ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரியில் ‘வானத்தை போல’ சின்ராசு

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரியில் ‘வானத்தை போல’ சின்ராசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thaman Kumarஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார்.

இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார்

ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார்..

“ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்..

அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.

அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன்.

ஆம்.. ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.. இன்னொரு பக்கம் சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நான் நடித்துவரும் வானத்தை போல சீரியல், நூறாவது எபிசோடை தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது.

பெரியவர்கள் முதல் சின்னக்குழந்தைகள் கூட, ‘சின்ராசு’வாக என்னை தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.

சினிமாவை எடுத்துகொண்டால் நான் நடித்துள்ள ‘கண்மணி பாப்பா’ ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து மாறுபட்டு வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய பிளாஸ்பேக் மற்றும் வித்தியாசமான கிளைமாக்ஸுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

குறிப்பாக கொடைக்காணல் பகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள பெரிய பங்களா ஒன்றில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.. பெரும்பாலான நாட்கள் அந்த பங்களாவிலேயே இரவில் தங்கினோம்.

ஆனால், அதுவே ஒரு பேய் பங்களா என்றும் சிலர் அங்கே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள் என்கிற விபரமும் சென்னை வந்த பின்னர் தான் தெரிந்தது..

மேலும் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்த சென்ற படக்குழுவினர் பலரும், தொடர்ந்து நடத்த முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர்..

ஆனால் எந்த சிக்கலும் இன்றி அந்த பேய் பங்களாவில் முதல்முறையாக முழு படப்பிடிப்பையும் முடித்து வந்தவர்கள் எங்கள் படக்குழுவினர் தான், அந்தப்படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அதேபோல யாழி படத்தின் கதையும் வித்தியாசமானது தான். கலாப காதலன் படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த அக்சயா தான் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

மேலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு அவர் மீண்டும் திரும்பி வருவதால் தன்னை வலுவாக நிலைநிறுத்தி கொள்ளும் விதமாக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களில் கண்மணி பாப்பா விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இவை தவிர இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். சினிமா மற்றும் சீரியலுக்கு என மாதத்தில் பாதிப்பாதி நாட்களை தனியாக பிரித்து கொடுத்து விடுவதால் கால்ஷீட்டில் எந்த சிக்கலும் வருவதில்லை.

அந்தவகையில் இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறேன்.

சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானதுதான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன்.. பக்கம் பக்கமான வசனங்களை உடனுக்குடன் மனப்பாடம் பண்ணி பேசவேண்டிய சவால் சீரியலில் உண்டு..

ஷூட்டிங்கின்போது அந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டாலும், எனக்கான டப்பிங்கை நானே பேசமுடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான்.. அந்த அளவுக்கு இரண்டு பக்கமும் பிசியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என்கிறார் தமன்குமார்..

மேலும் தனது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வு என அவர் கூறுவது தளபதி விஜய்யின் பாராட்டியதையும் அவர் வழங்கிய ஆலோசனைகளையும் தான்.

“சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் எனக்கு காலில் காயம்பட்டிருந்தது. அந்தசமயத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த விஜய் சார் என்னிடம் வந்து அக்கறையாக விசாரித்ததுடன் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறினார்.

அதுமட்டுமல்ல அந்த படம் ரிலீசானபோது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் சார், என்னை அழைத்து, எனது நடிப்பு பற்றி பாராட்டி பேசியதுடன், ஒரு நடிகனாக எப்படி முன்னோக்கி செல்லவேண்டும் என சில ஆலோசனைகளையும வழங்கி கிட்டத்தட்ட கால் மணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்..

அவர் கூறியவற்றை இப்போதுவரை பின்பற்றி வருகிறேன்” என்கிறார் தமன்குமார்.

Vaanathai Pola chinrasu talks about his upcoming projects

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் – உலக சுகாதார அமைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian covid 19 variant deltaகொரோனா தொற்றின் புதிய வகைகளை, கண்டறியப்படும் நாடுகளின் பெயரால் அவை அழைக்கப்படக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு.

2020 இறுதியில் உருமாறிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று உறுதியானது.

அக்டோபரில் இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

அதே போல அதன் புதிய திரிபும் கண்டறியப்பட்டது.

இதனை இந்திய வகை கொரோனா என அழைப்பதற்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட B.1.617.2 எனும் கொரோனா வேரியண்ட், இனி ‘டெல்டா’ (Delta) என அழைக்கப்படும்.

