விஜயகாந்த் நடித்த 150+ படங்களின் வரிசை பட்டியல் வருடங்களுடன்…

விஜயகாந்த் நடித்த 150+ படங்களின் வரிசை பட்டியல் வருடங்களுடன்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.

சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்தார்.

நேற்று டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள்..

1_ 1979 – அகல் விளக்கு

2_ 1979 – இனிக்கும் இளமை

3_ 1980 – நீரோட்டம்

4_ 1980 – சாமந்திப்பூ

5_ 1980 – தூரத்து இடி முழக்கம்

6_ 1981 – சட்டம் ஒரு இருட்டறை

7_ 1981 – சிவப்பு மல்லி

8_ 1981 – நெஞ்சில் துணிவிருந்தால்

9_ 1981 – சாதிக்கொரு நீதி

10_ 1981 – நீதி பிழைத்தது

11_ 1982 – பார்வையின் மறுப்பக்கம்

12_ 1982 – சிவந்த கண்கள்

13_ 1982 – சட்டம் சிரிக்கிறது

14_ 1982 – பட்டணத்து ராஜாக்கள்

15_ 1982 – ஓம் சக்தி

16_ 1982 – ஆட்டோ ராஜா

17_ 1983 – சாட்சி

18_ 1983 – டௌரி கல்யாணம்

19_ 1983 – நான் சூட்டிய மலர்

20_1984 – மதுரை சூரன்

21_1984 – மெட்ராஸ் வாத்தியார்

22_1984 – வெற்றி

23_1984 – வேங்கையின் மைந்தன்

24_1984 – நாளை உனது நாள்

25_1984 – நூறாவது நாள்

26_1984 – குடும்பம்

27_1984 – மாமன் மச்சான்

28_1984 – குழந்தை ஏசு

29_1984 – சத்தியம் நீயே

30_1984 – தீர்ப்பு என் கையில்

31_1984 – இது எங்க பூமி

32_1984 – வெள்ளை புறா ஒன்று

33_1984 – வைதேகி காத்திருந்தாள்

34_1984 – நல்ல நாள்

35_1984 – ஜனவரி

36_1984 – சபாஷ்

37_1984 – வீட்டுக்கு ஒரு கண்ணகி

38_1985 – அமுதகானம்

39_1985 – அலையோசை

40_1985 – சந்தோச கனவுகள்

41_1985 – புதுயுகம்

42_1985 – நவகிரக நாயகி

43_1985 – புதிய சகாப்தம்

44_1985 – புதிய தீர்ப்பு

45_1985 – எங்கள் குரல்

46_1985 – ஈட்டி

47_1985 – நீதியின் மறுபக்கம்

48_1985 – அன்னை பூமி

49_1985 – ஏமாற்றாதே ஏமாறாதே

50_1985 – சந்தோச கனவு

51_1985 – தண்டனை

52_1985 – நானே ராஜா நானே மந்திரி

53_1985 – ராமன் ஸ்ரீராமன்

54_1986 – அம்மன் கோயில் கிழக்காலே

55_1986 – அன்னை என் தெய்வம்

56_1986 – ஊமை விழிகள்

57_1986 – எனக்கு நானே நீதிபதி

58_1986 – ஒரு இனிய உதயம்

59_1986 – சிகப்பு மலர்கள்

60_1986 – கரிமேடு கரிவாயன்

61_1986 – நம்பினார் கெடுவதில்லை

62_1986 – தர்ம தேவதை

63_1986 – மனக்கணக்கு

64_1986 – தழுவாத கைகள்

65_1986 – வசந்த ராகம்

66_1987 – வீரபாண்டியன்

67_1987 – கூலிக்காரன்

68_1987 – சட்டம் ஒரு விளையாட்டு

69_1987 – சிறை பறவை

70_1987 – சொல்வதெல்லாம் உண்மை

71_1987 – நினைவே ஒரு சங்கீதம்

72_1987 – பூ மழை பொழியுது

73_1987 – ஊழவன் மகன்

74_1987 – ரத்தினங்கள்

75_1987 – வீரன் வேலுத்தம்பி

76_1987 – வேலுண்டு வினையில்லை

77_1988 – உழைத்து வாழ வேண்டும்

78_1988 – உள்ளத்தில் நல்ல உள்ளம்

79_1988 – காலையும் நீயே மாலையும் நீயே

80_1988 – செந்தூரப்பூவே

81_1988 – தம்பி தங்கக் கம்பி

82_1988 – தெற்கத்திக்கள்ளன்

83_1988 – தென்பாண்டிச்சீமையிலே

84_1988 – நல்லவன்

85_1988 – பூந்தோட்ட காவல்காரன்

86_1988 – மக்கள் ஆணையிட்டால்

