ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kodiதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்த படம் கொடி.

வெற்றிமாறன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இதில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்ஏ. சந்திரசேகரன், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தீபாவளிக்கு (அக், 28) வெளியான இப்படம் தற்போது வரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே, இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

அஜித்-விஜய்யை முந்தி ரஜினிக்கு அடுத்து சூர்யா செய்த சாதனை

அஜித்-விஜய்யை முந்தி ரஜினிக்கு அடுத்து சூர்யா செய்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini suriyaதமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிக்கு அடுத்த சாதனைகளை விஜய் மற்றும் அஜித் படங்களே படைத்து வருகின்றன.

மேலும் இவர்களின் பட டீசர் மற்றும் ட்ரைலரிலும் இந்த சாதனைகள் யூடிப்பில் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று (7.11.2016) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ஞானவேல்ராஜா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படத்தின் டீசர் வெளியானது.

தற்போது 24 மணி நேரங்களை கடந்துள்ள நிலையில் இதன் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

அதாவது கபாலி படத்திற்கு பிறகு, குறைந்த நேரத்தில், 3 மில்லியன் (30 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளதாக அறிவித்து அதற்கான படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில தகவல்கள் இதோ….

 • 24 மணி நேரத்தில் கபாலி டீசரை 51 லட்சம் பார்த்தனர். (5.1 மில்லியன்)
 • 24 மணி நேரத்தில் பைரவா டீசரை 2.70 லட்சம் பேர் பார்த்தனர். (2.7 மில்லியன்)
 • 24 மணி நேரத்தில் தெறி டீசரை 2.30 லட்சம் பேர் பார்த்தனர். (2.3 மில்லியன்)
 • 24 மணி நேரத்தில் தெறி ட்ரைலரை 1.97 லட்சம் பேர் பார்த்தனர். (1.97 மில்லியன்)

 

s3 teaser record

 

3m singam s3

ரஜினிக்காக ரொமான்டிக் வாய்ஸ் கொடுக்கும் பிரிட்டிஷ் பாடகர்

ரஜினிக்காக ரொமான்டிக் வாய்ஸ் கொடுக்கும் பிரிட்டிஷ் பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

british singer for rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘2.0 படத்தின் சூட்டிங் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

எனவே படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் முழுவீச்சில் பாடல் கம்போசிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நவம்பர் 20ஆம் தேதி இதன் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

எனவே படக்குழுவே மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வருகிறது-

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள ஒரு ரொமான்டிக்கான பாடலை பிரிட்டிஷ் பாடகர் அர்ஜுன் குமாரராஜா பாடியிருக்கிறாராம்.

இந்த ஆல்பத்தில் ஐந்து, ஆறு பாடல்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெறும் என்பதை முன்பே பார்த்தோம்.

ஒருவேளை அப்பாடல் இந்த பாடலாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

அட! விஜய் படங்கள்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

அட! விஜய் படங்கள்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ghilliவிஜய் படங்கள்ல எவ்வளவோ இருக்கு. எதை கவனிக்க? அப்படின்னுதானே டைட்டில் படிச்ச உடனே யோசிச்சீங்க?

சரி. இப்போ விஷயம் என்னான்னு பாத்தீங்கின்னா…

விஜய் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சவங்க… அப்புறம் அவுங்களே விஜய்க்கு சிஸ்ட்ராவும் (சகோதரியாவும்) நடிச்சிருங்காங்களாம்.

இது ஒரு படத்துல மட்டுமில்ல. கிட்டதட்ட 3 படங்கள்லயும் இது நடந்துருக்கு.

சரண்யா மோகன் : காதலுக்கு மரியாதை மற்றும் வேலாயுதம்

நான்சி ஜெனிபர் : நேருக்கு நேர் மற்றும் கில்லி

நிவேதா தாமஸ் : குருவி மற்றும் ஜில்லா

ஹ்ம்…. அப்படின்னா… கூடிய சீக்கிரமே தெறி பேபி நைனிகாவும் விஜய்க்கு சிஸ்ட்ரா நடிப்பாங்கான்னுதான்னு தானே யோசிக்கிறீங்க… சரிதான் பாஸ்… நல்லா வருவீங்க நீங்க.

ரஜினியை ஒதுக்கிவிட்டு, மோதும் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள்

ரஜினியை ஒதுக்கிவிட்டு, மோதும் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajith vijay suriyaதீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விஜய் நடித்த பைரவா பட டீசர் வெளியானது.

இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்றுள்ளது.

இன்னும் இந்த சாதனை தொடரும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சூர்யாவின் எஸ் 3 டீசர் வெளியானது. இதுவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

எனவே இரு தரப்பு ரசிகர்களும் சாதனை பட்டியலை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்களுடன் அஜித் ரசிகர்களும் இணைந்து வேதாளம் டீசரை சாதனையை முறியடித்து விடுமா? என காத்திருக்கின்றனர்.

எந்த டீசர் வெளியானாலும் அதை மற்ற படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள், கபாலியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டார்களாம்.

காரணம் ரஜினியை சாதனையை அவரே முறியடிப்பார். தங்களால் முடியாது என்பதால் இந்த முடிவாம்.

இன்று 08/11/2016 வரை உள்ள தகவல்களின் படி – யூடிப் டீசர் சாதனை….

 • கபாலி   3,26,01,706 views         லைக்ஸ் 4,65,530          டிஸ் லைக்ஸ் 17,780
 • வேதாளம்    66,43,570 views    லைக்ஸ் 1,47,929          டிஸ் லைக்ஸ் 71,727
 • தெறி டீசர்   1,10,35,506 views  லைக்ஸ் 3,07,067          டிஸ் லைக்ஸ் 58,557
 • பைரவா     82,16,388 views       லைக்ஸ் 2,19,014           டிஸ் லைக்ஸ் 35,261
 • 24 டீசர்      45,73,099 views        லைக்ஸ் 90,702              டிஸ் லைக்ஸ் 9,810
 • சிங்கம் 3 – 23,19,590 views       லைக்ஸ் 74,261               டிஸ் லைக்ஸ் 13,980 (20 மணி நேரம்)
 • இருமுகன்  37,03,769 views     லைக்ஸ் 29,591               டிஸ் லைக்ஸ் 801
விஜய் சூட்டிங்கில் விபத்து; 2 ஸ்டண்ட் கலைஞர்கள் மரணம்?

விஜய் சூட்டிங்கில் விபத்து; 2 ஸ்டண்ட் கலைஞர்கள் மரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 stuntman at duniya vijay shootவிஜய் என்றவுடன் நம் இளைய தளபதி படம் என நினைத்தீர்களா?

இது கர்நாடகா ஹீரோ துனியா விஜய் படம் பற்றிய தகவல்.

கர்நாடகாவில் ராம் நகர், திப்பகொண்டனஹள்ளி பகுதில் துனியா விஜய்யின் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதில் துனியா விஜய்யுடன் இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் (அணில் மற்றும் உதய்) ஹெலிகாப்டரில் இருந்து அங்குள்ள ஏரியில் குதிக்க வேண்டிய காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மூவரும் அந்த ஏரியில் குதித்துள்ளனர்.

ஆனால் விஜய் மற்றும் கரையை கடந்துள்ளார். மற்ற இருவரும் நீரில் மூழ்கிவிட்டதாக தெரிகிறது.

தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

சம்மந்தப்பட்ட அந்த இரண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் நீச்சல் தெரியதாம். ஆனாலும் குதிக்க சொன்னதாக சொல்லப்படுகிறது.

ஹீரோ விஜய்யுக்கு மட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows