தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனி ஒருவன் நினைத்தால் எதையும் தைரியமாக எதிர்த்து போராடலாம் என வாழ்ந்து காட்டி வருபவர் 80 வயது இளைஞர் டிராபிக் ராமசாமி.
அண்மையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கலங்கடித்தவர் இவர்.
பெரும் அரசியல் போராட்டங்கள் நிறைந்த இவரின் வாழ்க்கையை டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றனர்.
விக்கி என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார்.
இவருடன் விஜய்சேதுபதி, ரோஹினி, சீமான், பிரகாஷ் ராஜ், குஷ்பு, விஜய் ஆண்டனி, எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா செய்தியாளர்களிடம் பேசும்போது…
இந்த படத்தின் க்ளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தன் அரசியல் வாரிசாக விஜய்யை கை காட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியல் விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்திக்கொள்வதாக் குற்றம்சாட்டினார்.
ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை நிஜ டிராபிக் ராமசாமியும் படக்குழுவினரும் மறுத்துள்ளனர்.
Actor Vijay connected with Traffic Ramasamy life history