தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி முதல் விஜய், அஜித் வரை எல்லா படங்களையும் கலாய்த்து தமிழ்ப்படம் 2.0 படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.
அதில் சினிமாவை மட்டுமே கலாய்த்து இருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்ல் கோமாளி என்ற பாடலில் இந்திய நாட்டில் தற்போது நடந்து வருகின்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்துள்ளனர்.
எனவே அந்த படக்குழுவினர் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளது.
இந்த பாடல் குறித்து விவரம் வருமாறு…
மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார்.
பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
Komaali 2nd Single Track from Traffic Ramasamy made an issue