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை,அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி.” இவ்வாறு கமல்ஹாசன் பாராட்டி கூறியுள்ளார்.

Kamalhassan praises Traffic Ramasamy and his biopic movie

traffic ramasamy kamal wish

BIG NEWS: விஜய்-62 பட டைட்டில் இதுதானா.? வைரலாகும் போஸ்டர்

BIG NEWS: விஜய்-62 பட டைட்டில் இதுதானா.? வைரலாகும் போஸ்டர்

Vijays Thalapathy 62 titled Vera Level goes viralஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருவதால், அரசியல் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் டைட்டிலை நாளை ஜீன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டைட்டில் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் வேற லெவல் என டிசைன் செய்துள்ளனர். இது அதிகாரப்பூர்வ தலைப்பு இல்லையென்றாலும் ரசிகர்கள் இதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Vijays Thalapathy 62 titled Vera Level goes viral

vera level

ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

ஜூன் மாத இறுதியில் ஆவி பறக்க வரும் *இட்லி*

idlyஇயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “ இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தரன் , கண்ணன் (ஒளிப்பதிவு) , ஜெய் பிரவீன் (படத்தொகுப்பு ) , உமா ஷங்கர் (கலை ) மற்றும் பாண்டியன் (உடை ) .

இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது.

பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது.

பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

BREAKING: கமல்ஹாசனிடம் பேசியது என்ன..? டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

BREAKING: கமல்ஹாசனிடம் பேசியது என்ன..? டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

kamal haasan and rahul gandhiமக்கள் நீதி மய்யம் கட்சி அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி சென்றார் இக்கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

இதன்பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது…

“காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் ” என்றார் ராகுல் காந்தி.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

cv kumarஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என தரமான படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

இதனிடையில் ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்குகிறார்.

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

Thala Ajith in viswasamநடிகர் அஜித்தை 4வது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இயக்கி வருகிறார் சிவா.

இப்படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடிப்பதாக தெரிகிறது.

இதன் முதல் கட்ட சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அதில் வழக்கம்போல வெள்ளை முடி தாடியுடன் நடித்திருந்தார்.

இந்த சூட்டிங்கின் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இனி அடுத்த கெட் அப்பிற்காக மாறவுள்ளார் அஜித். அதில் கருத்த தலைமுடியுடன் நடிக்கவுள்ளார்.

இந்த போட்டோக்கள் லீக்காகி விடக்கூடாது என டைரக்டர் சிவா உறுதியான முடிவில் இருக்கிறாராம்.

எனவே அஜித்திடம் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இதற்கு அஜித்தும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

More Articles
Follows