87_1989 – என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்

88_1989 – தர்மம் வெல்லும்

89_1989 – பொறுத்தது போதும்

90_1989 – பொன்மன செல்வன்

91_1989 – மீனாட்சி திருவிளையாடல்

92_1989 – ராஜநடை

93_1990 – எங்கிட்ட மோதாதே

94_1990 – சத்ரியன்

95_1990 – சந்தனக் காற்று

96_1990 – சிறையில் பூத்த சின்ன மலர்

97_1990 – பாட்டுக்கு ஒரு தலைவன்

98_1990 – புதுப்பாடகன்

99_1990 – புலன் விசாரணை

100_1991 – கேப்டன் பிரபாகரன்

101_1991 – மாநகர காவல்

102_1991 – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

103_1992 – காவியத் தலைவன்

104_1992 – சின்ன கவுண்டர்

105_1992 – தாய்மொழி

106_1992 – பரதன்

107_1993 – எங்க முதலாளி

108_1993 – ஏழை ஜாதி

109_1993 – கோயில் காளை

110_1993 – செந்தூரப் பாண்டி

111_1993 – ராஜதுரை

112_1993 – சக்கரைத் தேவன்

113_1994 – ஆனஸ்ட் ராஜ்

114_1994 – என் ஆசை மச்சான்

115_1994 – சேதுபதி ஐ.பி.எஸ்

116_1994 – பதவிப் பிரமாணம்

117_1994 – பெரிய மருது

118_1995 – கருப்பு நிலா

119_1995 – காந்தி பிறந்த மண்

120_1995 – திருமூர்த்தி

121_1996 – அலெக்சாண்டர்

122_1996 – தமிழ்ச் செல்வன்

123_1996 – தாயகம்

124_1997 – தர்மச்சக்கரம்

125_1998 – உளவுத்துறை

126_1998 – வீரம் விளைஞ்ச மண்ணு

127_1998 – தர்மா

128_1999 – பெரியண்ணா

129_1999 – கள்ளழகர்

130_1999 – கண்ணுபடப் போகுதையா

131_2000 – வானத்தைப் போல

132_2000 – சிம்மாசனம்

133_2000 – வல்லரசு

134_2001 – வாஞ்சிநாதன்

135_2001 – நரசிம்மா

136_2001 – தவசி

137_2002 – ராஜ்ஜியம்

138_2002 – தேவன்

139_2002 – ரமணா

140_2003 – சொக்கத்தங்கம்

141_2003 – தென்னவன்

142_2004 – கஜேந்திரா

143_2004 – நிறைஞ்ச மனசு

144_2004 – எங்கள் அண்ணா

145_2006 – சுதேசி

146_2006 – பேரரசு

147_2006 – தர்மபுரி

148_2007 – சபரி

149_2008 – அரசாங்கம்

150_2009 – மரியாதை

151_2009 – எங்கள் ஆசான்

152_2010 – விருதகிரி

153_2016 – சகாப்தம்

Legend Actor Captain Vijayakanth movie list

JUST IN விஜயகாந்துக்கு பொருத்தமான பெயர் கேப்டன்.; எம்ஜிஆர் பாடலை சொல்லி அஞ்சலி செலுத்திய ரஜினி

JUST IN விஜயகாந்துக்கு பொருத்தமான பெயர் கேப்டன்.; எம்ஜிஆர் பாடலை சொல்லி அஞ்சலி செலுத்திய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று 2023 டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு 11 மணி அளவில் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சுந்தர் சி, குஷ்பூ, பிரபு, சத்யராஜ், விஜய் சேதுபதி, அர்ஜுன், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் இன்று டிசம்பர் 29ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட சென்னை வந்த ரஜினிகாந்த் தற்போது காலை 10 மணி அளவில் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டு இருக்கும் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி விமான நிலையத்திலேயே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேட்டி அளித்திருந்தார் ரஜினிகாந்த்.

