வாட்ஸ் அப் & பாலியல் தொல்லையால் தலைகுனிந்த தமிழகம். :- விஜய்

வாட்ஸ் அப் & பாலியல் தொல்லையால் தலைகுனிந்த தமிழகம். :- விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launchபாடலாசிரியரும் கவிஞருமான பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பா.விஜய் பேசியதாவது…

“இன்றைய சூழலில் படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் மிகவும் சவாலானது. அந்த சவாலை ஏற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களால் இன்று இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்களின் பிஆர்ஓ.க்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஹாசினி வழக்கு முதல் ஆசிபா வழக்கு வரை நாட்டில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை அப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டேன்.

குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு.

இந்தியாவிற்கு வரவே வெளிநாட்டினர் பயப்படுகிறார்கள். அந்தளவு சிறுமிகள் இங்கே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனைப் பார்த்தபடியே இருக்கிறார்கள்.

தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கு எல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆருத்ரா படத்தை சொல்லியுள்ளேன்.” என பேசினார்.

Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launch

AARUTHRA Press Meet Event Resized stills

கடவுளின் தேசத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த சூர்யா-கார்த்தி

கடவுளின் தேசத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Suriya and Karthi donate 25Lacs to Kerala CM Relief Fundகடவுளின் சொந்த தேசம் எனப்படும் கேரளாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் கேரளாவே வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது.

இதுவரை வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது.

கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.

எப்பொழுதும் சூர்யா கார்த்தி -க்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Actors Suriya and Karthi donate 25Lacs to Kerala CM Relief Fund

kerala flood

கழுகு-2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் திரு. குரல்

கழுகு-2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் திரு. குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Kazhugu 2 movie Krishnas next movie titled Thiru Kural‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’.

அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, நடனம் – ஸ்ரீ க்ரிஷ்.

இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

After Kazhugu 2 movie Krishnas next movie titled Thiru. Kural

பெண்களுக்கு சம உரிமை; பெரியார் சொன்னதை செய்தவர் கலைஞர் : – கார்த்தி

பெண்களுக்கு சம உரிமை; பெரியார் சொன்னதை செய்தவர் கலைஞர் : – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karthiமறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளரான கார்த்தி, இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்தி…

“முந்திய தலைமுறையில் இருந்த கடைசி மிகப்பெரிய ஜாம்பவான். அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம், நான் எதுவும் புதிதாக சொல்லிவிட முடியாது.

இட ஒதுக்கீட்டை அவர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், சின்னச் சின்ன ஊர்களில் இருந்து இவ்வளவு பேர் படித்து பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது.

அதேமாதிரி, பெண்களுக்கு சம உரிமை வாங்கிக் கொடுத்ததும் அவர்தான்.

பெரியார் சொன்ன பல விஷயங்களை, ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது கலைஞர் தான்.

அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். நிறைய முறை வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்பாவின் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுவார்.

நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து அவரிடம் ஆசி வாங்கச் சென்றபோது, புத்தகம் ஒன்றைக் கொடுத்தார்.

அவருடன் பழகும் எல்லோரையும் பர்சனலாகத் தெரிந்து வைத்திருந்து, ஒவ்வொரு முறை செல்லும்போதும் வீட்டில் உள்ள எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார்.

ஸ்டாலின் சாரையும் வீட்டில் சென்று பார்த்து வந்தேன்.

அவருடைய குடும்பத்தாருக்கும், திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sandakozhi 2விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது

தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilaruvi manianதமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கோடானுகோடித் தமிழர்களில் எளியனும் ஒருவன். அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும், கலை உலகிலும் அவர் அளித்த பங்களிப்பைப் புறந்தள்ளிவிட்டு எந்த மனிதராலும் தமிழக வரலாற்றை வரைந்துவிட முடியாது.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் ஒரே மையப்புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். ஓசூருக்குப் பக்கத்தில் தொரப்பள்ளி என்ற குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால், இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக உயர்ந்தவர் இராஜாஜி. சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த விருதுபட்டியில் பிறந்து, காங்கிரஸ் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட தமுக்கடித்தத் தொண்டராகத் திகழ்ந்து தன்னுடைய தன்னலமற்றத் தியாகத்தால், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மகத்தான தலைவராக உயர்ந்தவர் காமராஜர். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள திருக்குவளைக் கிராமத்தில் பிறந்து வலிமைமிக்க எந்தப் பின்புலமுமில்லாமல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துத் தன்னுடையக் காந்தச் சொற்களாலும், கடும் உழைப்பாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்து, 1996 முதல் இந்தியப் பிரதமர்களை உருவாக்குவதில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

பேசத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியாது. பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்து சோர்வறியாமல் உழைக்கும் உள்ளம் இருக்காது. அளப்பரிய பேச்சாற்றல், வியக்கத்தக்க எழுத்தாற்றல், சோர்வறியா கடும் உழைப்பு ஆகியவற்றின் பூரண வடிவமாகத் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அபூர்வமான தலைவர் கலைஞர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வாய் மலர்ந்த அண்ணாவின் வழியில், திறமையுள்ளவர்கள் தனக்கு எதிர் வரிசையில் நின்றாலும், அவர்களை அன்பால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கொண்ட கலைஞரைப்போல் வேறொருவரை இந்தப் பாழ்பட்ட அரசியலில் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.

எண்பது ஆண்டுகள் இடையறாத பொதுவாழ்வுப் பணி, அறுபதாண்டுகள் சட்டப்பேரவையில் சரித்திர சாதனை, ஐம்பதாண்டுகள் தி.மு. கழகத்தின் கட்டுமானம் கலைந்து விடாமல் காப்பாற்றியக் கட்சித் தலைமை, தேர்தல் காலங்களில் சூழலுக்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்திய நேர்த்தி, தமிழின்பால் கொண்ட தனிப் பெருங்காதல், பேனா முனையில் பிரசவித்த இலக்கிய மணம் கமழும் வசீகரமான வார்த்தைகளின் அணிவகுப்பு, சமூக நீதிக்காகவும் சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்.

மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இடம் ஒதுக்கிய தமிழக அரசு, கண்மூடும் வரை அண்ணாவைப் போற்றி வாழ்ந்த கலைஞருக்கு, அண்ணா கண்ணுறங்குமிடத்தில் இளைப்பாறுவதற்கு அனுமதி வழங்குவதுதான் முறையான செயல். அதைத் தமிழக அரசு செய்யத் தவறினாலும், நீதிமன்றம் செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

கலைஞர் நூறாண்டு கடந்தும், இந்த மண்ணில் மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றிட வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறாத நிலையில் கலங்கித் தவித்திடும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் என் ஆறுதல் வார்த்தைகளை வழங்குவதற்கு மேல் வேறென்ன என்னால் செய்ய இயலும்!

More Articles
Follows