இந்தியாவில் கடந்த அக்டோபரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B.1.617.1 எனும் கொரோனா வகை இனி ‘கப்பா’ (Kappa) என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக 23 நாடுகள்/பிரதேசங்களிலும், அதிகாரப்பூர்வமற்றவகையில் மேலும் 7 பிரதேசங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

These are the new names for each of the COVID 19 variants:

• Kent / B.1.1.7 – Alpha
• South Africa / B.1.351 – Beta
• Brazil / P.1 – Gamma
• India / B.1.617.2 – Delta
• US / B.1.427 / B.1.429 – Epsilon
• Brazil / P.2 – Zeta
• B.1.525 – Eta
• Philippines / P.3 – Theta
• US / B.1.526 – Iota
• India / B.1.617.1 – Kappa

COVID-19 variants detected in India to be called ‘Delta’ and ‘Kappa’, says WHO

JUST IN நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

JUST IN நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithதமிழ் சினிமாவில் தல என்றால் அது நடிகர் அஜித் தான்.

இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bomb thread to actor Ajith house

சினிமாவுக்கு யூ-டேர்ன் போடும் சீமான்..? வைரலாகும் முறுக்கு மீசை போட்டோ

சினிமாவுக்கு யூ-டேர்ன் போடும் சீமான்..? வைரலாகும் முறுக்கு மீசை போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்றுவிட்டது.

எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க கிளம்பிட்டாரோ சீமான்? என சந்தேகம் எழுந்துள்ளது.

இதெற்கு காரணம் திடீரென ராஜா வேடத்தில் சீமான் இருப்பது போன்ற புகைப்படங்கள் தான்.

அந்த புகைப்படத்தில் முறுக்கு மீசையுடன் சீமான் உள்ளார். அவர் கையில் வாள் இருக்கிறது.

அதில் ஆக்ரோஷமான சீமானை பார்க்கலாம்

சீமான் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கும் படமான ’கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகம் வேடமாக இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது.

இந்த படத்தை வேலு பிரபாகரன் இயக்கவுள்ளார்.

இந்த புகைப்படத்தை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்..

NTK leader Seeman new getup goes viral

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..; கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சுனைனா உருக்கமான வீடியோ

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..; கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சுனைனா உருக்கமான வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sunainaவிஜய் நடித்த ’தெறி’, விஷால் நடித்த ‘சமர்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சுனைனா.

இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார்.

இந்த நடிகை இன்று ஒரு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சுனைனா கூறியிருப்பதாவது:

“பொதுவாக நான் யாருக்கும் உதவி கேட்டு வீடியோ வெளியிடுவதில்லை. ஆனால் இது ஒரு எமர்ஜென்சி.

எனக்கு தெரிந்த அபினேஷ் என்பவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது நிதி உதவி தேவைப்படுகிறது.

மேல்சிகிச்சைக்காக அவருக்கு தேவைப்படும் நிதியை தயவு செய்து அனைவரும் கொடுத்து உதவுங்கள்.

நானே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் அதன் வலி எனக்கு தெரியும்.

சிறிய தொகையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் உதவி செய்து காப்பாற்றுமாறு கேட்கிறேன்.

மேலும் இந்த வீடியோவை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து அவினாஷ்க்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சுனைனா தெரிவித்துள்ளார்.

சுனைனாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Actress Sunaina shared emotional video

பத்மா சேஷாத்ரி பாலியல் விவகாரம்..: விஷால் & காயத்ரி கருத்து மோதல்.; எந்த நடிகை ஓடினார்? என நந்தா கேள்வி

பத்மா சேஷாத்ரி பாலியல் விவகாரம்..: விஷால் & காயத்ரி கருத்து மோதல்.; எந்த நடிகை ஓடினார்? என நந்தா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal gayathri raguramதமிழகத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் 3 மாணவிகள் அதே ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.

இதனிடையில் இது குறித்து சமீபத்தில் நடிகர் விஷால் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதில் … “இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்றார்.

விஷாலின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தன் சமூக வலைத்தளத்தில்…

’சினிமாவில் நுழையும் பல நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, குறிப்பாக நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியுள்ளீர்கள், உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார். பல நடிகைகள் உங்களிடம் இருந்து ஓடி இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

காயத்ரியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா அவரின் கருத்தை தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார் நந்தா.

’முடிந்தது முடிந்ததுதான், அந்த பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க விரும்ப மாட்டேன்’ என காயத்ரி இதற்கு பதிலளித்துள்ளார்

Actor nandha reply to Actress Gayathri Raghuram

More Articles
Follows