அந்த பேட்டியில்.. “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அண்மையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன்.” என பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

தற்போது சென்னை வந்த பிறகு அஞ்சலி செலுத்தி விட்டு ரஜினி பேசியதாவது…

கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் விஜயகாந்த்.. அவரைப் பற்றி சொன்னால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் அந்தக் கூட்டத்தை எளிதாக சமாளிப்பவர் விஜயகாந்த்.

நான் இரண்டு முறை ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் சிக்கிய போது பவுன்சர்கள் இருந்தும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் அண்ணனை நான் பார்த்துக்கிறேன் என்று கூறி என்னை பத்திரமாக அழைத்து வந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் நிறைய கோபப்படுவார் என்பது எல்லாருக்கும் தெரியும் மீடியாக்களிடம் கோபப்பட்டு இருக்கிறார் ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் இருக்காது. அவரின் கோபத்தில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும்.

எல்லாரிடமும் அன்பாக பழகுபவர் விஜயகாந்த். அன்பினால் நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் விஜயகாந்த் என்று விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.

Rajini condolences message for Vijayakanth demise

கானா பாலா – ஆதேஷ் பாலா – VJP ரகுபதி கூட்டணியில் ‘தீட்டு’

கானா பாலா – ஆதேஷ் பாலா – VJP ரகுபதி கூட்டணியில் ‘தீட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபம் புரொடக்சன் சார்பில் நவீன் லக்ஷ்மன் மற்றும் அருண்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது ‘தீட்டு’ என்ற பெயரிடப்பட்ட ஆல்பம்.

நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் நடிகர் ஆதேஷ் பாலா முதன் முறையாக நடனமாடி நடித்து அசத்தியிருக்கிறார்

அவருக்கு ஜோடியாக ரதி என்பவர் நடித்து நடனமாடியிருக்கிறார்.

கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் வரிகளில் , பாடகர் கானா பாலா குரலில் பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு தீட்டு என்ற துள்ளல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிளுடன் கூடிய ஆல்பம் பாடல் உருவாகி வருகிறது

இந்த பாடலுக்கு மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

பப்ஜி மற்றும் சில பெயரிடப்படாத படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். நடனம் கார்த்தி மாஸ்டர்.

இயக்குனர் நவீன் முன்னதாக ‘படைத்தலைவி’ என்ற தலைப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக இயக்கிய குறும்படம் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத் தக்கது.

தீட்டு

Aadesh Bala Rathi starrer Theetu album

கேப்டன்’ வாழ்க்கை நமக்கு ஒரு முன்னுதாரணம்… – கார்த்தி இரங்கல்

கேப்டன்’ வாழ்க்கை நமக்கு ஒரு முன்னுதாரணம்… – கார்த்தி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் கார்த்தி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்..

‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அவரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு.

தான் முன்னெடுத்த எல்லா செயல்களிலும் / பொறுப்புகளையும் சிரமேற்கொண்டு வென்று காட்டியதில் ‘கேப்டனுக்கு’ நிகர் உண்டோ என்றே எண்ண தோன்றுகிறது.

நடிப்பு என்பதைத் தாண்டி சக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலுமே கேப்டனின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை, கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை ‘கேப்டன்’ அவர்களையே சாரும்.

அவரைப்பற்றி, உயர்ந்த, நல்ல சொற்களை மட்டுமே எவரும் மொழிந்து கேட்க முடியும். வெற்றிகளையும் புகழ் வார்த்தைகளையும் எப்போதும் பொருட்படுத்தாது எல்லாரையும் சமமாக பாவித்து, சிறந்த பண்பாளராக திகழ்ந்த ‘கேப்டன்’ அவர்களை நினையும் போது மிகப்பெரிய பெருமிதம் மட்டுமே இதயத்தில் நிற்கிறது.

