தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.
அவரது மனைவியாக ரோகினி நடிக்க, முக்கி வேடங்களில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் விஜய்சேதுபதி கேரக்டர் முதலில் விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாம். அவருக்கு பதிலாகதான் இவர் நடித்துள்ளாராம்.
நடிகர் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனியாகவே நடித்திருக்கிறார். குஷ்பு அரசியல்வாதியாகவும், அம்பிகா நீதிபதியாகவும் நடித்துள்ளனர்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விக்கி இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
எனவே படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி 3 தேதிகள் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாம்.
அதில் ஜுன் 22ந் தேதியை தேர்வு செய்து அதில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்தானே…
ம்ம்… மகன் பிறந்த நாளில் அப்பா ஹீரோவாக நடித்த படம் வெளியானால் இருவருக்கும் மகிழ்ச்சிதானே…
On Vijay Birthday SAC plans to release his Traffic Ramasamy movie