வெள்ளி விழா கதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்க தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக, தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய ‘கேப்டன்’ அவர்களின் வாழ்க்கை, நம் எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம்.

‘கேப்டன்’ அவர்கள் மறைந்த இந்த தருணத்தில் முன்னின்று செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தும், நான் வெளிநாட்டில் இருப்பதினால், அவரின் மறைவுக்கு உடனே நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை , என்னை மிகவும் மனம் வருந்தச்செய்கிறது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்திற்காகப் பல நல்ல முன்னெடுப்பைச் செய்த அவரது மறைவு, நடிகர் சங்கத்திற்கும் தனித்த பேரிழப்பாகும்.

என்றும் உங்கள்,
கார்த்தி
– நடிகர்
– பொருளாளர், தென்னிந்திய நடிகர் சங்கம்

விஜயகாந்த்

Karthi condolences message for Vijayakanth demise

தமிழக முதல்வராக விஜயகாந்த்தை…..; பவர்ஸ்டார் பவன் கல்யாண் இரங்கல்

தமிழக முதல்வராக விஜயகாந்த்தை…..; பவர்ஸ்டார் பவன் கல்யாண் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தெலுங்கு நடிகரும் அரசியல் அரசியல் கட்சித் தலைவருமான பவர் ஸ்டார் பவர் கல்யாண் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்….

திரு. விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

குடும்பக் கதைகளுடன், சமூகக் அக்கறை கொண்ட ஆக்‌ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.

திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்.

(பவன் கல்யாண்)
தலைவர் – ஜனசேனா

Pawankalyans condolence message on the sudden demise of Vijayakanth

சினிமாவில் அரசியல் தெரியாதவர்.. அரசியலில் நடிக்க தெரியாதவர்.; விஜயகாந்துக்கு அருண் பாரதி இரங்கல்

சினிமாவில் அரசியல் தெரியாதவர்.. அரசியலில் நடிக்க தெரியாதவர்.; விஜயகாந்துக்கு அருண் பாரதி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பாடல் ஆசிரியர் அருண் பாரதி எழுதியுள்ள கவிதை இரங்கல்..

அஞ்சலி கவிதை
——————————-

மதுரை மாகாளிபட்டியிலிருந்து
மாநகரம் சென்னைக்கு வந்த
கருப்பு சூரியன்

அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போதே களத்தில் குதித்த
நெருப்பு சூரியன்

சினிமாவில்
அரசியல் செய்யத் தெரியாதவர்
அரசியலில்
சினிமாபோல நடிக்கத் தெரியாதவர்

கதாநாயகனாக தோன்றிய
முதல் படம் மட்டுமல்ல
இருட்டிலிருந்த பலரை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில்
இவர் ஓர் அகல்விளக்கு
வெளிச்சம் குறையாத பகல்விளக்கு

தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து
தர்மங்கள் செய்ததால்
இவர் ஏழை ஜாதி

அரிசி ஆலையில்
பணியாற்றியதாலோ என்னவோ
பலரின் பசியறிந்து பசிதீர்த்த
பாமர ஜோதி

புரட்சிக் கருத்துகளை
திரையில் விதைத்த
புரட்சித் தலைவரின்
இரண்டாம் பாதி

முத்தமிழ் அறிஞர்
கலைஞரை நேசித்து
அன்பு பாராட்டியதில்
இவர் நெஞ்சுக்கு நீதி

விஜயகாந்த் – இது
கடவுள் கொடுத்த கொடைக்கு
காலம் வைத்த பேரு

கோடான கோடி மக்களின்
நினைவுப் புத்தகத்தில்
இவர் எப்போதும்
நிரந்தர வரலாறு

-கவிஞர் அருண்பாரதி
திரைப்பட பாடலாசிரியர்

Lyricist Arunbhaarathi condolences demise of Captain Vijayakanth

More Articles
Follows